< Salmenes 130 >

1 Ein song til høgtidsferderne. Or djupet ropar eg på deg, Herre!
ஆரோகண பாடல். யெகோவாவே, உபத்திரவத்தின் ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
2 Herre, høyr på mi røyst, lat dine øyro merka mi bønerøyst!
ஆண்டவரே, என்னுடைய சத்தத்தைக் கேளும்; என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்திற்கு உமது செவிகள் கவனித்திருக்கட்டும்.
3 Dersom du, Herre, vil gøyma på misgjerningar, Herre, kven kann då standa?
யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், யார் நிலைநிற்பான், ஆண்டவரே.
4 For hjå deg er forlatingi, at dei skal ottast deg.
உமக்குப் பயப்படும்படிக்கு உம்மிடத்தில் மன்னிப்பு உண்டு.
5 Eg vonar på Herren, mi sjæl vonar, og eg ventar på hans ord.
யெகோவாவுக்குக் காத்திருக்கிறேன்; என்னுடைய ஆத்துமா காத்திருக்கிறது; அவருடைய வார்த்தையை நம்பியிருக்கிறேன்.
6 Mi sjæl ventar på Herren meir enn vaktmenner på morgonen, vaktmenner på morgonen.
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்திற்குக் காத்திருக்கிற காவலர்களைவிட அதிகமாக என்னுடைய ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.
7 Venta, Israel, på Herren! for hjå Herren er nåden, og stor utløysing er hjå honom.
இஸ்ரவேல் யெகோவாவை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு.
8 Og han skal løysa Israel frå alle deira misgjerningar.
அவர் இஸ்ரவேலை அதின் எல்லா அக்கிரமங்களிலிருந்தும் மீட்டுக்கொள்வார்.

< Salmenes 130 >