< حزقیال 13 >
و کلام خداوند بر من نازل شده، گفت: | ۱ 1 |
௧யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
«ای پسر انسان به ضد انبیای اسرائیل که نبوت مینمایند، نبوت نما. و به آنانی که ازافکار خود نبوت میکنند، بگو کلام خداوند رابشنوید! | ۲ 2 |
௨மனிதகுமாரனே, தீர்க்கதரிசனம் சொல்லுகிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகளுக்கு விரோதமாக நீ தீர்க்கதரிசனம் சொல்லி, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்துத் தீர்க்கதரிசனம் சொல்லுகிறவர்களுடன் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால்: யெகோவாவுடைய வார்த்தையைக் கேளுங்கள்.
خداوند یهوه چنین میگوید: وای برانبیاء احمق که تابع روح خویش میباشند و هیچ ندیدهاند. | ۳ 3 |
௩யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறதாவது: தாங்கள் ஒன்றும் பார்க்காமல் இருந்தும், தங்களுடைய ஆவியின் ஏவுதலைப் பின்பற்றுகிற மதிகெட்ட தீர்க்கதரிசிகளுக்கு ஐயோ,
ای اسرائیل انبیای تو مانند روباهان درخرابهها بودهاند. | ۴ 4 |
௪இஸ்ரவேலே, உன்னுடைய தீர்க்கதரிசிகள் வனாந்திரங்களிலுள்ள நரிகளுக்கு ஒப்பாக இருக்கிறார்கள்.
شما به رخنهها برنیامدید ودیوار را برای خاندان اسرائیل تعمیر نکردید تاایشان در روز خداوند به جنگ بتوانند ایستاد. | ۵ 5 |
௫நீங்கள் யெகோவாவுடைய நாளிலே போரிலே நிலைநிற்கும்படி, திறப்புகளில் ஏறினதுமில்லை; இஸ்ரவேல் வீட்டாருக்காகச் சுவரை அடைத்ததுமில்லை.
رویای باطل و غیب گویی کاذب میبینند ومی گویند: خداوند میفرماید، با آنکه خداوندایشان را نفرستاده است و مردمان را امیدوارمی سازند به اینکه کلام ثابت خواهد شد. | ۶ 6 |
௬யெகோவா தங்களை அனுப்பாமல் இருந்தும், யெகோவா சொன்னாரென்று சொல்லி, அவர்கள் பொய்யானதையும், பொய்க்குறியையும் பார்த்து, காரியத்தை நிர்வாகம் செய்யலாமென்று நம்பிக்கையாக இருக்கிறார்கள்.
آیارویای باطل ندیدید و غیب گویی کاذب را ذکرنکردید چونکه گفتید خداوند میفرماید با آنکه من تکلم ننمودم؟» | ۷ 7 |
௭நான் சொல்லாமல் இருந்தும், நீங்கள் யெகோவா சொன்னார் என்று சொல்லும்போது, பொய் தரிசனத்தைப் பார்த்து, பொய்க்குறியைச் சொல்லுகிறீர்கள் அல்லவா?
بنابراین خداوند یهوه چنین میفرماید: «چونکه سخن باطل گفتید و رویای کاذب دیدید، اینک خداوند یهوه میفرماید من به ضد شماخواهم بود. | ۸ 8 |
௮ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் அபத்தமானதைச் சொல்லி, பொய்யானதைத் தரிசிக்கிறபடியினால், இதோ, நான் உங்களுக்கு எதிரானவர் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
پس دست من بر انبیایی که رویای باطل دیدند و غیب گویی کاذب کردند درازخواهد شد و ایشان در مجلس قوم من داخل نخواهند شد و در دفتر خاندان اسرائیل ثبت نخواهند گردید و به زمین اسرائیل وارد نخواهندگشت و شما خواهید دانست که من خداوند یهوه می باشم. | ۹ 9 |
௯பொய்யானதைத் தரிசித்து, பொய்க்குறியைச் சொல்லுகிற தீர்க்கதரிசிகளுக்கு என்னுடைய கை எதிராக இருக்கும்; அவர்கள் என்னுடைய மக்களின் சங்கத்தில் இருப்பதுமில்லை; இஸ்ரவேல் மக்களின் அட்டவணையில் எழுதப்படுவதுமில்லை; இஸ்ரவேல் தேசத்திற்குள் நுழைவதுமில்லை; அப்பொழுது நான் யெகோவாகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வீர்கள்.
