< Salmenes 46 >

1 Til sangmesteren; av Korahs barn; efter Alamot; en sang. Gud er vår tilflukt og vår styrke, en hjelp i trengsler, funnet såre stor.
அலமோத் என்னும் கருவியில் வாசிக்கும்படி கொடுக்கப்பட்ட கோராகின் குடும்பத்தின் இராகத் தலைவனுக்கு, ஒரு பாடல். தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.
2 Derfor frykter vi ikke, om jorden omskiftes, og om fjell rokkes i havets hjerte,
ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுக்கடலில் சாய்ந்துபோனாலும்,
3 om dets bølger bruser og skummer, og fjell bever ved dets overmot. (Sela)
அதின் தண்ணீர்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக்கினால் மலைகள் அதிர்ந்தாலும், நாம் பயப்படமாட்டோம். (சேலா)
4 En strøm - dens bekker gleder Guds stad, den Høiestes hellige bolig.
ஒரு நதியுண்டு, அதின் நீரோடைகள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமான தேவன் தங்கும் பரிசுத்தஸ்தலத்தையும் சந்தோஷப்படுத்தும்.
5 Gud er midt i den, den skal ikke rokkes; Gud hjelper den når morgenen bryter frem.
தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது; அதிகாலையிலே தேவன் அதற்கு உதவி செய்வார்.
6 Folkeferd bruste, riker blev rokket; han lot sin røst høre, jorden smeltet.
தேசங்கள் கொந்தளித்தது, ராஜ்ஜியங்கள் தத்தளித்தது; அவர் தமது சத்தத்தை முழங்கச்செய்தார், பூமி உருகிப்போனது.
7 Herren, hærskarenes Gud, er med oss; Jakobs Gud er vår faste borg. (Sela)
சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா)
8 Kom, se Herrens gjerninger, som har gjort ødeleggelse på jorden!
பூமியிலே அழிவுகளை நடப்பிக்கிற யெகோவாவுடைய செய்கைகளை வந்துபாருங்கள்.
9 Han gjør ende på krigene over hele jorden, bryter buen sønder og hugger spydet av; vognene brenner han op med ild.
அவர் பூமியின் கடைசிவரை யுத்தங்களை ஓயச்செய்கிறார்; வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார்; இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார்.
10 Hold op og kjenn at jeg er Gud! Jeg er ophøiet iblandt folkene, ophøiet på jorden.
௧0நீங்கள் யுத்தம் செய்யாமலிருந்து, நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள் என்று தேவன் சொல்லுகிறார்; தேசங்களுக்குள்ளே உயர்ந்திருப்பேன், பூமியிலே உயர்ந்திருப்பேன்.
11 Herren, hærskarenes Gud, er med oss; Jakobs Gud er vår faste borg. (Sela)
௧௧சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர் (சேலா)

< Salmenes 46 >