< Apenbaring 12 >
1 Og et stort tegn blev sett i himmelen: en kvinne, klædd med solen, og månen under hennes føtter, og på hennes hode en krone av tolv stjerner,
௧அன்றியும் ஒரு பெரிய அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஒரு பெண் சூரியனை அணிந்திருந்தாள், அவள் பாதங்களின் கீழே சந்திரனும், அவள் தலையின்மேல் பன்னிரண்டு நட்சத்திரங்களுள்ள கிரீடமும் இருந்தன.
2 og hun var fruktsommelig og skrek i barnsnød og fødsels-veer.
௨அவள் கர்ப்பவதியாக இருந்து, பிரசவவேதனையடைந்து, குழந்தைபெறும்படி கதறி அழுதாள்.
3 Og et annet tegn blev sett i himmelen, og se, en stor ildrød drage, som hadde syv hoder og ti horn, og på sine hoder syv kroner,
௩அப்பொழுது வேறொரு அடையாளம் வானத்திலே காணப்பட்டது; ஏழு தலைகளையும், பத்துக் கொம்புகளையும், தன் தலைகளின்மேல் ஏழு கிரீடங்களையுடைய சிவப்பான பெரிய இராட்சசப் பாம்பு இருந்தது.
4 og dens stjert drog tredjedelen av himmelens stjerner med sig og kastet dem på jorden. Og dragen stod foran kvinnen som skulde føde, for å sluke hennes barn når hun hadde født.
௪அதின் வால் வானத்தின் நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கை இழுத்து, அவைகளைப் பூமியில் விழத்தள்ளியது; பிரசவவேதனைப்படுகிற அந்தப் பெண் குழந்தைபெற்றவுடனே, அவளுடைய குழந்தையைக் கொன்றுபோடுவதற்காக அந்த இராட்சசப் பாம்பு அவளுக்கு முன்பாக நின்றது.
5 Og hun fødte et guttebarn, som skal styre alle hedningene med jernstav; og hennes barn blev bortrykket til Gud og til hans trone.
௫எல்லா தேசங்களையும் இரும்புக்கோலால் ஆளுகைசெய்யும் ஆண்பிள்ளையை அவள் பெற்றாள்; அவளுடைய குழந்தை தேவனிடத்திற்கும் அவருடைய சிங்காசனத்தினிடத்திற்கும் எடுத்துக்கொள்ளப்பட்டது.
6 Og kvinnen flydde ut i ørkenen, hvor hun har et sted som er gjort i stand til henne av Gud, forat de der skulde gi henne hennes føde i tusen to hundre og seksti dager.
௬அந்தப் பெண் வனாந்திரத்திற்கு ஓடிப்போனாள்; அவளை ஆயிரத்து இருநூற்றுஅறுபது நாட்கள் போஷிப்பதற்காக தேவனால் ஆயத்தமாக்கப்பட்ட இடம் அங்கே இருந்தது.
7 Og det blev en strid i himmelen: Mikael og hans engler tok til å stride mot dragen, og dragen stred, og dens engler.
௭வானத்திலே யுத்தம் உண்டானது; அந்த யுத்தத்தில் மிகாவேலும் அவனைச் சேர்ந்த தூதர்களும் இராட்சசப் பாம்போடு யுத்தம்பண்ணினார்கள்; இராட்சசப் பாம்பும் அதைச் சேர்ந்த தூதர்களும் யுத்தம்பண்ணியும் வெற்றி பெறமுடியவில்லை.
8 Men de maktet det ikke, heller ikke blev deres sted mere funnet i himmelen.
௮பரலோகத்தில் அவர்கள் இருந்த இடமும் காணாமல்போனது.
9 Og den store drage blev kastet ned, den gamle slange, han som kalles djevelen og Satan, han som forfører hele jorderike; han blev kastet ned på jorden, og hans engler blev kastet ned med ham.
௯உலகம் முழுவதையும் ஏமாற்றுகிறவன் பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட ஆரம்பத்தில் இருந்த பாம்பாகிய பெரிய இராட்சசப் பாம்பு தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதோடு அதைச் சேர்ந்த தூதர்களும் தள்ளப்பட்டார்கள்.
10 Og jeg hørte en høi røst i himmelen si: Fra nu av tilhører frelsen og styrken og riket vår Gud, og makten hans salvede; for våre brødres anklager er kastet ned, han som anklaget dem for vår Gud dag og natt.
