< Matteus 10 >

1 Og han kalte sine tolv disipler til sig og gav dem makt over urene ånder, til å drive dem ut, og til å helbrede all sykdom og all skrøpelighet.
அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
2 Men dette er de tolv apostlers navn: Først Simon, som kalles Peter, og Andreas, hans bror; Jakob, Sebedeus' sønn, og Johannes, hans bror;
அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
3 Filip og Bartolomeus; Tomas og Matteus, tolderen; Jakob, Alfeus' sønn, og Lebbeus med tilnavnet Taddeus;
பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,
4 Simon Kananeus og Judas Iskariot, han som forrådte ham.
கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
5 Disse tolv sendte Jesus ut og bød dem: Gå ikke ut på veien til hedningene, og gå ikke inn i nogen av samaritanenes byer,
இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும்,
6 men gå heller til de fortapte får av Israels hus!
காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள்.
7 Og når I går avsted, da forkynn dette budskap: Himlenes rike er kommet nær!
போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
8 Helbred syke, opvekk døde, rens spedalske, driv ut onde ånder! For intet har I fått det, for intet skal I gi det.
வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.
9 I skal ikke ta gull eller sølv eller kobber med i eders belter,
உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
10 ikke skreppe til reisen, ikke to kjortler, ikke sko, ikke stav; for arbeideren er sin føde verd.
௧0வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.
11 Og hvor I kommer inn i en by eller landsby, der skal I spørre efter hvem som er det verd i den by; og bli hos ham til I drar bort derfra!
௧௧எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
12 Og når I kommer inn i et hus, da skal I hilse det;
௧௨ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
13 og dersom huset er det verd, da komme eders fred over det; men dersom det ikke er det verd, da vende eders fred tilbake til eder!
௧௩அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
14 Og om nogen ikke tar imot eder og ikke hører på eders ord, da gå ut av det hus eller den by, og ryst støvet av eders føtter!
௧௪எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
15 Sannelig sier jeg eder: Det skal gå Sodomas og Gomorras land tåleligere på dommens dag enn den by.
௧௫நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
16 Se, jeg sender eder som får midt iblandt ulver; vær derfor kloke som slanger og enfoldige som duer!
௧௬ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.
17 Men vokt eder for menneskene! for de skal overgi eder til domstolene og hudstryke eder i sine synagoger;
௧௭மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள்.
18 og I skal føres frem for landshøvdinger og konger for min skyld, til vidnesbyrd for dem og for hedningene.
௧௮அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
19 Men når de overgir eder, da vær ikke bekymret for hvorledes eller hvad I skal tale; for det skal gis eder i samme stund hvad I skal tale.
௧௯அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
20 For det er ikke I som taler, men det er eders Faders Ånd som taler i eder.
௨0பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
21 Og bror skal overgi bror til døden, og en far sitt barn, og barn skal reise sig mot foreldre og volde deres død;
௨௧சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
22 og I skal hates av alle for mitt navns skyld; men den som holder ut til enden, han skal bli frelst.
௨௨என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
23 Men når de forfølger eder i den ene by, da fly til den andre! for sannelig sier jeg eder: I skal ikke komme til ende med Israels byer før Menneskesønnen kommer.
௨௩ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
24 En disippel er ikke over sin mester, heller ikke en tjener over sin herre;
௨௪சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை.
25 det er nok for disippelen at han blir som sin mester, og tjeneren som sin herre; har de kalt husbonden Be'elsebul, hvor meget mere da hans husfolk!
௨௫சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
26 Frykt derfor ikke for dem! for intet er skjult som ikke skal bli åpenbaret, og intet er dulgt som ikke skal bli kjent;
௨௬அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
27 det jeg sier eder i mørket, det skal I si i lyset, og det som hviskes eder i øret, det skal I forkynne på takene.
௨௭நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
28 Og frykt ikke for dem som slår legemet ihjel, men ikke kan slå sjelen ihjel; men frykt heller for ham som kan ødelegge både sjel og legeme i helvede! (Geenna g1067)
௨௮ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
29 Selges ikke to spurver for en øre? Og ikke en av dem faller til jorden uten at eders Fader vil.
௨௯ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது.
30 Men endog hårene på eders hode er tellet alle sammen.
௩0உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
31 Frykt derfor ikke! I er mere enn mange spurver.
௩௧ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
32 Derfor, hver den som kjennes ved mig for menneskene, ham skal også jeg kjennes ved for min Fader i himmelen;
௩௨மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன்.
33 men den som fornekter mig for menneskene, ham skal også jeg fornekte for min Fader i himmelen.
௩௩மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
34 I må ikke tro at jeg er kommet for å sende fred på jorden; jeg er ikke kommet for å sende fred, men sverd.
௩௪பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன்.
35 For jeg er kommet for å sette splid mellem en mann og hans far, og mellem en datter og hennes mor, og mellem en svigerdatter og hennes svigermor,
௩௫எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
36 og en manns husfolk skal bli hans fiender.
௩௬ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
37 Den som elsker far eller mor mere enn mig, er mig ikke verd, og den som elsker sønn eller datter mere enn mig, er mig ikke verd,
௩௭தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
38 og den som ikke tar sitt kors og følger efter mig, er mig ikke verd.
௩௮தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
39 Den som finner sitt liv, skal miste det, og den som mister sitt liv for min skyld, skal finne det.
௩௯தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
40 Den som tar imot eder, tar imot mig, og den som tar imot mig, tar imot ham som sendte mig.
௪0உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
41 Den som tar imot en profet fordi han er en profet, skal få en profets lønn, og den som tar imot en rettferdig fordi han er rettferdig, skal få en rettferdigs lønn.
௪௧தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான்.
42 Og den som gir én av disse små endog bare et beger koldt vann å drikke fordi han er disippel, sannelig sier jeg eder: Han skal ingenlunde miste sin lønn.
௪௨சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

< Matteus 10 >