و از این جهت که قوم مرا گمراه کرده، گفتند که سلامتی است در حینی که سلامتی نبودو یکی از ایشان دیوار را بنا نمود و سایرین آن رابه گل ملاط مالیدند. | ۱۰ 10 |
௧0சமாதானம் இல்லாமல் இருந்தும் சமாதானமென்று சொல்லி, அவர்கள் என்னுடைய மக்களை மோசம் போக்குகிறார்கள்; ஒருவன் மண்சுவரை வைக்கிறான்; இதோ, மற்றவர்கள் சாரமில்லாத சாந்தை அதற்குப் பூசுகிறார்கள்.
پس به آنانی که گل ملاطرا مالیدند بگو که آن خواهد افتاد. باران سیال خواهد بارید و شماای تگرگهای سخت خواهیدآمد و باد شدید آن را خواهد شکافت. | ۱۱ 11 |
௧௧சாரமில்லாத சாந்தைப் பூசுகிறவர்களை நோக்கி: அது இடிந்து விழுமென்று சொல்; வெள்ளமாகப் பெருகுகிற மழை பெய்யும்; மகா கல்மழையே, நீ பெய்வாய்; கொடிய புயல்காற்றும் அதைப் பிளக்கும்.
و هان چون دیوار بیفتد، آیا شما را نخواهند گفت: کجااست آن اندودی که به آن اندود گردید؟» | ۱۲ 12 |
௧௨இதோ, சுவர் விழும்போது: நீங்கள் பூசின பூச்சு எங்கே என்று சொல்வார்கள் அல்லவா?
لهذا خداوند یهوه چنین میگوید: «من آن را به باد شدید در غضب خود خواهم شکافت وباران سیال در خشم من خواهد بارید و تگرگهای سخت برای فانی ساختن آن در غیظ من خواهدآمد. | ۱۳ 13 |
௧௩ஆகையால் என்னுடைய கடுங்கோபத்திலே கொடிய புயல்காற்றை எழும்பி அடிக்கச்செய்வேன்; என்னுடைய கோபத்திலே வெள்ளமாக அடிக்கிற மழையும், என்னுடைய கடுங்கோபத்திலே அழிக்கத்தக்க பெருங்கல்மழையும், பெய்யும் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
و آن دیوار را که شما به گل ملاط اندودکردید منهدم نموده، به زمین یکسان خواهم ساخت و پی آن منکشف خواهد شد. و چون آن بیفتد شما در میانش هلاک خواهید شد و خواهیددانست که من یهوه هستم. | ۱۴ 14 |
௧௪அப்பொழுது நீங்கள் சாரமில்லாத சாந்தைப் பூசின சுவரை நான் இடித்து, அதின் அஸ்திபாரம் திறந்து கிடக்கும்படி அதைத் தரையிலே விழச்செய்வேன்; உள்ளே இருக்கிற நீங்கள் அழியும்படி அது விழும்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
پس چون خشم خود را بر دیوار و بر آنانی که آن را به گل ملاطاندود کردند به اتمام رسانیده باشم، آنگاه به شماخواهم گفت: دیوار نیست شده و آنانی که آن رااندود کردند نابود گشتهاند. | ۱۵ 15 |
௧௫இப்படிச் சுவரிலும், அதற்குச் சாரமில்லாத சாந்தைப் பூசினவர்களிலும் நான் என்னுடைய கடுங்கோபத்தைத் தீர்த்துக்கொண்டு: சுவருமில்லை, அதற்குச் சாந்து பூசினவர்களுமில்லை.
یعنی انبیای اسرائیل که درباره اورشلیم نبوت مینمایند وبرایش رویای سلامتی را میبینند با آنکه خداوندیهوه میگوید که سلامتی نیست. | ۱۶ 16 |
௧௬எருசலேமைக்குறித்துத் தீர்க்கதரிசனம்சொல்லி, சமாதானம் இல்லாமல் இருந்தும் சமாதானம் உண்டென்று தரிசனங்காண்கிற இஸ்ரவேலின் தீர்க்கதரிசிகள் இல்லாமற்போவார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
و توای پسرانسان نظر خود را بر دختران قوم خویش که ازافکار خود نبوت مینمایند بدار و بر ایشان نبوت نما، | ۱۷ 17 |
௧௭மனிதகுமாரனே, தங்களுடைய இருதயத்தில் இருக்கிறதையே எடுத்து, தீர்க்கதரிசனம்சொல்லுகிற உன்னுடைய மக்களின் மகள்களுக்கு எதிராக உன்னுடைய முகத்தைத் திருப்பி, அவர்களுக்கு எதிராக தீர்க்கதரிசனம் சொல்லி, சொல்லவேண்டியது என்னவென்றால்:
و بگو خداوند یهوه چنین میفرماید: وای بر آنانی که بالشها برای مفصل هر بازویی میدوزند و مندیلها برای سر هر قامتی میسازند تا جانها را صید کنند! آیا جانهای قوم مرا صیدخواهید کرد و جانهای خود را زنده نگاه خواهیدداشت؟ | ۱۸ 18 |
௧௮ஆத்துமாக்களை வேட்டையாடும்படி எல்லா கைகளுக்கும் காப்புகளைத் தைத்து, அந்தந்த வயதுள்ளவர்களுடைய தலைக்கும் தலையணைகளை உண்டாக்குகிறவர்களுக்கு ஐயோ, நீங்கள் என்னுடைய மக்களின் ஆத்துமாக்களை வேட்டையாடி, அவைகளை உங்களுக்கு உயிரோடு காப்பாற்றுவீர்களோ?
