< Salomos Ordsprog 11 >
1 Falsk vekt er en vederstyggelighet for Herren, men fullvektige lodder er ham til velbehag.
௧கள்ளத்தராசு யெகோவாவுக்கு அருவருப்பானது; சரியான நிறைகல்லோ அவருக்குப் பிரியம்.
2 Med overmot følger skam, men de ydmyke har visdom.
௨அகந்தை வந்தால் அவமானமும் வரும்; தாழ்ந்த சிந்தை உள்ளவர்களிடத்தில் ஞானம் உண்டு.
3 De opriktiges rettsinn leder dem, men de troløses forvendte sinn ødelegger dem.
௩செம்மையானவர்களுடைய உத்தமம் அவர்களை நடத்தும்; துரோகிகளின் மாறுபாடோ அவர்களைப் பாழாக்கும்.
4 Gods hjelper ikke på vredens dag, men rettferdighet frir fra døden.
௪கோபாக்கினை நாளில் செல்வம் உதவாது; நீதியோ மரணத்திற்குத் தப்புவிக்கும்.
5 Den ustraffeliges rettferdighet gjør hans vei jevn, men den ugudelige faller ved sin ugudelighet.
௫உத்தமனுடைய நீதி அவன் வழியைச் செம்மைப்படுத்தும்; துன்மார்க்கனோ தன்னுடைய துன்மார்க்கத்தினால் விழுவான்.
6 De opriktiges rettferdighet frelser, men de troløse fanges i sin egen ondskap.
௬செம்மையானவர்களுடைய நீதி அவர்களைத் தப்புவிக்கும்; துரோகிகளோ தங்களுடைய தீவினையிலே பிடிபடுவார்கள்.
7 Når et ugudelig menneske dør, blir hans håp til intet, og med det som de onde stunder efter, er det forbi.
௭துன்மார்க்கன் மரணமடையும்போது அவனுடைய நம்பிக்கை அழியும்; அக்கிரமக்காரர்களின் எதிர்பார்ப்பு கெட்டுப்போகும்.
8 Den rettferdige utfries av trengsel, og den ugudelige kommer i hans sted.
௮நீதிமான் இக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவான்; அவன் இருந்த இடத்திலே துன்மார்க்கன் வருவான்.
9 Med munnen ødelegger den gudløse sin næste, men ved sin kunnskap utfries de rettferdige.
௯மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.
10 Når det går de rettferdige godt, jubler byen, og når de ugudelige omkommer, lyder fryderop.
௧0நீதிமான்கள் நன்றாக இருந்தால் பட்டணம் சந்தோஷமாக இருக்கும்; துன்மார்க்கர்கள் அழிந்தால் கெம்பீரம் உண்டாகும்.
11 Ved de opriktiges velsignelse blir en by ophøiet, men de ugudeliges munn bryter den ned.
௧௧செம்மையானவர்களுடைய ஆசீர்வாதத்தினால் பட்டணம் நிலைபெற்று ஓங்கும்; துன்மார்க்கர்களுடைய வாயினால் அது இடிந்துவிழும்.
12 Den som taler foraktelig om sin næste, er uten forstand; men en forstandig mann tier.
௧௨மதிகெட்டவன் பிறனை அவமதிக்கிறான்; புத்திமானோ தன்னுடைய வாயை அடக்கிக்கொண்டிருக்கிறான்.
13 Den som går omkring som baktaler, åpenbarer hemmeligheter; men den som er trofast i ånden, skjuler saken.
௧௩புறங்கூறித் திரிகிறவன் இரகசியத்தை வெளிப்படுத்துகிறான்; ஆவியில் உண்மையுள்ளவனோ காரியத்தை அடக்குகிறான்.
14 Hvor det intet styre er, faller folket; men hvor det er mange rådgivere, der er frelse.
௧௪ஆலோசனையில்லாத இடத்தில் மக்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர்கள் உண்டானால் சுகம் உண்டாகும்.
15 Ille går det den som går i borgen for en fremmed; men den som skyr å gi håndslag, er sikker.
௧௫அந்நியனுக்காகப் பிணைப்படுகிறவன் மிகுந்த பாடுபடுவான்; பிணைப்படுவதை வெறுப்பவன் சுகமாக இருப்பான்.
