< Jobs 22 >

1 Då tok Elifaz frå Teman til ords og sagde:
அதற்கு தேமானியனான எலிப்பாஸ் மறுமொழியாக சொன்னதாவது:
2 «Er mannen vel til gagn for Gud? Nei, vitug mann seg sjølv mun gagna.
“மனிதனால் இறைவனுக்குப் பயன் ஏதும் உண்டோ? ஞானவானாலும் அவருக்கு பயன் உண்டோ?
3 Hev Allvald bate av di rettferd? Er det hans vinst, at rett du ferdast?
நீ நீதிமானாய் இருந்திருந்தாலும், எல்லாம் வல்லவருக்கு அது மகிழ்ச்சி அளிக்குமோ? உன் வழிகள் குற்றமற்றவையாய் இருந்தாலும் அதினால் அவருக்கு இலாபம் என்ன?
4 Er det din gudlegdom han refser, når han med deg held rettargang?
“அவர் உன்னைக் கடிந்துகொண்டு, உனக்கு எதிராகக் குற்றம் சாட்டுவது உன் பக்தியின் காரணமாகவோ?
5 Hev ei din vondskap vore stor og dine syndar utan ende?
உன் கொடுமை பெரிதானதல்லவோ? உன் பாவங்கள் முடிவில்லாதவை அல்லவோ?
6 Grunnlaust du panta dine brøder; halvnakne drog du klædi av;
நீ காரணமின்றி உனது சகோதரரின் அடகுப்பொருளை வற்புறுத்திக் கேட்டு, ஏழைகளின் உடைகளைப் பறித்துக்கொண்டாய்.
7 den trøytte gav du ikkje vatn, den svoltne negta du ditt brød.
நீ களைத்தவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை; பசித்தவனுக்கும் உணவு கொடுக்காமல் போனாய்.
8 Det er den sterke som eig landet, den stolte hev si bustad der.
நீ நிலத்திற்கு உரிமையாளன். மதிப்புக்குரியவனாய் வாழ்ந்திருந்தபோதும் இப்படி செய்தாய்.
9 Du jaga enkjor burt tomhendt’ burt, slo armen av på faderlause.
நீ விதவைகளை வெறுங்கையுடன் அனுப்பினாய்; அனாதைப் பிள்ளைகளின் பெலனை ஒடித்தாய்.
10 Difor ligg snaror kringum deg, og rædsla skræmer deg so brått.
அதினால்தான் கண்ணிகள் உன்னைச் சுற்றிலுமிருக்கின்றன; திடீரென வரும் துன்பம் உன்னைத் திகிலூட்டுகிறது.
11 Ell’ vert du ikkje myrkret var, den flaum som fossar yver deg?
அதினால்தான் நீ பார்க்க முடியாத அளவு இருளாகவும் இருக்கிறது; வெள்ளமும் உன்னை மூடுகிறது.
12 Bur ikkje Gud i himmelhøgd, sjå øvste stjernor, høgt dei sit!
“வானத்தின் உன்னதங்களில் அல்லவோ இறைவன் இருக்கிறார்? மேலேயுள்ள நட்சத்திரங்களைப் பார்; அவை எவ்வளவு உயரத்தில் இருக்கின்றன.
13 Du segjer so: «Kva veit vel Gud? Kann attum skyerne han døma?
அப்படியிருந்தும் நீ, ‘இறைவனுக்கு என்ன தெரியும்? இப்படிப்பட்ட இருளின்வழியே அவர் நியாயந்தீர்க்கிறாரோ?
14 For skyer dimmer augo hans; han hev sin gang på himmelkvelven.»
வானமண்டலங்களில் அவர் உலாவுகையில் அடர்ந்த மேகங்கள் அவரை மூடுகின்றன; அதினால் அவர் எங்களைக் காண்கிறதில்லை’ என்கிறாய்.
15 Seg, vil du fylgja fortids-vegen, den stig som illverksmenner gjekk?
தீய மனிதர் சென்ற பழைய பாதையில் நீயும் நடப்பாயோ?
