< Salmenes 146 >
1 Halleluja! Min sjel, lov Herren!
௧அல்லேலூயா, என்னுடைய ஆத்துமாவே, யெகோவாவை துதி.
2 Jeg vil love Herren så lenge jeg lever; jeg vil lovsynge min Gud så lenge jeg er til.
௨நான் உயிரோடிருக்கும்வரை யெகோவாவை துதிப்பேன்; நான் உள்ளளவும் என் தேவனைப் புகழ்ந்து பாடுவேன்.
3 Sett ikke eders lit til fyrster, til et menneskebarn, hos hvem det ikke er frelse!
௩பிரபுக்களையும், இரட்சிக்கப் பெலனில்லாத மனிதர்களையும் நம்பவேண்டாம்.
4 Farer hans ånd ut, så vender han tilbake til sin jord; på den samme dag er det forbi med hans tankes råd.
௪அவனுடைய ஆவி பிரியும், அவன் தன்னுடைய மண்ணுக்குத் திரும்புவான்; அந்த நாளிலே அவனுடைய யோசனைகள் அழிந்துபோகும்.
5 Salig er den hvis hjelp er Jakobs Gud, hvis håp står til Herren, hans Gud,
௫யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய யெகோவாமேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.
6 som gjorde himmel og jord, havet og alt hvad i dem er, som er trofast til evig tid,
௬அவர் வானத்தையும் பூமியையும் கடல்களையும் அவைகளிலுள்ள அனைத்தையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர்.
7 som hjelper de undertrykte til deres rett, som gir de hungrige brød. Herren løser de bundne,
௭அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாக இருக்கிறவர்களுக்கு உணவுகொடுக்கிறார்; கட்டப்பட்டவர்களைக் யெகோவா விடுதலையாக்குகிறார்.
8 Herren åpner de blindes øine, Herren opreiser de nedbøiede, Herren elsker de rettferdige,
௮குருடர்களின் கண்களைக் யெகோவா திறக்கிறார்; விழுந்தவர்களைக் யெகோவா தூக்கிவிடுகிறார். நீதிமான்களைக் யெகோவா நேசிக்கிறார்.
9 Herren bevarer de fremmede; farløse og enker holder han oppe, men de ugudeliges vei gjør han kroket.
௯அந்நியர்களைக் யெகோவா காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கர்களின் வழியையோ கவிழ்த்துப் போடுகிறார்.
10 Herren skal være konge evindelig, din Gud, Sion, fra slekt til slekt. Halleluja!
௧0யெகோவா எல்லாக் காலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன்னுடைய தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்செய்கிறார். அல்லேலூயா.