< خروج 33 >
و خداوند به موسی گفت: «روانه شده، از اینجا کوچ کن، تو و این قوم که اززمین مصر برآوردهای، بدان زمینی که برای ابراهیم، اسحاق و یعقوب قسم خورده، گفتهام آن را به ذریت تو عطا خواهم کرد. | ۱ 1 |
௧யெகோவா மோசேயை நோக்கி: “நீயும், எகிப்து தேசத்திலிருந்து நீ அழைத்துக்கொண்டு வந்த மக்களும் இந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு. உன்னுடைய சந்ததிக்குக் கொடுப்பேன் என்று நான் ஆபிரகாமுக்கும், ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக்கொடுத்த செழிப்பான தேசத்திற்குப் போங்கள்.
و فرشتهای پیش روی تو میفرستم، و کنعانیان و اموریان و حتیان و فرزیان و حویان و یبوسیان را بیرون خواهم کرد. | ۲ 2 |
௨நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியர்களையும், எமோரியர்களையும், ஏத்தியர்களையும், பெரிசியர்களையும் ஏவியர்களையும், எபூசியர்களையும் துரத்திவிடுவேன்.
به زمینی که به شیر و شهد جاری است، زیرا که در میان شما نمی آیم، چونکه قوم گردن کش هستی، مبادا تو را در بین راه هلاک سازم.» | ۳ 3 |
௩ஆனாலும், வழியிலே நான் உங்களை அழிக்காதபடி, நான் உங்களிடம் வரமாட்டேன், நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள்” என்றார்.
وچون قوم این سخنان بد را شنیدند، ماتم گرفتند، و هیچکس زیور خود را برخود ننهاد. | ۴ 4 |
௪துக்கமான இவ்வார்த்தைகளை மக்கள் கேட்டபோது, ஒருவரும் தங்களுடைய ஆபரணங்களைப் போட்டுக்கொள்ளாமல் துக்கித்துக்கொண்டிருந்தார்கள்.
وخداوند به موسی گفت: «بنیاسرائیل را بگو: شماقوم گردن کش هستید؛ اگر لحظهای در میان توآیم، همانا تو را هلاک سازم. پس اکنون زیورخود را از خود بیرون کن تا بدانم با تو چه کنم.» | ۵ 5 |
௫ஏனென்றால், “நீங்கள் பிடிவாதமுள்ள மக்கள், நான் ஒரு நிமிடத்தில் உங்கள் நடுவில் எழும்பி, உங்களை அழிப்பேன்; ஆகையால், நீங்கள் போட்டிருக்கிற உங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போடுங்கள்; அப்பொழுது நான் உங்களுக்குச் செய்யவேண்டியதைக்குறித்துத் தீர்மானிப்பேன் என்று இஸ்ரவேலர்களுக்குச் சொல்” என்று யெகோவா மோசேயோடு சொல்லியிருந்தார்.
پس بنیاسرائیل زیورهای خود را از جبل حوریب از خود بیرون کردند. | ۶ 6 |
௬ஆகையால், இஸ்ரவேலர்கள் ஓரேப் மலை அருகே தங்களுடைய ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்.
و موسی خیمه خود را برداشته، آن را بیرون لشکرگاه، دور از اردو زد، و آن را «خیمه اجتماع» نامید. و واقع شد که هرکه طالب یهوه میبود، به خیمه اجتماع که خارج لشکرگاه بود، بیرون میرفت. | ۷ 7 |
௭மோசே கூடாரத்தை பெயர்த்து, அதை முகாமிற்கு வெளியே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக்கூடாரம் என்று பெயரிட்டான். யெகோவாவைத் தேடும் யாவரும் முகாமிற்குத் தூரமான கூடாரத்திற்குப் போவார்கள்.
و هنگامی که موسی به سوی خیمه بیرون میرفت، تمامی قوم برخاسته، هر یکی به در خیمه خود میایستاد، و در عقب موسی مینگریست تا داخل خیمه میشد. | ۸ 8 |
௮மோசே கூடாரத்திற்குப் போகும்போது, மக்கள் எல்லோரும் எழுந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்திற்குள் நுழையும்வரை, அவனை பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
و چون موسی به خیمه داخل میشد، ستون ابر نازل شده، به در خیمه میایستاد، و خدا با موسی سخن میگفت. | ۹ 9 |
௯மோசே கூடாரத்திற்குள் நுழையும்போது, மேகமண்டலம் இறங்கி, கூடாரவாசலில் நின்றது; யெகோவா மோசேயோடு பேசினார்.
و چون تمامی قوم، ستون ابر رابر در خیمه ایستاده میدیدند، همه قوم برخاسته، هر کس به در خیمه خود سجده میکرد. | ۱۰ 10 |
௧0மக்கள் எல்லோரும் மேகமண்டலம் கூடாரவாசலில் நிற்பதைப் பார்த்தார்கள்; மக்கள் எல்லோரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் பணிந்துகொண்டார்கள்.
وخداوند با موسی روبرو سخن میگفت، مثل شخصی که با دوست خود سخن گوید. پس به اردو بر میگشت. اما خادم او یوشع بن نون جوان، از میان خیمه بیرون نمی آمد. | ۱۱ 11 |
௧௧ஒருவன் தன்னுடைய நண்பனோடு பேசுவதுபோல, யெகோவா மோசேயோடு முகமுகமாகப் பேசினார்; பின்பு, அவன் முகாமிற்குத் திரும்பினான்; நூனின் மகனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக்கூடாரத்தைவிட்டுப் போகாமல் இருந்தான்.