16 En yndig kvinne vinner ære, og voldsmenn vinner rikdom.
௧௬நல்லொழுக்கமுள்ள பெண் மானத்தைக் காப்பாள்; பலசாலிகள் செல்வத்தைக் காப்பார்கள்.
17 En godgjørende mann gjør vel mot sig selv, men en hårdhjertet mann ødelegger sig.
௧௭தயவுள்ள மனிதன் தன்னுடைய ஆத்துமாவுக்கு நன்மை செய்துகொள்ளுகிறான்; கொடூரனோ தன்னுடைய உடலை அலைக்கழிக்கிறான்.
18 Den ugudelige vinner en lønn som svikter, men den som sår rettferdighet, får en lønn som varer.
௧௮துன்மார்க்கன் வீண்வேலையைச் செய்கிறான்; நீதியை விதைக்கிறவனோ மெய்ப்பலனைப் பெறுவான்.
19 Den som står fast i rettferdighet, ham blir det til liv; men den som jager efter ondt, volder sin egen død.
௧௯நீதி வாழ்வுக்கு ஏதுவாகிறதுபோல, தீமையைப் பின்தொடருகிறவன் மரணத்திற்கு ஏதுவாகிறான்.
20 En vederstyggelighet for Herren er de hvis hjerte er forvendt; men til velbehag for ham er de hvis vei er ustraffelig.
௨0மாறுபாடுள்ள இருதயமுடையவர்கள் யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்; உத்தம வழியில் நடக்கிறவர்களோ அவருக்குப் பிரியமானவர்கள்.
21 Visselig, den onde blir ikke ustraffet, men de rettferdiges ætt slipper unda.
௨௧கையோடு கைகோர்த்தாலும், கெட்டவன் தண்டனைக்குத் தப்பான்; நீதிமான்களுடைய சந்ததியோ விடுவிக்கப்படும்.
22 Som en gullring i et svinetryne er en fager kvinne som er uten forstand.
௨௨மதிகேடாக நடக்கிற அழகுள்ள பெண், பன்றியின் மூக்கிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமம்.
23 De rettferdiges attrå er bare det som godt er; de ugudelige har vrede i vente.
௨௩நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கர்களுடைய நம்பிக்கையோ கோபத்தின் தண்டனையாக முடியும்.
24 Den ene strør ut og får ennu mere; den andre holder tilbake mere enn rett er, og det blir dog bare fattigdom.
௨௪வாரி இறைத்தும் விருத்தியடைந்தவர்களும் உண்டு; அதிகமாக தனக்கென்று மட்டும் வைத்துக்கொண்டும் வறுமையடைபவர்களும் உண்டு.
25 Den som velsigner, skal trives, og den som lesker andre, han blir selv lesket.
௨௫உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
26 Den som holder korn tilbake, ham banner folket; men velsignelse kommer over dens hode som selger korn.
௨௬தானியத்தைக் கட்டிவைக்கிறவனை மக்கள் சபிப்பார்கள்; விற்கிறவனுடைய தலையின்மேல் ஆசீர்வாதம் தங்கும்.
27 Den som søker hvad godt er, søker det som er til behag; men den som higer efter ondt, over ham kommer det onde.
௨௭நன்மையை ஜாக்கிரதையுடன் தேடுகிறவன் தயையைப் பெறுவான்; தீமையைத் தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.
28 Den som setter sin lit til sin rikdom, han skal falle; men de rettferdige skal grønnes som løvet.
௨௮தன்னுடைய செல்வத்தை நம்புகிறவன் விழுவான்; நீதிமான்களோ துளிரைப்போல தழைப்பார்கள்.
29 Den som setter sitt hus i ulag, skal arve vind, og dåren blir en tjener for den vise.
௨௯தன்னுடைய வீட்டைக் கலைக்கிறவன் காற்றைச் சுதந்தரிப்பான்; மூடன் ஞானமுள்ளவனுக்கு அடிமையாவான்.
30 Den rettferdiges frukt er et livsens tre, og den vise fanger sjeler.
௩0நீதிமானுடைய பலன் ஜீவமரம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்.
31 Se, den rettferdige får sin lønn på jorden, hvor meget mere da den ugudelige og synderen!
௩௧இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.