< دوم سموئیل 4 >
و چون پسر شاول شنید که ابنیر در حبرون مرده است دستهایش ضعیف شد، وتمامی اسرائیل پریشان گردیدند. | ۱ 1 |
அப்னேர் எப்ரோனிலே கொலைசெய்யப்பட்டதைக் கேள்விப்பட்ட சவுலின் மகன் இஸ்போசேத் தன் தைரியத்தை இழந்தான். இஸ்ரயேலர் எல்லோரும் திகிலடைந்தார்கள்.
و پسر شاول دو مرد داشت که سردار فوج بودند؛ اسم یکی بعنه و اسم دیگری ریکاب بود، پسران رمون بئیروتی از بنی بنیامین، زیرا که بئیروت با بنیامین محسوب بود. | ۲ 2 |
கொள்ளைக் கூட்டத்திற்கு தலைவர்களான இருவர் சவுலின் மகனுக்கு இருந்தனர். ஒருவன் பெயர் பானா, மற்றவன் பெயர் ரேகாப். இவர்கள் பென்யமீன் கோத்திரத்தில் பேரோத்தியனான ரிம்மோனின் மகன்கள். பேரோத்தும் பென்யமீன் கோத்திரத்தின் ஒரு பகுதியாக கருதப்பட்டது.
و بئیروتیان به جتایم فرار کرده، در آنجا تا امروز غربت پذیرفتند. | ۳ 3 |
ஏனெனில் பேரோத்தியர் கித்தாயீமுக்கு தப்பி ஓடிப்போய் அங்கே அந்நியராய் இன்றுவரை வாழ்ந்து வருகிறார்கள்.
و یوناتان پسر شاول را پسری لنگ بود که هنگام رسیدن خبر شاول و یوناتان از یزرعیل، پنج ساله بود، و دایهاش او را برداشته، فرار کرد. وچون به فرار کردن تعجیل مینمود، او افتاد و لنگ شد و اسمش مفیبوشت بود. | ۴ 4 |
சவுலின் மகன் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு மகன் இருந்தான்; சவுலும், யோனத்தானும் இறந்த செய்தி யெஸ்ரயேலிருந்து வந்தபோது, அவன் ஐந்து வயதுடையவனாயிருந்தான். அவனுடைய தாதி அவனைத் தூக்கிக்கொண்டு அவ்விடத்தைவிட்டுத் தப்பி, ஓடியவேகத்தில் அவன் விழுந்தபோதே அவன் முடவனானான். அவன் பெயர் மேவிபோசேத்.
و ریکاب و بعنه، پسران رمون بئیروتی روانه شده، در وقت گرمای روز به خانه ایشبوشت داخل شدند و او به خواب ظهر بود. | ۵ 5 |
பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களாகிய ரேகாபும், பானாவும் இஸ்போசேத்தின் வீட்டிற்குப் போகப் புறப்பட்டார்கள். மத்தியான வேளையில் அவன் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது அவனுடைய வீட்டிற்கு அவர்கள் வந்து சேர்ந்தார்கள்.
پس به بهانهای که گندم بگیرند در میان خانه داخل شده، به شکم او زدند و ریکاب و برادرش بعنه فرارکردند. | ۶ 6 |
அவர்கள் இருவரும் கோதுமையை வாங்க வருகிறவர்கள்போல இஸ்போசேத்தின் வீட்டின் உட்பகுதிக்குச் சென்று அவனுடைய வயிற்றில் குத்தினார்கள். பின் பானாவும் அவன் சகோதரன் ரேகாபும் தப்பி ஓடிவிட்டார்கள்.
و چون به خانه داخل شدند و او بربسترش در خوابگاه خود میخوابید، او را زدند وکشتند و سرش را از تن جدا کردند و سرش راگرفته، از راه عربه تمامی شب کوچ کردند. | ۷ 7 |
இஸ்போசேத் தன் படுக்கை அறையில் கட்டிலில் படுத்திருக்கும் போதுதான் அவர்கள் உள்ளே போனார்கள். அவனைக் குத்திக் கொன்றபின் அவன் தலையை வெட்டி அதை எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் அரபா வழியாகப் பயணம் செய்தார்கள்.