16 Dei som i utid tekne vart - og deira grunn flaut burt i flaum -
அவர்கள் தங்கள் காலம் வருமுன்பே இறந்துபோனார்கள்; அவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் வெள்ளம் புரண்டது.
17 som sagde til Gud: «Haldt du deg burte!» Kva skulde Allvald vel deim gjera?
அவர்கள் இறைவனிடம், ‘நீர் எங்களை விட்டுவிடும்! எல்லாம் வல்லவரால் எங்களுக்கு என்ன ஆகும்?’ என்றார்கள்.
18 Endå han signa deira hus - langt burt frå meg med gudlaus råd!
இருப்பினும், அவர் அவர்களை நன்மைகளால் நிரப்பினார்; நான் கொடியவரின் ஆலோசனைக்கு விலகி நிற்கிறேன்.
19 Rettvise folk det såg med gleda, og den skuldlause spotta deim:
அவர்களின் அழிவைக் கண்டு நேர்மையானவர்கள் மகிழ்கிறார்கள்; குற்றமற்றவர்கள் அவர்களைக் கேலிபண்ணி,
20 «Fiendarn’ våre gjekk til grunns! Sjå elden øydde det dei leivde!»
‘பகைவர்கள் அழிய, நெருப்பு செல்வத்தைச் சுட்டது’ என்கிறார்கள்.
21 Vert ven med honom, og få fred! So skal og lukka timast deg.
“இறைவனுக்குப் பணிந்து அவருடன் சமாதானமாயிரு; உனக்குச் செழிப்பு உண்டாகும்.
22 Og tak so lærdom av hans munn, og legg deg ordi hans på hjarta!
அவர் வாயிலிருந்து வரும் அறிவுறுத்தல்களை ஏற்றுக்கொள். அவருடைய வார்த்தைகளை உன் இருதயத்தில் பதித்துக்கொள்.
23 Vend um til Allvald, då du byggjest og jagar syndi frå ditt tjeld.
நீ கொடுமையை உன் கூடாரத்தைவிட்டு அகற்றி, எல்லாம் வல்லவரிடத்தில் திரும்பினால், உன் பழைய நிலைமையை அடைவாய்.
24 Kast gullet ditt i moldi ned - Ofir-gull millom bekkjesteinar.
நீ தூளைப்போல் பொன்னையும், ஆற்றுக் கற்களைப்போல் ஓப்பீரின் தங்கத்தையும் எண்ணிக்கொள்.
25 Allvald skal vera då ditt gull og haugar utav sylv for deg.
அப்பொழுது எல்லாம் வல்லவரே உனது தங்கமாகவும், உனக்குரிய சிறந்த வெள்ளியாகவும் இருப்பார்.
26 Då skal du frygda deg i Allvald, di åsyn lyfta upp til Gud.
அப்பொழுது, நீ நிச்சயமாய் எல்லாம் வல்லவரில் மகிழ்ச்சிகொண்டு, இறைவனை நோக்கி உன் முகத்தை உயர்த்துவாய்.
27 Og når du ropar, vil han høyra, so du kann halda det du lovar.
நீ அவரிடம் வேண்டுதல் செய்யும்போது, அவர் உனக்குச் செவிகொடுப்பார்; நீ பொருத்தனைகளையும் நிறைவேற்றுவாய்.
28 Det du deg etlar, skal du vinna, og ljos skal skina på din veg.
நீ தீர்மானிப்பது செய்யப்படும், உன் வழிகளிலும் ஒளி பிரகாசிக்கும்.
29 Gjeng vegen ned, du ropar: «Upp!» Han hjelpar den bljug-øygde mann.
மனிதர் தாழ்த்தப்படும்போது நீ அவரிடம், ‘அவர்களை உயர்த்தும்’ என்று சொன்னால், அவர் தாழ்ந்தோரைக் காப்பாற்றுவார்.
30 Ja, ikkje-skuldfri mann han bergar, frelst vert han ved di reine hand.»
அவர் குற்றமுள்ளவனையும்கூட விடுவிப்பார்; உன் கைகளின் தூய்மையின் நிமித்தம் அவன் விடுவிக்கப்படுவான்.”

< Jobs 22 >