< 3 Mosebok 7 >
1 Og dette er loven om skyldofferet: Det er høihellig.
௧“குற்றநிவாரணபலியின் விதிமுறைகள் என்னவென்றால், அது மகா பரிசுத்தமானது.
2 På det sted hvor brennofferet slaktes, skal skyldofferet slaktes, og dets blod skal sprenges rundt om på alteret.
௨சர்வாங்க தகனபலி கொல்லப்படும் இடத்தில், குற்றநிவாரணபலியும் கொல்லப்படவேண்டும்; அதின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் சுற்றிலும் தெளித்து,
3 Og alt fettet skal ofres, både halen og fettet som dekker innvollene,
௩அதினுடைய கொழுப்பு முழுவதையும், அதின் வாலையும், குடல்களை மூடிய கொழுப்பையும்,
4 og begge nyrene med det fett som er på dem, ved lendene, og den store leverlapp; den skal tas ut sammen med nyrene.
௪இரண்டு சிறுநீரகங்களையும், அவைகளின்மேல் சிறுகுடல்களினிடத்திலிருக்கிற கொழுப்பையும், சிறுநீரகங்களோடேகூடக் கல்லீரலின்மேல் இருக்கிற ஜவ்வையும் எடுத்துச் செலுத்துவானாக.
5 Og presten skal brenne det på alteret som ildoffer til Herren; det er et skyldoffer.
௫இவைகளை ஆசாரியன் பலிபீடத்தின்மேல் யெகோவாவுக்குத் தகனபலியாக எரிக்கக்கடவன்; அது குற்றநிவாரணபலி.
6 Alt mannkjønn blandt prestene kan ete det; på et hellig sted skal det etes; det er høihellig.
௬ஆசாரியர்களில் ஆண்மக்கள் அனைவரும் அதைச் சாப்பிடுவார்களாக; அது பரிசுத்த ஸ்தலத்தில் சாப்பிடப்படவேண்டும்; அது மகா பரிசுத்தமானது.
7 Med skyldofferet skal det være likesom med syndofferet; det gjelder én lov for begge; den prest som gjør soning med det, ham skal det tilhøre.
௭பாவநிவாரணபலி எப்படியோ குற்றநிவாரணபலியும் அப்படியே; அந்த இரண்டிற்கும் விதிமுறை ஒன்றே; அதினாலே பாவநிவிர்த்தி செய்த ஆசாரியனை அது சேரும்.
8 Når en prest ofrer brennoffer for nogen, så skal huden av det brennoffer han har ofret, tilhøre den samme prest.
௮ஒருவருடைய சர்வாங்க தகனபலியைச் செலுத்தின ஆசாரியன் தான் செலுத்தின தகனபலியின் தோலைத் தனக்காக வைத்துக்கொள்ளவேண்டும்.
9 Og ethvert matoffer som bakes i ovn, eller som stekes i panne eller på helle, skal tilhøre den prest som ofrer det.
௯அடுப்பிலே வேகவைக்கப்பட்டதும், பாத்திரத்திலும் தட்டின்மேலும் சமைக்கப்பட்டதுமான உணவுபலி அனைத்தும் அதைச் செலுத்துகிற ஆசாரியனுடையவைகளாக இருக்கும்.
10 Og ethvert matoffer som er blandet med olje, eller som er tørt, skal høre alle Arons sønner til, den ene som den andre.
௧0எண்ணெயிலே பிசைந்ததும் எண்ணெயிலே பிசையாததுமான சகல உணவுபலியும் ஆரோனுடைய மகன்கள் அனைவருக்கும் சரிபங்காகச் சேரவேண்டும்.
11 Og dette er loven om takkofferet som ofres til Herren:
௧௧“யெகோவாவுக்குச் செலுத்துகிற சமாதானபலிகளின் விதிமுறைகள் என்னவென்றால்,
12 Dersom nogen ofrer det til lovprisning, så skal han foruten slaktofferet som bæres frem til lovprisning, ofre usyrede kaker med olje i og usyrede brødleiver smurt med olje, og fint mel knadd til kaker med olje i.
௧௨அதை நன்றிபலியாகச் செலுத்துவானானால், அவன் நன்றிபலியோடுகூட எண்ணெயிலே பிசைந்த புளிப்பில்லாத அதிரசங்களையும், எண்ணெய் பூசப்பட்ட புளிப்பில்லாத அடைகளையும், எண்ணெயிலே பிசைந்து வறுக்கப்பட்ட மெல்லிய மாவினால் செய்த அதிரசங்களையும் படைக்கக்கடவன்.
13 Dette er den offergave han skal bære frem foruten det slaktoffer som bæres frem til takk og lovprisning, og dessuten syrede kaker.
௧௩அவைகளைப் படைக்கிறதும் அல்லாமல், புளித்தமாவினால் செய்த அப்பத்தையும், தன்னுடைய சமாதானபலியாகிய நன்றிபலியோடுகூட படைக்கவேண்டும்.
