< عاموس 9 >
خداوند را دیدم که نزد مذبح ایستاده بود وگفت: «تاجهای ستونها را بزن تا آستانه ها بلرزد و آنها را بر سر همه مردم بینداز وباقی ماندگان ایشان را به شمشیر خواهم کشت وفراریای از ایشان نخواهد گریخت وباقیماندهای از ایشان نخواهد رست. | ۱ 1 |
௧ஆண்டவரைப் பலிபீடத்தின்மேல் நிற்கக்கண்டேன்; அவர்: நீ வாசல் நிலைகள் அசையும்படி தூணின் உச்சியை அடித்து, அவைகளை அவர்கள் எல்லோருடைய தலையின்மேலும் விழும்படி உடைத்துப்போடு; அவர்களுக்குப் பின்னாகவரும் மீதியானவர்களை நான் வாளால் கொன்றுபோடுவேன்; அவர்களில் ஓடுகிறவன் ஒருவனும் தப்புவதுமில்லை, அவர்களில் தப்புகிறவன் ஒருவனும் இரட்சிக்கப்படுவதுமில்லை.
اگر به هاویه فرو روند، دست من ایشان را از آنجاخواهد گرفت و اگر به آسمان صعود نمایند، ایشان را از آنجا فرود خواهم آورد. (Sheol ) | ۲ 2 |
௨அவர்கள் பாதாளம்வரைக்கும் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என்னுடைய கை அந்த இடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானம்வரை ஏறினாலும், அந்த இடத்திலிருந்து அவர்களை இறங்கச்செய்வேன்; (Sheol )
و اگر به قله کرمل پنهان شوند ایشان را تفتیش کرده، از آنجاخواهم گرفت و اگر از نظر من در قعر دریاخویشتن را مخفی نمایند، در آنجا مار را امرخواهم فرمود که ایشان را بگزد. | ۳ 3 |
௩அவர்கள் கர்மேலின் உச்சியிலே ஒளிந்துகொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் கடலின் ஆழத்திலே போய் என்னுடைய கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.
و اگر پیش دشمنان خود به اسیری روند شمشیر را در آنجاامر خواهم فرمود تا ایشان را بکشد و نظر خود رابر ایشان برای بدی خواهم داشت و نه برای نیکویی. | ۴ 4 |
௪அவர்கள் தங்களுடைய எதிரிக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோட வாளுக்கு நான் கட்டளையிட்டு, என்னுடைய கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.
خداوند یهوه صبایوت که زمین را لمس میکند و آن گداخته میگردد و همه ساکنانش ماتم میگیرند و تمامش مثل نهر برمی آید و مانندنیل مصر فرو مینشیند؛ | ۵ 5 |
௫சேனைகளின் யெகோவாகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போகும்; அப்பொழுது அதின் குடிகள் எல்லோரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாகப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும்.
آن که غرفه های خود رادر آسمان بنا میکند و طاقهای خود را بر زمین بنیاد مینهد و آبهای دریا را ندا درداده، آنها را به روی زمین میریزد نام او یهوه میباشد. | ۶ 6 |
௬அவர் வானத்தில் தமது மேல் அறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழ் அறைகளை அஸ்திபாரப்படுத்தி, கடலின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; யெகோவா என்பது அவருடைய நாமம்.
خداوندمی گوید: «ای بنیاسرائیل آیا شما برای من مثل پسران حبشیان نیستید؟ آیا اسرائیل را از زمین مصر و فلسطینیان را از کفتور و ارامیان را از قیربرنیاوردم؟» | ۷ 7 |
௭இஸ்ரவேல் மக்களே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியர்களின் மக்களைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று யெகோவா சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்து தேசத்திலிருந்தும், பெலிஸ்தர்களைக் கப்தோரிலிருந்தும், சீரியர்களைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?
اینک چشمان خداوند یهوه بر مملکت گناهکار میباشد و من آن را از روی زمین هلاک خواهم ساخت لیکن خداوند میگوید که «خاندان یعقوب را بالکل هلاک نخواهم ساخت. | ۸ 8 |
௮இதோ, யெகோவாகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்ஜியத்திற்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதை பூமியின்மேல் இல்லாமல் அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
زیرا اینک من امر فرموده، خاندان اسرائیل را درمیان همه امتها خواهم بیخت، چنانکه غله در غربال بیخته میشود و دانهای بر زمین نخواهدافتاد. | ۹ 9 |
௯இதோ, சல்லடையினால் சலித்து அரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா தேசங்களுக்குள்ளும் சலித்து அரிக்கும்படி நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமை மணியும் தரையிலே விழுவதில்லை.
جمیع گناهکاران قوم من که میگویند بلابه ما نخواهد رسید و ما را درنخواهد گرفت، به شمشیر خواهند مرد. | ۱۰ 10 |
௧0தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என்னுடைய மக்களில் சொல்லுகிற பாவிகள் எல்லோரும் வாளால் சாவார்கள்.
در آن روز خیمه داود راکه افتاده است برپا خواهم نمود و شکافهایش رامرمت خواهم کرد و خرابیهایش را برپا نموده، آن را مثل ایام سلف بنا خواهم کرد. | ۱۱ 11 |
௧௧ஏதோமில் மீதியானவர்களையும், என்னுடைய பெயர் சொல்லிய எல்லா தேசங்களையும் தன்னிடத்தில் சேர்த்துக்கொள்வதற்காக,
تا ایشان بقیه ادوم و همه امتها را که اسم من بر ایشان نهاده شده است، به تصرف آورند.» خداوند که این رابجا میآورد تکلم نموده است. | ۱۲ 12 |
௧௨அந்த நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுத்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, ஆரம்பநாட்களில் இருந்ததுபோல அதை நிறுவுவேன் என்று இதைச் செய்கிற யெகோவா சொல்லுகிறார்.
اینک خداوند میگوید: «ایامی میآید که شیارکننده به دروکننده خواهد رسید وپایمال کننده انگور بهکارنده تخم. و کوهها عصیرانگور را خواهد چکانید و تمامی تلها به سیلان خواهد آمد. | ۱۳ 13 |
௧௩இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சைப்பழங்களை பிழிகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, மலைகள் திராட்சைரசமாக வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று யெகோவா சொல்லுகிறார்.
و اسیری قوم خود اسرائیل راخواهم برگردانید و شهرهای مخروب را بنانموده، در آنها ساکن خواهند شد و تاکستانهاغرس کرده، شراب آنها را خواهند نوشید و باغهاساخته، میوه آنها را خواهند خورد.» | ۱۴ 14 |
௧௪என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சைத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளை சாப்பிடுவார்கள்.
و یهوه خدایت میگوید: «من ایشان را درزمین ایشان غرس خواهم نمود و بار دیگر اززمینی که به ایشان دادهام کنده نخواهند شد.» | ۱۵ 15 |
௧௫அவர்களை அவர்களுடைய தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய யெகோவா சொல்லுகிறார் என்றார்.