< ایّوب 33 >
«لیکنای ایوب، سخنان مرا استماع نما. و به تمامی کلام من گوش بگیر. | ۱ 1 |
௧“யோபே, என் நியாயங்களைக் கேளும்; என் வார்த்தைகளுக்கெல்லாம் செவிகொடும்.
اینک الان دهان خود را گشودم، و زبانم در کامم متکلم شد. | ۲ 2 |
௨இதோ, என் வாயை இப்போது திறந்தேன்; என் வாயிலிருக்கிற என் நாவானது பேசும்.
کلام من موافق راستی قلبم خواهدبود. و لبهایم به معرفت خالص تنطق خواهدنمود. | ۳ 3 |
௩என் வார்த்தைகள் என் இருதயத்தின் உண்மைக்கு ஒத்திருக்கும்; நான் அறிந்ததை என் உதடுகள் சுத்தமாக பேசும்.
روح خدا مرا آفریده، و نفخه قادرمطلق مرا زنده ساخته است. | ۴ 4 |
௪தேவனுடைய ஆவியானவர் என்னை உண்டாக்கினார்; சர்வவல்லவருடைய சுவாசம் எனக்கு உயிர்கொடுத்தது.
اگر میتوانی مرا جواب ده، و پیش روی من، کلام را ترتیب داده بایست. | ۵ 5 |
௫உம்மால் முடிந்தால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு முன்பாக நில்லும்.
اینک من مثل تو از خدا هستم. و من نیز از گل سرشته شدهام. | ۶ 6 |
௬இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
اینک هیبت من تو را نخواهدترسانید، و وقار من بر تو سنگین نخواهد شد. | ۷ 7 |
௭இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்காது.
«یقین در گوش من سخن گفتی و آواز کلام تو را شنیدم | ۸ 8 |
௮நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும், நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
که گفتی من زکی و بیتقصیر هستم. من پاک هستم و در من گناهی نیست. | ۹ 9 |
௯நான் மீறுதல் இல்லாத சுத்தமுள்ளவன், நான் குற்றமற்றவன், என்னில் பாவமில்லை.
اینک او علتها برمن میجوید. و مرا دشمن خودمی شمارد. | ۱۰ 10 |
௧0இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார், என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார்.
پایهایم را در کنده میگذارد و همه راههایم را مراقبت مینماید. | ۱۱ 11 |
௧௧அவர் என் கால்களைத் தொழுவத்திலே அடைத்து, என் நடைகளையெல்லாம் காவல் வைக்கிறார் என்று சொன்னீர்.
هان در این امر توصادق نیستی. من تو را جواب میدهم، زیرا خدااز انسان بزرگتر است. | ۱۲ 12 |
௧௨இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்கு மறுமொழியாகச் சொல்லுகிறேன்; மனிதனைவிட தேவன் பெரியவராயிருக்கிறார்.
چرا با او معارضه مینمایی، از این جهت که از همه اعمال خوداطلاع نمی دهد؟ | ۱۳ 13 |
௧௩அவர் தம்முடைய செயல்கள் எல்லாவற்றையும் குறித்துக் பதில் சொல்லவில்லையென்று நீர் அவருடன் ஏன் வழக்காடுகிறீர்?
زیرا خدا یک دفعه تکلم میکند، بلکه دو دفعه و انسان ملاحظه نمی نماید. | ۱۴ 14 |
௧௪தேவன் ஒரு முறை சொல்லியிருக்கிற காரியத்தை இரண்டாம் முறை பார்த்து மாற்றுகிறவரல்லவே.
در خواب، در رویای شب، چون خواب سنگین بر انسان مستولی میشود، حینی که دربستر خود در خواب میباشد. | ۱۵ 15 |
௧௫ஆழ்ந்த தூக்கம் மனிதர்மேல் இறங்கி, அவர்கள் படுக்கையின்மேல் படுத்திருக்கும்போது,
آنگاه گوشهای انسان را میگشاید و تادیب ایشان را ختم میسازد. | ۱۶ 16 |
௧௬அவர் இரவு நேரத்துத் தரிசனமான சொப்பனத்திலே மனிதருடைய காதுகளுக்குத் தாம் செய்யும் காரியத்தை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வரும் தண்டனையினாலே பயமுறுத்தி,
تا انسان را از اعمالش برگرداند وتکبر را از مردمان بپوشاند. | ۱۷ 17 |
௧௭மனிதன் தன்னுடைய செயலைவிட்டு நீங்கவும், மனிதருடைய பெருமை அடங்கவும் செய்கிறார்.
جان او را از حفره نگاه میدارد و حیات او را از هلاکت شمشیر. | ۱۸ 18 |
௧௮இவ்விதமாக அவனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கும், அவன் உயிரைப் பட்டய வெட்டுக்கும் தப்புவிக்கிறார்.
بادرد در بستر خود سرزنش مییابد، و اضطراب دایمی در استخوانهای وی است. | ۱۹ 19 |
௧௯அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் எல்லா எலும்புகளிலும் கடுமையான வியாதியினாலும் தண்டிக்கப்படுகிறான்.
