< میکا 4 >
و در ایام آخر، کوه خانه خداوند بر قله کوها ثابت خواهد شد و بر فوق تلهابرافراشته خواهد گردید و قومها بر آن روان خواهند شد. | ۱ 1 |
௧ஆனாலும், வரும் நாட்களில் யெகோவாவுடைய ஆலயமாகிய மலை, மலைகளின் உச்சியில் நிறுவப்பட்டு, மலைகளுக்கு மேலாக உயர்த்தப்பட்டிருக்கும், எல்லா மக்களும் அதினிடத்திற்கு ஓடிவருவார்கள்.
و امت های بسیار عزیمت کرده، خواهند گفت: بیایید تا به کوه خداوند و به خانه خدای یعقوب برآییم تا طریق های خویش را به ما تعلیم دهد و به راههای وی سلوک نماییم زیراکه شریعت از صهیون و کلام خداوند از اورشلیم صادر خواهد شد. | ۲ 2 |
௨திரளான மக்கள் புறப்பட்டு வந்து: நாம் யெகோவாவின் மலைக்கும், யாக்கோபின் தேவனுடைய ஆலயத்திற்கும் போவோம் வாருங்கள்; அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவருடைய பாதைகளில் நடப்போம் என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து வேதமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வசனமும் வெளிப்படும்.
و او در میان قوم های بسیارداوری خواهد نمود و امت های عظیم را از جای دور تنبیه خواهد کرد و ایشان شمشیرهای خودرا برای گاوآهن و نیزه های خویش را برای اره هاخواهند شکست و امتی بر امتی شمشیر نخواهدکشید و بار دیگر جنگ را نخواهند آموخت. | ۳ 3 |
௩அவர் திரளான மக்களுக்குள் நியாயம் தீர்த்து, தூரத்திலுள்ள பலம்மிகுந்த தேசங்களைக் கடிந்துகொள்ளுவார்; அப்பொழுது அவர்கள் தங்களுடைய பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஒரு தேசத்திற்கு விரோதமாக இன்னொரு தேசம் பட்டயம் எடுப்பதில்லை; இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.
وهر کس زیر مو خود و زیر انجیر خویش خواهدنشست و ترسانندهای نخواهد بود زیرا که دهان یهوه صبایوت تکلم نموده است. | ۴ 4 |
௪அவனவன் தன்தன் திராட்சைச்செடியின் நிழலிலும், தன்தன் அத்திமரத்தின் நிழலிலும் பயப்படுத்துபவர்கள் இல்லாமல் உட்காருவான்; சேனைகளுடைய யெகோவாவின் வாய் இதைச் சொல்லிற்று.
زیرا که جمیع قومها هر کدام به اسم خدای خویش سلوک مینمایند اما ما به اسم یهوه خدای خود تاابدالاباد سلوک خواهیم نمود. | ۵ 5 |
௫சகல மக்களும் தங்கள் தங்கள் தேவனுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு நடப்பார்கள்; நாங்களும் எங்கள் தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தைப் பற்றிக்கொண்டு என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் நடப்போம்.
خداوند میگوید که در آن روز لنگان راجمع خواهم کرد و رانده شدگان و آنانی را که مبتلا ساختهام فراهم خواهم آورد. | ۶ 6 |
௬யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: அந்நாளிலே நான் நொண்டியானவளைச் சேர்த்து, தள்ளப்பட்டவளையும் தீங்கு அனுபவித்தவளையும் கூட்டிக்கொண்டு,
و لنگان رابقیتی و دور شدگان را قوم قوی خواهم ساخت وخداوند در کوه صهیون برایشان از الان تا ابدالابادسلطنت خواهند نمود. | ۷ 7 |
௭நொண்டியானவளை மீதியான மக்களாகவும், தூரமாகத் தள்ளப்பட்டுப்போனவளைப் பலத்த மக்களாகவும் வைப்பேன்; அவர்கள்பேரில் யெகோவா சீயோன் மலையிலே இதுமுதல் என்றென்றைக்கும் ராஜாவாக இருப்பார்.