و مرا در میان قوم من برای مشت جویی و لقمه نانی بیحرمت میکنید چونکه به قوم من که به دروغ شما گوش میگیرند دروغ گفته، جانهایی را که مستوجب موت نیستندمی کشید و جانهایی را که مستحق حیات نمی باشند زنده نگاه میدارید. | ۱۹ 19 |
௧௯சாகத்தகாத ஆத்துமாக்களைக் கொல்வதற்கும், உயிரோடு இருக்கத்தகாத ஆத்துமாக்களை உயிரோடு காப்பாற்றுவதற்குமாக நீங்கள் பொய்யைக் கேட்கிற என்னுடைய மக்களுக்குப் பொய் சொல்லுகிறதினாலே சில கைப்பிடியளவு வாற்கோதுமைக்காகவும் அப்பத்துண்டுகளுக்காகவும் என்னை என்னுடைய மக்களுக்குள்ளே பரிசுத்தக்குலைச்சலாக்குவீர்களோ என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
لهذا خداوندیهوه چنین میگوید: اینک من به ضد بالشهای شما هستم که به واسطه آنها جانها را مثل مرغان صید میکنید. و آنها را از بازوهای شما خواهم درید و کسانی را که جانهای ایشان را مثل مرغان صید میکنید، رهایی خواهم داد. | ۲۰ 20 |
௨0ஆகையால் யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நீங்கள் ஆத்துமாக்களைப் பறக்கடிக்கும்படி வேட்டையாடுகிற உங்களுடைய காப்புகளுக்கு விரோதமாக நான் வந்து, அவைகளை உங்களுடைய புயங்களிலிருந்து பிடுங்கிக்கிழித்து, நீங்கள் பறக்கடிக்க வேட்டையாடுகிற ஆத்துமாக்களை நான் விடுதலைசெய்து,
و مندیلهای شما را خواهم درید و قوم خود را از دست شماخواهم رهانید و دیگر در دست شما نخواهند بودتا ایشان را صید کنید پس خواهید دانست که من یهوه هستم. | ۲۱ 21 |
௨௧உங்களுடைய தலையணைகளைக் கிழித்து, என் மக்களை உங்களுடைய கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அவர்கள் இனி வேட்டையாடப்படும்படி உங்களுடைய கைகளில் இருக்கமாட்டார்கள்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள்.
چونکه شما به دروغ خود، دل مرد عادل را که من محزون نساختم، محزون ساختهاید و دستهای مرد شریر را تقویت داده ایدتا از رفتار قبیح خود بازگشت ننماید و زنده نشود. | ۲۲ 22 |
௨௨நான் சஞ்சலப்படுத்தாத நீதிமானின் இருதயத்தை நீங்கள் வீணாக முறியச்செய்தபடியினாலும், துன்மார்க்கன் தன்னுடைய பொல்லாத வழியைவிட்டுத் திரும்பவும் நான் அவனை உயிரோடு காக்கவும் கூடாதபடிக்கு நீங்கள் அவனுடைய கைகளைத் திடப்படுத்தினபடியினாலும்,
لهذا بار دیگر رویای باطل نخواهید دید وغیب گویی نخواهید نمود. و چون قوم خود را ازدست شما رهایی دهم، آنگاه خواهید دانست که من یهوه میباشم.» | ۲۳ 23 |
௨௩நீங்கள் இனி பொய்யானதைப் பார்ப்பதுமில்லை, சாஸ்திரம் பார்ப்பதுமில்லை; நான் என்னுடைய மக்களை உங்களுடைய கைகளுக்கு நீங்கலாக்கிவிடுவேன்; அப்பொழுது நான் யெகோவா என்று அறிந்துகொள்வீர்கள் என்று சொல் என்றார்.