< امثال 9 >

حکمت، خانه خود را بنا کرده، و هفت ستونهای خویش را تراشیده است. ۱ 1
ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து,
ذبایح خود را ذبح نموده و شراب خود را ممزوج ساخته و سفره خود را نیز آراسته است. ۲ 2
தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி,
کنیزان خود را فرستاده، ندا کرده است، بر پشتهای بلندشهر. ۳ 3
தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
هر‌که جاهل باشد به اینجا بیاید، و هر‌که ناقص العقل است او را می‌گوید. ۴ 4
புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும்.
بیایید از غذای من بخورید، و از شرابی که ممزوج ساخته‌ام بنوشید. ۵ 5
நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள்.
جهالت را ترک کرده، زنده بمانید، و به طریق فهم سلوک نمایید. ۶ 6
பேதமையைவிட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது.
هر‌که استهزاکننده راتادیب نماید، برای خویشتن رسوایی را تحصیل کند، و هر‌که شریر را تنبیه نماید برای او عیب می‌باشد. ۷ 7
பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.
استهزاکننده را تنبیه منما مبادا از تونفرت کند، اما مرد حکیم را تنبیه نما که تو رادوست خواهد داشت. ۸ 8
பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.
مرد حکیم را پند ده که زیاده حکیم خواهد شد. مرد عادل را تعلیم ده که علمش خواهد افزود. ۹ 9
ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் செய், அவன் அறிவில் விருத்தியடைவான்.
ابتدای حکمت ترس خداوند است، و معرفت قدوس فطانت می‌باشد. ۱۰ 10
௧0யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.
زیرا که به واسطه من روزهای تو کثیر خواهدشد، و سالهای عمر از برایت زیاده خواهدگردید. ۱۱ 11
௧௧என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.
اگر حکیم هستی، برای خویشتن حکیم هستی. و اگر استهزا نمایی به تنهایی متحمل آن خواهی بود. ۱۲ 12
௧௨நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
زن احمق یاوه‌گو است، جاهل است و هیچ نمی داند، ۱۳ 13
௧௩மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.
و نزد در خانه خود می‌نشیند، درمکانهای بلند شهر بر کرسی، ۱۴ 14
௧௪அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,
تا راه روندگان رابخواند، و آنانی را که به راههای خود براستی می‌روند. ۱۵ 15
௧௫தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து:
هر‌که جاهل باشد به اینجا برگردد، وبه ناقص العقل می‌گوید: ۱۶ 16
௧௬எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும்,
«آبهای دزدیده شده شیرین است، و نان خفیه لذیذ می‌باشد.» ۱۷ 17
௧௭மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
و اونمی داند که مردگان در آنجا هستند، ودعوت‌شدگانش در عمقهای هاویه می‌باشند. (Sheol h7585) ۱۸ 18
௧௮இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol h7585)

< امثال 9 >