௧0அப்பொழுது வானத்திலே ஒரு பெரியசத்தம் உண்டாகி: இப்பொழுது இரட்சிப்பும் வல்லமையும் நமது தேவனுடைய ராஜ்யமும், அவருடைய கிறிஸ்துவின் அதிகாரமும் உண்டாயிருக்கிறது; இரவும் பகலும் நம்முடைய தேவனுக்குமுன்பாக நம்முடைய சகோதரர்மேல் குற்றஞ்சாட்டும்படி அவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் தூக்கி எறியப்பட்டான்.
11 Og de har seiret over ham i kraft av Lammets blod og det ord de vidnet; og de hadde ikke sitt liv kjært, like til døden.
௧௧மரணம் சம்பவிக்கிறதாக இருந்தாலும் அதற்குத் தப்பிப்பதற்காக தங்களுடைய உயிரையும் பார்க்காமல், ஆட்டுக்குட்டியின் இரத்தத்தினாலும் தங்களுடைய சாட்சியின் வசனத்தினாலும் அவனை ஜெயித்தார்கள்.
12 Derfor fryd eder, I himler, og I som bor i dem! Ve jorden og havet! for djevelen er faret ned til eder i stor vrede, fordi han vet at han bare har en liten tid.
௧௨எனவே, பரலோகங்களே! அவைகளில் வசிக்கிறவர்களே! களிகூருங்கள். ஆனால், பூமியிலும் கடலிலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலம்மட்டும் இருக்கிறதைத் தெரிந்து, அதிக கோபப்பட்டு, உங்களிடம் இறங்கினதினால், உங்களுக்கு ஆபத்துவரும் என்று சொல்வதைக்கேட்டேன்.
13 Og da dragen så at den var kastet ned på jorden, forfulgte den kvinnen som hadde født gutten.
௧௩இராட்சசப் பாம்பானது தான் பூமியிலே தள்ளப்பட்டதை அறிந்து, அந்த ஆண் குழந்தையைப் பெற்ற பெண்ணைத் துன்பப்படுத்தினது.
14 Og den store ørns to vinger blev gitt til kvinnen forat hun skulde flyve ut i ørkenen til sitt sted, hvor hun får sin føde en tid og tider og en halv tid, borte fra slangens åsyn.
௧௪அந்தப் பெண் அந்தப் பாம்பின் முகத்திற்கு விலகி, ஒரு காலமும், காலங்களும், அரைக்காலமுமாகப் போஷிக்கப்படத்தக்கதாக வனாந்திரத்தில் உள்ள தன் இடத்திற்குப் பறந்துபோவதற்காக பெரிய கழுகின் இரண்டு சிறகுகள் அவளுக்குக் கொடுக்கப்பட்டது.
15 Og slangen sprutet av sin munn vann som en elv efter kvinnen, for å rive henne bort med elven;
௧௫அப்பொழுது அந்தப் பெண்ணை வெள்ளம் அடித்துக்கொண்டுபோகும்படி பாம்பானது தன் வாயிலிருந்து ஒரு நதிபோன்ற தண்ணீரை அவளுக்குப் பின்பாக ஊற்றிவிட்டது.
16 men jorden kom kvinnen til hjelp, og jorden åpnet sin munn og slukte elven som slangen sprutet av sin munn.
௧௬ஆனால், பூமியானது பெண்ணுக்கு உதவியாகத் தன் வாயைத் திறந்து, இராட்சசப் பாம்பு தன் வாயிலிருந்து ஊற்றின தண்ணீரை விழுங்கினது.
17 Og dragen blev vred på kvinnen og drog avsted for å føre krig mot de andre av hennes ætt, dem som holder Guds bud og har Jesu vidnesbyrd. Og jeg stod på sanden ved havet.
௧௭அப்பொழுது இராட்சசப் பாம்பு பெண்ணின்மேல் கோபப்பட்டு, தேவனுடைய கட்டளைகளைக் கடைபிடிக்கிறவர்களும், இயேசுகிறிஸ்துவைக்குறித்துச் சாட்சியை உடையவர்களுமாகிய அவளுடைய வம்சத்தின் மற்ற பிள்ளைகளோடு யுத்தம்பண்ணப் போனது.