و سرایشبوشت را نزد داود به حبرون آورده، به پادشاه گفتند: «اینک سر دشمنت، ایشبوشت، پسرشاول، که قصد جان تو میداشت. و خداوندامروز انتقام آقای ما پادشاه را از شاول و ذریهاش کشیده است.» | ۸ 8 |
பின்பு அவர்கள் இஸ்போசேத்தின் தலையை எப்ரோனில் இருந்த தாவீது அரசனிடம் கொண்டுவந்தார்கள். அவர்கள் அவனிடம், “இதோ உமது உயிரை வாங்கத்தேடிய, உமது பகைவனான சவுலின் மகன் இஸ்போசேத்தின் தலை. இன்றைய தினம் யெகோவா என் தலைவனான அரசருக்காக சவுலையும் அவன் பிள்ளைகளையும் பழிவாங்கினார்” என்றார்கள்.
و داود ریکاب و برادرش بعنه، پسران رمون بئیروتی را جواب داده، به ایشان گفت: «قسم به حیات خداوند که جان مرا از هر تنگی فدیه داده است. | ۹ 9 |
அதற்குத் தாவீது பேரோத்தியனான ரிம்மோனின் மகன்களான ரேகாபிடமும் அவன் சகோதரனான பானாவிடமும், “என்னை எல்லா இக்கட்டுகளிலும் இருந்து மீட்டுக்கொண்ட யெகோவா இருப்பது நிச்சயமெனில்,
وقتی که کسی مرا خبر داده، گفت که اینک شاول مرده است و گمان میبرد که بشارت میآورد، او را گرفته، در صقلغ کشتم و این اجرت بشارت بود که به او دادم. | ۱۰ 10 |
ஒரு மனிதன் நற்செய்தி கொண்டுவருவதாக என்னிடம் வந்து, ‘சவுல் இறந்துபோனான்’ என்று எனக்குச் சொன்னபோது, நான் அவனைப் பிடித்து சிக்லாக்கிலே கொலைசெய்ததும் நிச்சயம். அதுவே அவன் கொண்டுவந்த நற்செய்திக்கு நான் கொடுத்த வெகுமதி.
پس چندمرتبه زیاده چون مردان شریر، شخص صالح رادر خانهاش بر بسترش بکشند، آیا خون او را ازدست شما مطالبه نکنم؟ و شما را از زمین هلاک نسازم؟» | ۱۱ 11 |
அப்படியிருக்கத் தனது வீட்டிற்குள் தன் படுக்கையில் படுத்திருந்த குற்றமற்ற ஒரு மனிதனைக் கொலைசெய்த கொடிய மனிதருக்கு நான் எவ்வளவு கடுமையாகத் தண்டனை கொடுக்கவேண்டும்? உங்களைப் பூமியில் இருந்து அழித்து அவனுடைய இரத்தத்திற்காக உங்களைப் பழிவாங்கமாட்டேனோ!” என்றான்.
پس داود خادمان خود را امر فرمودکه ایشان را کشتند و دست و پای ایشان را قطع نموده، بر برکه حبرون آویختند. اما سرایشبوشت را گرفته در قبر ابنیر در حبرون دفن کردند. | ۱۲ 12 |
தாவீது அவனுடைய மனிதருக்குக் கட்டளையிட்டதும் அவர்கள் அந்த இருவரையும் கொன்றனர். பின்னர் அவர்களுடைய கைகளையும், கால்களையும் வெட்டி உடல்களை எப்ரோனில் உள்ள குளத்தருகில் தொங்கவிட்டார்கள். ஆனால் இஸ்போசேத்தின் தலையை எடுத்துச்சென்று எப்ரோனிலுள்ள அப்னேரின் கல்லறையிலே அடக்கம்பண்ணினார்கள்.