< دوم تواریخ 5 >
وقتی کارهای خانهٔ خداوند تمام شد، سلیمان، طلا و نقره و تمام ظرفهایی را که پدرش داوود وقف خانهٔ خدا کرده بود به خزانهٔ خانهٔ خدا آورد. | 1 |
௧யெகோவாவுடைய ஆலயத்திற்காக சாலொமோன் செய்த வேலைகள் அனைத்தும் முடிந்தபோது, சாலொமோன் தன் தகப்பனாகிய தாவீது பரிசுத்தம் செய்வதற்காக பொருத்தனை செய்தவைகளைக் கொண்டுவந்து, வெள்ளியையும், பொன்னையும், அனைத்து பணிமுட்டுகளையும், தேவனுடைய ஆலயத்தின் பொக்கிஷங்களில் வைத்தான்.
آنگاه سلیمان پادشاه، تمام سران قبایل و طوایف قوم اسرائیل را به اورشلیم دعوت کرد تا صندوق عهد خداوند را که در صهیون، شهر داوود بود به خانهٔ خدا بیاورند. | 2 |
௨பின்பு யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரப் பிரபுக்களாகிய இஸ்ரவேல் புத்திரரின் வம்சத் தலைவர்கள் எல்லோரையும் எருசலேமிலே கூடிவரச்செய்தான்.
همهٔ آنها در روزهای عید خیمهها در ماه هفتم در اورشلیم جمع شدند. | 3 |
௩அப்படியே இஸ்ரவேலர்கள் எல்லோரும் ஏழாம் மாதத்தின் பண்டிகையிலே ராஜாவினிடத்தில் கூடிவந்தார்கள்.
آنگاه کاهنان و لاویان صندوق عهد و خیمهٔ ملاقات را با تمام ظروف مقدّسی که در آن بود، به خانهٔ خدا آوردند. | 4 |
௪இஸ்ரவேலின் மூப்பர்கள் எல்லோரும் வந்தபின்பு லேவியர்கள் பெட்டியை எடுத்து,
௫பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருக்கிற பரிசுத்த பணிமுட்டுகளையும் கொண்டுவந்தார்கள்; அவைகளைக் கொண்டுவந்தவர்கள் லேவியரான ஆசாரியர்களே.
آنگاه سلیمان پادشاه و تمام بنیاسرائیل در برابر صندوق عهد خداوند جمع شدند و آنقدر گاو و گوسفند قربانی کردند که نمیشد حساب کرد! | 6 |
௬ராஜாவாகிய சாலொமோனும், அவனோடு கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள்.
سپس کاهنان، صندوق عهد را به درون قدسالاقداس خانهٔ خداوند بردند و آن را زیر بالهای مجسمهٔ کروبیان قرار دادند. | 7 |
௭அப்படியே ஆசாரியர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய இறக்கைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.
مجسمهٔ کروبیان طوری ساخته شده بود که بالهایشان روی صندوق عهد خداوند و روی چوبهای حامل صندوق پهن میشد و آن را میپوشاند. | 8 |
௮கேருபீன்கள், பெட்டி இருக்கும் இடத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு சிறகுகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது.
چوبهای حامل آنقدر دراز بودند که از داخل اتاق دوم یعنی قدس دیده میشدند، اما از حیاط دیده نمیشدند. (این چوبها هنوز هم در آنجا هستند.) | 9 |
௯பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாக அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; வெளியே அவைகள் காணப்படவில்லை; அது இந்த நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
در صندوق عهد چیزی جز دو لوح سنگی نبود. وقتی خداوند با قوم خود، پس از بیرون آمدن از مصر، در کوه حوریب عهد و پیمان بست، موسی آن دو لوح را در صندوق عهد گذاشت. | 10 |
௧0இஸ்ரவேல் வம்சத்தினர் எகிப்திலிருந்து புறப்பட்ட பின்பு, யெகோவா ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை செய்தபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர வேறொன்றும் அதிலே இருந்ததில்லை.
در آن روز، تمام کاهنان بدون توجه به نوبت خدمتشان، خود را تقدیس کردند. هنگامی که کاهنان از قدس بیرون میآمدند | 11 |
௧௧வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர்கள் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம் செய்துகொண்டார்கள்.
دستهٔ سرایندگان لاوی به خواندن سرود پرداختند. سرایندگان عبارت بودند از: آساف، هیمان، یِدوتون و تمام پسران و برادران ایشان که لباس کتان بر تن داشتند و در سمت شرقی مذبح ایستاده بودند. صد و بیست نفر از کاهنان با نوای شیپور، و لاویان با سنج، عود و بربط، دستهٔ سرایندگان را همراهی میکردند. | 12 |
௧௨ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய மகன்களும் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகர்களான லேவியர்கள் அனைவரும் மெல்லிய புடவைகளை அணிந்து, கைத்தாளங்களையும் தம்புருக்களையும் சுரமண்டலங்களையும் பிடித்து பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடு பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
دستهٔ سرایندگان به همراهی نوازندگان شیپور، سنج و سازهای دیگر، خداوند را حمد و سپاس میگفتند. سرودی که میخواندند این بود: «خداوند نیکوست و محبتش بیپایان!» در همان وقت، ناگهان ابری خانهٔ خداوند را پوشاند و حضور پرجلال خداوند آن مکان را فرا گرفت، به طوری که کاهنان نتوانستند به خدمت خود ادامه دهند. | 13 |
௧௩அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஒரேசத்தமாக யெகோவாவை துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படும்போதும், பாடகர்கள் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தை தொனிக்கச்செய்து, யெகோவா நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கும்போதும், யெகோவாவுடைய வீடாகிய தேவாலயம் மேகத்தால் நிரப்பப்பட்டது.
௧௪அந்த மேகத்தால் ஆசாரியர்கள் ஊழியம்செய்து நிற்கமுடியாமற்போனது; யெகோவாவுடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பினது.