14 Av dette offer skal han bære frem én kake av hvert slag som gave til Herren; det skal tilhøre presten som sprenger takkofferets blod på alteret.
௧௪அந்தப் படைப்பு முழுவதிலும் வகைக்கு ஒவ்வொன்றை எடுத்துக் யெகோவாவுக்கு ஏறெடுத்துப் படைக்கும் பலியாகச் செலுத்துவானாக; அது சமாதானபலியின் இரத்தத்தைத் தெளித்த ஆசாரியனுடையதாகும்.
15 Kjøttet av et takkoffer som bæres frem til lovprisning, skal etes på den dag det ofres; intet av det skal bli liggende til om morgenen.
௧௫சமாதானபலியாகிய நன்றிபலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றையதினமே சாப்பிடப்படவேண்டும்; அதில் ஒன்றும் விடியற்காலம்வரை வைக்கப்படக்கூடாது.
16 Dersom nogens slaktoffer er et lovet offer eller et frivillig offer, skal det etes på den dag det ofres; men det som levnes, kan etes den næste dag.
௧௬அவன் செலுத்தும் பலி பொருத்தனையாகவோ உற்சாகபலியாகவோ இருக்குமானால், அது செலுத்தப்படும் நாளிலும், அதில் மீதியானது மறுநாளிலும் சாப்பிடப்படலாம்.
17 Men hvad som enda blir tilovers av slaktofferets kjøtt, skal på den tredje dag brennes op med ild.
௧௭பலியின் மாம்சத்தில் மீதியாக இருக்கிறது மூன்றாம் நாளில் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
18 Om nogen på den tredje dag eter av takkofferets kjøtt, da har Herren ikke velbehag i offeret; det skal ikke regnes den som ofret det, til gode, det skal være en vederstyggelighet, og den som eter av det, gjør en misgjerning som han kommer til å bøte for.
௧௮சமாதானபலியின் மாம்சத்தில் மீதியானது மூன்றாம் நாளில் சாப்பிடப்படுமானால், அது அங்கீகரிக்கப்படாது; அதைச் செலுத்தினவனுக்கு அது பலிக்காது; அது அருவருப்பாயிருக்கும்; அதைச் சாப்பிடுகிறவன் தன் அக்கிரமத்தைச் சுமப்பான்.
19 Kjøtt som kommer nær noget urent, skal ikke etes, det skal brennes op med ild; ellers kan alle som er rene, ete av kjøttet.
௧௯“தீட்டான எந்த பொருளிலாவது அந்த மாம்சம் பட்டதானால் அது சாப்பிடப்படாமல் நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது; மற்ற மாம்சத்தையோ சுத்தமாக இருக்கிறவனெவனும் சாப்பிடலாம்.
20 Men den som eter kjøtt av Herrens takkoffer mens det er noget urent på ham, han skal utryddes av sitt folk.
௨0ஒருவன் தீட்டுள்ளவனாக இருக்கும்போது யெகோவாவுடைய சமாதானபலியின் மாம்சத்தைச் சாப்பிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி வெட்டுண்டுபோவான்.
21 Og når nogen rører ved noget urent, enten det er et menneskes urenhet eller et urent dyr eller noget annet urent og vederstyggelig, og så eter av kjøttet av Herrens takkoffer, da skal han utryddes av sitt folk.
௨௧மனிதர்களுடைய தீட்டையாவது, தீட்டான மிருகத்தையாவது, அருவருக்கப்படத்தக்க தீட்டான மற்ற எந்த பொருளையாவது ஒருவன் தொட்டிருந்து, யெகோவாவுடைய சமாதானபலியின் மாம்சத்திலே சாப்பிட்டால், அவன் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்” என்றார்.
22 Og Herren talte til Moses og sa:
௨௨பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
23 Tal til Israels barn og si: I skal ikke ete fett av okse eller får eller gjet.
௨௩“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், மாடு, ஆடு, வெள்ளாடு என்பவைகளின் கொழுப்பை நீங்கள் சாப்பிடக்கூடாது.
24 Fettet av et selvdødt dyr eller av et sønderrevet dyr kan brukes til alle slags arbeid; men ete det må I ikke;
௨௪தானாகச் செத்த மிருகத்தின் கொழுப்பையும், தாக்கப்பட்ட மிருகத்தின் கொழுப்பையும் பலவித வேலைகளுக்குப் பயன்படுத்தலாம்; ஆனாலும் நீங்கள் அதை ஒருபோதும் சாப்பிடக்கூடாது.
25 for hver den som eter fettet av noget dyr som det ofres ildoffer av til Herren, han skal utryddes av sitt folk.
௨௫யெகோவாவுக்குத் தகனபலியாகச் செலுத்தப்படும் மிருகத்தின் கொழுப்பைச் சாப்பிடுகிற எந்த ஆத்துமாவும் தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்.
26 Og blod skal I ikke ete, hverken av fugl eller fe, hvor I så bor.
௨௬உங்கள் குடியிருப்புகளில் எங்கும் யாதொரு பறவையின் இரத்தத்தையாவது, யாதொரு மிருகத்தின் இரத்தத்தையாவது சாப்பிடக்கூடாது.
