< داوران 12 >
و مردان افرایم جمع شده، به طرف شمال گذشتند، و به یفتاح گفتند: «چرابرای جنگ کردنت با بنی عمون رفتی و ما رانطلبیدی تا همراه تو بیاییم؟ پس خانه تو را بر سرتو خواهیم سوزانید.» | ۱ 1 |
௧எப்பிராயீம் மனிதர்கள் ஒன்றாகக் கூடி யோர்தான் நதியை கடந்து வடக்கே உள்ள சாபோன் ஊருக்குப் போய், யெப்தாவை நோக்கி: நீ எங்களை உன்னோடு வரும்படி அழைக்காமல் அம்மோனியர்கள்மேல் யுத்தம்செய்யப்போனதென்ன? உன்னுடைய வீட்டையும் உன்னையும் அக்கினியால் சுட்டுப்போடுவோம் என்றார்கள்.
و یفتاح به ایشان گفت: «مرا و قوم مرا با بنی عمون جنگ سخت میبود، وچون شما را خواندم مرا از دست ایشان رهایی ندادید. | ۲ 2 |
௨அதற்கு யெப்தா: எனக்கும் என்னுடைய மக்களுக்கும் அம்மோனியர்களோடு பெரிய வழக்கு இருக்கும்போது, நான் உங்களைக் கூப்பிட்டேன்; நீங்கள் என்னை அவர்கள் கைக்கு விலக்கி காப்பாற்றவில்லை.
پس چون دیدم که شما مرا رهایی نمی دهید جان خود را بهدست خود گرفته، به سوی بنی عمون رفتم و خداوند ایشان را بهدست من تسلیم نمود، پس چرا امروز نزد من برآمدید تابا من جنگ نمایید؟» | ۳ 3 |
௩நீங்கள் என்னை காப்பாற்றவில்லை என்று நான் பார்த்தபோது, நான் என்னுடைய ஜீவனை என்னுடைய கையிலே பிடித்துக்கொண்டு, அம்மோன் மக்களுக்கு எதிராகப்போனேன்; யெகோவா அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுத்தார்; இப்படியிருக்க, நீங்கள் என்மேல் யுத்தம்செய்ய, இன்று என்னிடத்திற்கு வரவேண்டியது என்ன என்று சொன்னான்.
پس یفتاح تمامی مردان جلعاد را جمع کرده، با افرایم جنگ نمود و مردان جلعاد افرایم را شکست دادند، چونکه گفته بودندای اهل جلعاد شما فراریان افرایم در میان افرایم و در میان منسی هستید. | ۴ 4 |
௪பின்பு யெப்தா கீலேயாத் மனிதர்களையெல்லாம் கூட்டி, எப்பிராயீமர்களோடு யுத்தம்செய்தான்; எப்பிராயீமுக்கும் மனாசேக்கும் நடுவே குடியிருக்கிற கீலேயாத்தியர்களான நீங்கள் எப்பிராயீமைவிட்டு ஓடிப்போனவர்கள் என்று எப்பிராயீமர்கள் சொன்னபடியினால், கீலேயாத் மனிதர்கள் அவர்களை முறியடித்தார்கள்.
و اهل جلعاد معبرهای اردن را پیش روی افرایم گرفتند و واقع شد که چون یکی از گریزندگان افرایم میگفت: «بگذارید عبور نمایم.» اهل جلعاد میگفتند: «آیاتو افرایمی هستی؟» و اگر میگفت نی، | ۵ 5 |
௫கீலேயாத்தியர்கள் எப்பிராயீமர்களை முந்தி யோர்தானின் துறைமுகங்களைப் பிடித்தார்கள்; அப்பொழுது எப்பிராயீமர்களிலே தப்பினவர்களில் யாராவது வந்து: நான் அக்கரைக்குப் போகட்டும் என்று சொல்லும்போது, கீலேயாத் மனிதர்கள்: நீ எப்பிராயீமனா என்று அவனைக் கேட்பார்கள்; அவன் அல்ல என்றால்,
پس او رامی گفتند: بگو شبولت، و او میگفت سبولت، چونکه نمی توانست به درستی تلفظ نماید، پس او را گرفته، نزد معبرهای اردن میکشتند، و در آن وقت چهل و دو هزار نفر از افرایم کشته شدند. | ۶ 6 |
௬நீ ஷிபோலேத் என்று சொல் என்பார்கள்; அப்பொழுது அவன் அப்படி உச்சரிக்க முடியாமல், சிபோலேத் என்பான்; அப்பொழுது அவனைப் பிடித்து, யோர்தான் துறைமுகத்திலே வெட்டிப்போடுவார்கள்; அக்காலத்திலே எப்பிராயீமில் 42,000 பேர் இறந்தார்கள்.