و توای برج گله وای کوه دختر صهیون این به تو خواهد رسید وسلطنت اول یعنی مملکت دختر اورشلیم خواهدآمد. | ۸ 8 |
௮மந்தையின் காவற்கோபுரமே, மகளாகிய சீயோனின் பாதுகாப்பே, முந்தின ஆளுகை உன்னிடத்தில் வரும்; ராஜரிகம் மகளாகிய எருசலேமிடம் வரும்.
الان چرا فریاد برمی آوری؟ آیا در توپادشاهی نیست و آیا مشیر تو نابود شده است که درد تو را مثل زنی که میزاید گرفته است؟ | ۹ 9 |
௯இப்போதும் நீ ஏன் சத்தமிட்டு கதறவேண்டும்? ராஜாவானவர் உன்னிடத்தில் இல்லையோ? உன் ஆலோசனைக்காரர்கள் அழிந்துபோனார்களோ? பிரசவிக்கிற பெண்ணுக்கு உண்டாகிற வேதனை உனக்கு உண்டாகும்.
ای دختر صهیون مثل زنی که میزاید درد زه کشیده، وضع حمل نما زیرا که الان از شهر بیرون رفته، درصحرا خواهی نشست و به بابل رفته، در آنجارهایی خواهی یافت و در آنجا خداوند تو را ازدست دشمنانت رهایی خواهد داد. | ۱۰ 10 |
௧0மகளாகிய சீயோனே, பிரசவிக்கிற பெண்ணைப்போல பிரசவ வேதனைப்படு; நீ இப்போது நகரத்திலிருந்து புறப்பட்டு, வெளிகளில் தங்கி, பாபிலோன் வரைக்கும் போவாய், அங்கே விடுவிக்கப்படுவாய்; அங்கே யெகோவா உன்னை உன் எதிரிகளின் கைக்கு நீங்கலாக்கி மீட்பார்.
و الان امت های بسیار بر تو جمع شده، میگویند که صهیون نجس خواهد شد و چشمان ما بر او خواهد نگریست. | ۱۱ 11 |
௧௧சீயோன் தீட்டுப்படுவாளாக, எங்கள் கண் அவளைக் காண்பதாக என்று சொல்லி, அநேக தேசத்தார் உனக்கு விரோதமாகக் கூடியிருக்கிறார்கள்.
اما ایشان تدبیرات خداوندرا نمی دانند و مشورت او را نمی فهمند زیرا که ایشان را مثل بافهها در خرمنگاه جمع کرده است. | ۱۲ 12 |
௧௨ஆனாலும் அவர்கள் யெகோவாவுடைய நினைவுகளை அறியாமலும், அவருடைய யோசனையை உணராமலும் இருக்கிறார்கள்; அவர் அரிக்கட்டுகளைப்போல அவர்களைக் களத்திலே சேர்ப்பார்.
ای دختر صهیون برخیز و پایمال کن زیرا که شاخ تو را آهن خواهم ساخت و سمهای تو رابرنج خواهم نمود و قوم های بسیار را خواهی کوبید و حاصل ایشان را برای یهوه و دولت ایشان را برای خداوند تمامی زمین وقف خواهی نمود. | ۱۳ 13 |
௧௩மகளாகிய சீயோனே, நீ எழுந்து போரடி; நான் உன் கொம்புகளை இரும்பும், உன் குளம்புகளை வெண்கலமுமாக்குவேன்; நீ அநேக மக்களை நொறுக்கிப்போடுவாய்; அவர்கள் தேடிச் சேர்த்ததை நீ கர்த்தருக்கென்றும், அவர்களுடைய சொத்துக்களை முழு பூமிக்கும் ஆண்டவராக இருக்கிறவருக்கென்றும் நியமிப்பாய்.