و موسی به خداوند گفت: «اینک تو به من میگویی: این قوم را ببر. و تو مرا خبر نمی دهی که همراه من که را میفرستی. و تو گفتهای، تو را به نام میشناسم، و ایض در حضور من فیض یافتهای. | ۱۲ 12 |
௧௨மோசே யெகோவாவை நோக்கி: “தேவரீர் இந்த மக்களை அழைத்துக்கொண்டுபோ என்று சொன்னீர்; ஆகிலும், என்னோடுகூட இன்னாரை அனுப்புவேன் என்பதை எனக்கு நீர் அறிவிக்கவில்லை; என்றாலும், உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றும், என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது என்றும், தேவரீர் சொன்னதுண்டு;
الان اگر فی الحقیقه منظور نظر توشدهام، طریق خود را به من بیاموز تا تو رابشناسم، و در حضور تو فیض یابم، و ملاحظه بفرما که این طایفه، قوم تو میباشند.» | ۱۳ 13 |
௧௩உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த தேசம் உம்முடைய மக்களென்று நினைத்தருளும்” என்றான்.
گفت: «روی من خواهد آمد و تو را آرامی خواهم بخشید.» | ۱۴ 14 |
௧௪அதற்கு அவர்: “என்னுடைய சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன்” என்றார்.
به وی عرض کرد: «هر گاه روی تونیاید، ما را از اینجا مبر. | ۱۵ 15 |
௧௫அப்பொழுது அவன் அவரை நோக்கி: “உம்முடைய சமுகம் என்னோடு வராமற்போனால், எங்களை இந்த இடத்திலிருந்து கொண்டுபோகாமல் இரும்.
زیرا به چه چیز معلوم میشود که من و قوم تو منظور نظر تو شدهایم، آیانه از آمدن تو با ما؟ پس من و قوم تو از جمیع قومهایی که بر روی زمینند، ممتاز خواهیم شد.» | ۱۶ 16 |
௧௬எனக்கும் உமது மக்களுக்கும் உம்முடைய கண்களிலே கிருபை கிடைத்ததென்பது எதினால் தெரியவரும்; நீர் எங்களுடன் வருவதினால் அல்லவா? இப்படியே பூமியின்மேலுள்ள மக்கள் எல்லோரையும்விட, நானும் உம்முடைய மக்களும் விசேஷித்தவர்கள் என்று விளங்கும்” என்றான்.
خداوند به موسی گفت: «این کار را نیز که گفتهای خواهم کرد، زیرا که در نظر من فیض یافتهای و تو را بنام میشناسم.» | ۱۷ 17 |
௧௭அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி: “நீ சொன்ன இந்த வார்த்தையின்படி செய்வேன்; என்னுடைய கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பெயர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன்” என்றார்.
عرض کرد: «مستدعی آنکه جلال خود را به من بنمایی.» | ۱۸ 18 |
௧௮அப்பொழுது அவன்: “உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும்” என்றான்.
گفت: «من تمامی احسان خود را پیش روی تومی گذرانم و نام یهوه را پیش روی تو ندا میکنم، و رافت میکنم بر هرکه رئوف هستم و رحمت خواهم کرد بر هرکه رحیم هستم. | ۱۹ 19 |
௧௯அதற்கு அவர்: “என்னுடைய எல்லா தயவையும் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகச்செய்து, யெகோவாவுடைய நாமத்தை உனக்கு முன்பாகக்கூறுவேன்; எவன்மேல் கிருபையாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் கிருபையாக இருப்பேன்; எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ, அவன்மேல் இரக்கமாக இருப்பேன் என்று சொல்லி,
و گفت روی مرا نمی توانی دید، زیرا انسان نمی تواند مرا ببیندو زنده بماند.» | ۲۰ 20 |
௨0நீ என்னுடைய முகத்தைக் காணமாட்டாய், ஒரு மனிதனும் என்னைக் கண்டு உயிரோடிருக்கமுடியாது” என்றார்.
و خداوند گفت: «اینک مقامی نزد من است. پس بر صخره بایست. | ۲۱ 21 |
௨௧பின்னும் யெகோவா: “இதோ, என் அருகில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.
و واقع میشود که چون جلال من میگذرد، تو را درشکاف صخره میگذارم، و تو را بهدست خودخواهم پوشانید تا عبور کنم. | ۲۲ 22 |
௨௨என்னுடைய மகிமை கடந்துபோகும்போது, நான் உன்னை அந்தக் கன்மலையின் வெடிப்பிலே வைத்து, நான் கடந்துபோகும்வரை என்னுடைய கரத்தினால் உன்னை மூடுவேன்;
پس دست خودرا خواهم برداشت تا قفای مرا ببینی، اما روی من دیده نمی شود.» | ۲۳ 23 |
௨௩பின்பு, என்னுடைய கரத்தை எடுப்பேன்; அப்பொழுது என்னுடைய பின்பக்கத்தைக் காண்பாய்; என்னுடைய முகமோ காணப்படாது” என்றார்.