< مزامیر 101 >
مزمور داود رحمت و انصاف را خواهم سرایید. نزد توای خداوند، تسبیح خواهم خواند. | ۱ 1 |
தாவீதின் சங்கீதம். யெகோவாவே, நான் உமது அன்பையும் நீதியையும் குறித்துப் பாடுவேன்; உமக்கே நான் துதி பாடுவேன்.
در طریق کامل به خردمندی رفتارخواهم نمود. نزد من کی خواهی آمد؟ در خانه خود با دل سلیم سالک خواهم شد. | ۲ 2 |
நான் குற்றமற்ற வாழ்க்கையை வாழ கவனமாயிருப்பேன்; நீர் எப்பொழுது என்னிடத்தில் வருவீர்? நான் குற்றமற்ற இருதயத்துடன் என் வீட்டின் விவகாரங்களை நடத்துவேன்.
چیزی بد راپیش نظر خود نخواهم گذاشت. کار کج روان رامکروه میدارم، به من نخواهد چسبید. | ۳ 3 |
தீங்கான செயல்களை நான் என் கண்முன் வைக்கமாட்டேன். உண்மையற்ற மனிதரின் செயல்களை நான் வெறுக்கிறேன்; அவைகள் என்னைப் பற்றிக்கொள்ளாது.
دل کج ازمن دور خواهد شد. شخص شریر را نخواهم شناخت. | ۴ 4 |
வஞ்சக இருதயமுடைய மனிதரை என்னைவிட்டுத் தூரமாய் விலக்கிவைப்பேன்; நான் தீமையோடு எவ்வித தொடர்பும் வைக்கமாட்டேன்.
کسی را که در خفیه به همسایه خودغیبتگوید، هلاک خواهم کرد. کسی را که چشم بلند و دل متکبر دارد تحمل نخواهم کرد. | ۵ 5 |
தன் அயலாரை இரகசியமாய் அவதூறு செய்கிற மனிதரை நான் தண்டிப்பேன்; கர்வமான கண்களையும் பெருமையான இருதயத்தையும் கொண்ட மனிதரை நான் சகிக்கமாட்டேன்.
چشمانم بر امنای زمین است تا بامن ساکن شوند. کسیکه به طریق کامل سالک باشد خادم من خواهد بود. | ۶ 6 |
நாட்டில் உண்மையுள்ளவர்களாய் இருப்போர்மீது என் கண்கள் இருக்கும், அவர்கள் என்னோடு வாழ்வார்கள்; குற்றமற்றவனாய் நடப்பவர்களே எனக்கு ஊழியம் செய்வார்கள்.
حیله گر در خانه من ساکن نخواهدشد. دروغ گو پیش نظر من نخواهد ماند. | ۷ 7 |
வஞ்சனை செய்யும் யாரும் என் வீட்டில் வாழமாட்டார்கள்; பொய்ப் பேசுபவர் யாரும் என் சமுகத்தில் நிற்கவுமாட்டார்கள்.
همه شریران زمین را صبحگاهان هلاک خواهم کرد. تاجمیع بدکاران را از شهر خداوند منقطع سازم. | ۸ 8 |
நான் நாட்டிலுள்ள கொடியவர்கள் எல்லோரையும் காலைதோறும் தண்டிப்பேன்; தீங்குசெய்யும் ஒவ்வொருவரையும் யெகோவாவினுடைய நகரத்திலிருந்து அகற்றிவிடுவேன்.