< اول تواریخ 14 >
و حيرام پادشاه صور، قاصدان با چوب سرو آزاد و بنايان و نجاران نزد داود فرستاده تا خانه اي براي او بسازند. | ۱ 1 |
௧தீருவின் ராஜாவாகிய ஈராம் தாவீதிடம் தூதுவர்களையும், அவனுக்கு ஒரு வீட்டைக் கட்டுவற்குக் கேதுரு மரங்களையும், தச்சர்களையும், கொத்தனார்களையும் அனுப்பினான்.
و داود دانست که خداوند او را به پادشاهي اسرائيل استوار داشته است، زيرا که سلطنتش به خاطر قوم او اسرائيل به درجه بلند برافراشته شده بود. | ۲ 2 |
௨யெகோவா தன்னை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக ஏற்படுத்தி, இஸ்ரவேல் என்னும் தம்முடைய மக்களுக்காக தன்னுடைய ராஜ்ஜியத்தை மிகவும் உயர்த்தினார் என்று தாவீது அறிந்துகொண்டான்.
و داود در اورشليم با زنان گرفت، و داود پسران و دختران ديگر توليد نمود. | ۳ 3 |
௩எருசலேமிலே தாவீது பின்னும் அநேக பெண்களைத் திருமணம்செய்து, பின்னும் மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
و اين است نامهاي فرزنداني که در اورشليم براي وي به هم رسيدند: شَمُّوع و شُوباب و ناتان و سُليمان، | ۴ 4 |
௪எருசலேமிலே அவனுக்குப் பிறந்த மகன்களின் பெயர்கள்: சம்முவா, சோபாப், நாத்தான், சாலொமோன்,
و یبحار و اَلِيشُوع و اَلِيفالَط، | ۵ 5 |
௫இப்பார், எலிசூவா, எல்பெலேத்,
و نُوجَه و نافَج و يافِيع، | ۶ 6 |
௬நோகா, நெப்பேக், யப்பியா,
و اَلِيشامَع و بَعلياداع و اَلِيفَلَط. پيروزي داود بر فلسطينيان | ۷ 7 |
௭எலிஷாமா, பெலியாதா, எலிப்பெலேத் என்பவைகள்.
و چون فلسطينيان شنيدند که داود به پادشاهي تمام اسرائيل مسح شده است، پس فلسطينيان برآمدند تا داود را (براي جنگ) بطلبند؛ و چون داود شنيد، به مقابله ايشان برآمد. | ۸ 8 |
௮தாவீது அனைத்து இஸ்ரவேலர்களின்மேலும் ராஜாவாக அபிஷேகம்செய்யப்பட்டதைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்கள் எல்லோரும் தாவீதைத் தேட வந்தார்கள்; அதை தாவீது கேட்டபோது அவர்களுக்கு எதிராகப் புறப்பட்டான்.
و فلسطينيان آمده، در وادي رفائيم منتشر شدند. | ۹ 9 |
௯பெலிஸ்தர்கள் வந்து ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே பரவியிருந்தார்கள்.
و داود از خدا مسألت نموده، گفت: « آيا به مقابله فلسطينيان برآيم و آيا ايشان را به دست من تسليم خواهي نمود؟» خداوند او را گفت: « برآي وايشان را به دست تو تسليم خواهم کرد.» | ۱۰ 10 |
௧0பெலிஸ்தர்களுக்கு விரோதமாகப் போகலாமா, அவர்களை என்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பீரா என்று தாவீது தேவனைக் கேட்டபோது, யெகோவா: போ, அவர்களை உன்னுடைய கையில் ஒப்புக்கொடுப்பேன் என்றார்.
پس به بَعل فَراصِيم برآمدند و داود ايشان را در آنجا شکست داد و داود گفت: « خدا بر دشمنان من به دست من مثل رخنه آب رخنه کرده است.» بنابراين آن مکان را بَعل فَراصِيم نام نهادند. | ۱۱ 11 |
௧௧அவர்கள் பாகால்பிராசீமுக்கு வந்தபோது, தாவீது அங்கே அவர்களைத் தோற்கடித்து: தண்ணீர்கள் உடைந்து ஓடுவதுபோல, தேவன் என்னுடைய கையால் என்னுடைய எதிரிகளை உடைந்து ஓடச்செய்தார் என்றான்; அதினால் அந்த இடத்திற்கு பாகால்பிராசீம் என்னும் பெயரிட்டார்கள்.
و خدايان خود را در آنجا ترک کردند و داود امر فرمود که آنها را به آتش بسوزانند. | ۱۲ 12 |
௧௨அங்கே அவர்கள் தங்களுடைய தெய்வங்களைவிட்டு ஓடிப்போனார்கள்; தாவீது கற்பித்தபடி அவைகள் அக்கினியால் சுட்டெரிக்கப்பட்டன.
و فلسطينيان بار ديگر در آن وادي منتشر شدند. | ۱۳ 13 |
௧௩பெலிஸ்தர்கள் மறுபடியும் வந்து அந்தப் பள்ளத்தாக்கிலே இறங்கினார்கள்.
و داود باز از خدا سؤال نمود و خدا او را گفت: « از عقب ايشان مرو بلکه از ايشان رو گردانيده، در مقابل درختان توت به ايشان نزديک شو. | ۱۴ 14 |
௧௪அப்பொழுது தாவீது திரும்ப தேவனிடம் விசாரித்ததற்கு, தேவன் நீ அவர்களுக்குப் பின்னாலே போகாமல், அவர்களைச் சுற்றிவளைத்து, முசுக்கட்டைச் செடிகளுக்கு எதிராக இருந்து, அவர்கள்மேல் பாய்ந்து,
و چون در سر درختان توت آواز قدمها بشنوي، آنگاه براي جنگ بيرون شو، زيرا خدا پيش روي تو بيرون رفته است تا لشکر فلسطينيان را مغلوب سازد.» | ۱۵ 15 |
௧௫முசுக்கட்டைச் செடிகளின் நுனிகளிலே செல்லுகிற இரைச்சலை நீ கேட்கும்போது, யுத்தத்திற்குப் புறப்படு; பெலிஸ்தர்களின் முகாமை முறியடிக்க, தேவன் உனக்கு முன்னே புறப்பட்டிருப்பார் என்றார்.
پس داود بر وفق آنچه خدا اورا امر فرموده بود، عمل نمود و لشکر فلسطينيان را از جِبعُون تا جارز شکست دادند. | ۱۶ 16 |
௧௬தேவன் தனக்குக் கற்பித்தபடியே தாவீது செய்தபோது, பெலிஸ்தர்களின் இராணுவத்தைக் கிபியோன் துவங்கிக் கேசேர்வரைத் தோற்கடித்தார்கள்.
و اسم داود در جميع اراضي شيوع يافت و خداوند ترس او را بر تمامي امّت ها مستولي ساخت. | ۱۷ 17 |
௧௭அப்படியே தாவீதின் புகழ் எல்லா தேசங்களிலும் பிரபலமாகி, அவனுக்குப் பயப்படுகிற பயத்தைக் யெகோவா எல்லா தேசங்களின்மேலும் வரச்செய்தார்.