پس جان اونان را مکروه میدارد و نفس او خوراک لطیف را. | ۲۰ 20 |
௨0அவன் உயிர் அப்பத்தையும், அவனுடைய ஆத்துமா ருசிகரமான ஆகாரத்தையும் வெறுக்கும்.
گوشت او چنان فرسوده شد که دیده نمی شودو استخوانهای وی که دیده نمی شد برهنه گردیده است. | ۲۱ 21 |
௨௧அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து, மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது.
جان او به حفره نزدیک میشود و حیات او به هلاک کنندگان. | ۲۲ 22 |
௨௨அவனுடைய ஆத்துமா பாதாளத்திற்கும், அவனுடைய உயிர் மரணத்திற்கும் நெருங்குகிறது.
«اگر برای وی یکی به منزله هزار فرشته یامتوسطی باشد، تا آنچه را که برای انسان راست است به وی اعلان نماید، | ۲۳ 23 |
௨௩ஆயிரத்தில் ஒருவராகிய பரிந்துபேசுகிற தேவ தூதனானவர் மனிதனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிப்பதற்கு, அவனுக்கு சாதகமாக இருந்தாரென்றால்,
آنگاه بر او ترحم نموده، خواهد گفت: او را از فرو رفتن به هاویه برهان، من کفارهای پیدا نمودهام. | ۲۴ 24 |
௨௪அவர் அவனுக்கு இரங்கி, அவன் படுகுழியில் இறங்காமல் இருக்க: நீர் அவனைக் காப்பாற்றும்; மீட்கும் பொருளை நான் கண்டுபிடித்தேன் என்பார்.
گوشت او ازگوشت طفل لطیف تر خواهد شد. و به ایام جوانی خود خواهد برگشت. | ۲۵ 25 |
௨௫அப்பொழுது அவனுடைய உடல் வாலிபத்தில் இருந்ததைவிட ஆரோக்கியமடையும்; தன் இளவயது நாட்களுக்குத் திரும்புவான்.
نزد خدا دعا کرده، او رامستجاب خواهد فرمود، و روی او را با شادمانی خواهد دید. و عدالت انسان را به او رد خواهدنمود. | ۲۶ 26 |
௨௬அவன் தேவனை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது, அவன் அவருடைய சமுகத்தைக் கெம்பீரத்துடன் பார்க்கும்படி அவர் அவன்மேல் பிரியமாகி, அந்த மனிதனுக்கு அவனுடைய நீதியின் பலனைக் கொடுப்பார்.
پس در میان مردمان سرود خوانده، خواهد گفت: گناه کردم و راستی را منحرف ساختم، و مکافات آن به من نرسید. | ۲۷ 27 |
௨௭அவன் மனிதரை நோக்கிப் பார்த்து: நான் பாவம் செய்து செம்மையானதைப் புரட்டினேன், அது எனக்குப் பலன் கொடுக்கவில்லை.
نفس مرا ازفرورفتن به هاویه فدیه داد، و جان من، نور رامشاهده میکند. | ۲۸ 28 |
௨௮என் ஆத்துமா படுகுழியில் இறங்காமல் இருக்க, அவர் அதை காப்பாற்றுவார் ஆகையால் என் உயிர் வெளிச்சத்தைக் காணும் என்று சொல்லுவான்.
اینک همه این چیزها را خدابه عمل میآورد، دو دفعه و سه دفعه با انسان. | ۲۹ 29 |
௨௯இதோ, தேவன் மனிதனுடைய ஆத்துமாவைப் படுகுழிக்கு விலக்குகிறதற்கும், அவனை உயிருள்ளோரின் வெளிச்சத்தினாலே பிரகாசிப்பதற்கும்,
تا جان او را از هلاکت برگرداند و او را از نورزندگان، منور سازد. | ۳۰ 30 |
௩0அவர் இவைகளையெல்லாம் அவனிடத்தில் பலமுறை நடப்பிக்கிறார்.
ای ایوب متوجه شده، مرااستماع نما، و خاموش باش تا من سخن رانم. | ۳۱ 31 |
௩௧யோபே, நீர் கவனித்து என் சொல்லைக் கேளும்; நான் பேசப்போகிறேன், நீர் மவுனமாயிரும்.
اگر سخنی داری به من جواب بده، متکلم شوزیرا میخواهم تو را مبری سازم. | ۳۲ 32 |
௩௨சொல்லவேண்டிய நியாயங்கள் இருந்ததென்றால், எனக்குப் பதில் கொடும்; நீர் பேசும், உம்மை நீதிமானாக நிரூபிக்க எனக்கு ஆசையுண்டு.
و اگر نه، تومرا بشنو. خاموش باش تا حکمت را به تو تعلیم دهم.» | ۳۳ 33 |
௩௩ஒன்றும் இல்லாதிருந்ததென்றால் நீர் என் சொல்லைக் கேளும், மவுனமாயிரும், நான் உமக்கு ஞானத்தைப் போதிப்பேன்” என்றான்.