و یفتاح بر اسرائیل شش سال داوری نمود. پس یفتاح جلعادی وفات یافته، در یکی ازشهرهای جلعاد دفن شد. | ۷ 7 |
௭யெப்தா இஸ்ரவேலை ஆறு வருடங்கள் நியாயம் விசாரித்தான்; பின்பு கீலேயாத்தியனான யெப்தா இறந்து, கீலேயாத்திலுள்ள ஒரு பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
و بعد از او ابصان بیت لحمی بر اسرائیل داوری نمود. | ۸ 8 |
௮அவனுக்குப்பின்பு பெத்லெகேம் ஊரானாகிய இப்சான் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
و او را سی پسر بود و سی دختر که بیرون فرستاده بود و از بیرون سی دختر برای پسران خود آورد و هفت سال بر اسرائیل داوری نمود. | ۹ 9 |
௯அவனுக்கு 30 மகன்களும் 30 மகள்களும் இருந்தார்கள்; 30 மகள்களையும் வேறு இனத்திலே திருமணம் செய்துகொடுத்து, தன்னுடைய மகன்களுக்கு 30 பெண்களை வேறு இனத்திலிருந்து எடுத்தான்; அவன் இஸ்ரவேலை ஏழு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
و ابصان مرد و در بیت لحم دفن شد. | ۱۰ 10 |
௧0பின்பு இப்சான் இறந்து, பெத்லெகேமிலே அடக்கம் செய்யப்பட்டான்.
وبعد از او ایلون زبولونی بر اسرائیل داوری نمود وداوری او بر اسرائیل ده سال بود. | ۱۱ 11 |
௧௧அவனுக்குப் பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்; அவன் பத்து வருடங்கள் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
و ایلون زبولونی مرد و در ایلون در زمین زبولون دفن شد. | ۱۲ 12 |
௧௨பின்பு செபுலோனியனாகிய ஏலோன் இறந்து, செபுலோன் தேசமான ஆயலோன் ஊரில் அடக்கம் செய்யப்பட்டான்.
و بعد از او عبدون بن هلیل فرعتونی براسرائیل داوری نمود. | ۱۳ 13 |
௧௩அவனுக்குப்பின்பு இல்லேலின் மகனான பிரத்தோனியனான அப்தோன் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
و او را چهل پسر و سی نواده بود، که بر هفتاد کره الاغ سوار میشدند وهشت سال بر اسرائیل داوری نمود. | ۱۴ 14 |
௧௪அவனுக்கு 40 மகன்களும் 30 பேரப்பிள்ளைகளும் இருந்தார்கள்; அவர்கள் 70 கழுதைகளின்மேல் ஏறுவார்கள்; அவன் இஸ்ரவேலை எட்டு வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
و عبدون بن هلیل فرعتونی مرد و در فرعتون در زمین افرایم در کوهستان عمالیقیان دفن شد. | ۱۵ 15 |
௧௫பின்பு பிரத்தோனியனான இல்லேலின் மகனான அப்தோன் இறந்து, எப்பிராயீம் தேசத்தில் அமலேக்கியர் மலையிலிருக்கிற பிரத்தோனிலே அடக்கம் செய்யப்பட்டான்.