< Apenbaring 15 >
1 Og jeg så et annet tegn i himmelen, stort og underfullt: syv engler som hadde de syv siste plager; for med dem er Guds vrede fullendt.
௧பின்பு, வானத்திலே பெரிதும் ஆச்சரியமுமான வேறொரு அடையாளமாகிய கடைசியான ஏழு வாதைகளையுடைய ஏழு தூதர்களைப் பார்த்தேன், அவைகளால் தேவனுடைய கோபம் முடிவிற்கு வந்தது.
2 Og jeg så likesom et glasshav blandet med ild; og dem som hadde seiret over dyret og dets billede og dets navns tall, så jeg stå ved glasshavet med Guds harper i hånd;
௨அன்றியும், அக்கினிக் கலந்த கண்ணாடிக் கடல்போல ஒரு கடலையும், மிருகத்திற்கும் அதின் உருவத்திற்கும் அதின் முத்திரைக்கும் அதின் பெயரின் எண்ணிற்கும் உள்ளாகாமல் ஜெயம் பெற்றவர்கள் தேவ சுரமண்டலங்களைப் பிடித்துக்கொண்டு அந்தக் கண்ணாடிக் கடலருகே நிற்கிறதையும் பார்த்தேன்.
3 og de sang Moses', Guds tjeners sang og Lammets sang og sa: Store og underfulle er dine gjerninger, Herre Gud, du allmektige! rettferdige og sanne er dine veier, du folkenes konge!
௩அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: “சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய செய்கைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
4 Hvem skulde ikke frykte, Herre, og ære ditt navn? Du alene er hellig, og alle folkene skal komme og tilbede for ditt åsyn, fordi dine rettferdige dommer er blitt åpenbaret.
௪கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருப்பார்கள்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா தேசத்து மக்களும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளிப்பட்டது” என்றார்கள்.
5 Og derefter så jeg, og templet med vidnesbyrdets telt i himmelen blev åpnet,
௫இவைகளுக்குப் பின்பு, நான் பார்த்தபோது, இதோ, பரலோகத்திலே சாட்சியின் கூடாரமாகிய தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது;
6 og de syv engler som hadde de syv plager, kom ut av templet, klædd i rent og skinnende lin og ombundet om brystet med gullbelter.
௬அந்த ஆலயத்திலிருந்து ஏழு வாதைகளையுடைய அந்த ஏழு தூதர்களும் பரிசுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடையணிந்து, மார்பில் பொற்கச்சைகளைக் கட்டிக்கொண்டு புறப்பட்டார்கள்.
7 Og et av de fire livsvesener gav de syv engler syv gullskåler fylt med Guds vrede, hans som lever i all evighet. (aiōn )
௭அப்பொழுது அந்த நான்கு ஜீவன்களில் ஒன்று, எல்லாக் காலங்களிலும் உயிரோடு இருக்கிற தேவனுடைய கோபாத்தினால் நிறைந்த ஏழு பொற்கலசங்களை அந்த ஏழு தூதர்களுக்குக் கொடுத்தது. (aiōn )
8 Og templet blev fylt med røk av Guds herlighet og av hans makt; og ingen kunde gå inn i templet før de syv englers syv plager var fullendt.
௮அப்பொழுது, தேவனுடைய மகிமையினாலும் அவருடைய வல்லமையினாலும் உண்டான புகையினாலே தேவனுடைய ஆலயம் நிறைந்தது; ஏழு தூதர்களுடைய ஏழு வாதைகளும் முடியும்வரைக்கும் ஒருவரும் தேவாலயத்திற்குள் செல்லமுடியவில்லை.