27 Enhver som nogensinne eter blod, han skal utryddes av sitt folk.
௨௭எவ்வித இரத்தத்தையாவது சாப்பிடுகிற எவனும் தன் மக்களில் இல்லாதபடி அறுப்புண்டுபோவான் என்று சொல்” என்றார்.
28 Og Herren talte til Moses og sa:
௨௮பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
29 Tal til Israels barn og si: Den som ofrer sitt takke-slaktoffer til Herren, han skal bære frem for Herren sin offergave av sitt takke-slaktoffer.
௨௯“நீ இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், யெகோவாவுக்குச் சமாதானபலி செலுத்துகிறவன் தான் செலுத்தும் சமாதானபலியைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டுவருவானாக.
30 Med egne hender skal han bære frem Herrens ildoffer; både fettet og brystet skal han bære frem, og brystet skal svinges for Herrens åsyn.
௩0யெகோவாவுக்குத் தகனபலியாகப் படைப்பவைகளை அவனே கொண்டுவரவேண்டும்; மார்புப்பகுதியையும் அதனுடன் அதின்மேல் வைத்த கொழுப்பையும் யெகோவாவுடைய சந்நிதியில் அசைவாட்டும் பலியாக அசைவாட்டும்படிக் கொண்டுவரக்கடவன்.
31 Og presten skal brenne fettet på alteret; men brystet skal høre Aron og hans sønner til.
௩௧அப்பொழுது ஆசாரியன் அந்தக் கொழுப்பைப் பலிபீடத்தின்மேல் எரிக்கவேண்டும்; மார்புப்பகுதி ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்.
32 Og det høire lår skal I gi presten som gave av eders takkoffer.
௩௨உங்கள் சமாதானபலிகளில் வலது முன்னந்தொடையை ஏறெடுத்துப்படைக்கும் பலியாகப் படைக்கும்படி ஆசாரியனிடத்தில் கொடுப்பீர்களாக.
33 Den av Arons sønner som ofrer takkoffer-blodet og fettet, han skal ha det høire lår som sin del;
௩௩ஆரோனுடைய மகன்களில், சமாதானபலியின் இரத்தத்தையும் கொழுப்பையும் செலுத்துகிறவனுக்கு, வலது முன்னந்தொடை பங்காகச் சேரும்.
34 for svinge-brystet og løfte-låret har jeg tatt fra Israels barn av deres takke-slaktoffer og gitt til Aron, presten, og til hans sønner som en evig rettighet de kan kreve av Israels barn.
௩௪இஸ்ரவேல் மக்களின் சமாதானபலிகளில் அசைவாட்டும் மார்புப்பகுதியையும் ஏறெடுத்துப்படைக்கும் முன்னந்தொடையையும் நான் அவர்கள் கையில் வாங்கி, அவைகளை ஆசாரியனாகிய ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் இஸ்ரவேல் மக்களுக்குள் இருக்கும் நிரந்தரமான கட்டளையாகக் கொடுத்தேன் என்று சொல் என்றார்.
35 Dette er Arons del og hans sønners del av Herrens ildoffer, som gis dem på den dag de føres frem for å tjene Herren som prester,
௩௫“யெகோவாவுக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படி ஆரோனும் அவனுடைய மகன்களும் நியமிக்கப்பட்ட நாளிலே, இது அபிஷேகம் செய்யப்பட்ட அவர்களுக்குக் யெகோவாவுடைய தகனபலிகளில் கிடைக்கும்படி உண்டான கட்டளை.
36 den del som Herren befalte skulde gis dem av Israels barn på den dag de salves, en evig rettighet, fra slekt til slekt.
௩௬இப்படி அவர்களுக்கு இஸ்ரவேல் மக்கள் தங்கள் தலைமுறைதோறும் நிரந்தரமான நியமமாகக் கொடுக்கும்படிக் யெகோவா அவர்களை அபிஷேகம்செய்த நாளிலே கட்டளையிட்டார்.
37 Dette er loven om brennofferet, om matofferet og om syndofferet og om skyldofferet og om innvielsesofferet og om takkofferet,
௩௭சர்வாங்கதகனபலிக்கும் உணவுபலிக்கும் பாவநிவாரணபலிக்கும் குற்றநிவாரணபலிக்கும் பிரதிஷ்டைபலிகளுக்கும் சமாதானபலிகளுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே.
38 den som Herren gav Moses på Sinai berg den dag han bød Israels barn å ofre Herren sine offer i Sinai ørken.
௩௮யெகோவாவுக்குத் தங்கள் பலிகளைச் செலுத்தவேண்டும் என்று அவர் இஸ்ரவேல் மக்களுக்குச் சீனாய் வனாந்திரத்திலே கற்பிக்கும்போது இவைகளை மோசேக்குச் சீனாய்மலையில் கட்டளையிட்டார்.