< Jeremias 35 >
1 Dette er det ord som kom til Jeremias fra Herren i Judas konge Jojakims, Josias' sønns dager:
௧யோசியாவின் மகனாகிய யோயாக்கீம் என்னும் யூதா ராஜாவின் நாட்களில் எரேமியாவுக்குக் யெகோவாவால் உண்டான வார்த்தை:
2 Gå til rekabittenes slekt og tal til dem og før dem inn i Herrens hus, i et av kammerne, og gi dem vin å drikke!
௨நீ ரேகாபியருடைய வீட்டுக்குப்போய், அவர்களுடன் பேசி, அவர்களைக் யெகோவாவுடைய ஆலயத்தின் அறைகளில் ஒன்றில் அழைத்துவந்து, அவர்களுக்குத் திராட்சைரசம் குடிக்கக்கொடு என்றார்.
3 Og jeg tok Ja'asanja, sønn av Jirmeja, sønn av Habasinja, og hans brødre og alle hans sønner og hele rekabittenes slekt,
௩அப்பொழுது நான் அபசினியாவின் மகனாகிய எரேமியாவுக்கு மகனான யசினியாவையும், அவனுடைய சகோதரரையும், அவனுடைய மகன்கள் எல்லோரையும், ரேகாபியருடைய குடும்பத்தார் அனைவரையும் அழைத்து;
4 og jeg førte dem inn i Herrens hus, i det kammer som tilhørte sønnene til den Guds mann Hanan, Jigdaljas sønn, og som lå ved siden av høvdingenes kammer, ovenover dørvokteren Ma'asejas, Sallums sønns kammer.
௪யெகோவாவுடைய ஆலயத்தில் பிரபுக்களுடைய அறையின் அருகிலும், வாசலைக்காக்கிற சல்லூமின் மகனாகிய மாசெயாவினுடைய அறையின்மேலுமுள்ள இத்தலியாவின் மகனும் தேவனுடைய மனிதனுமாகிய ஆனான் என்பவனின் மகன்களுடைய அறையில் அவர்களை அழைத்துக்கொண்டுவந்து,
5 Og jeg satte frem for rekabittenes slekt skåler fulle av vin, og begere, og jeg sa til dem: Drikk vin!
௫திராட்சைரசத்தினால் நிரப்பப்பட்ட குடங்களையும் கிண்ணங்களையும் ரேகாபியருடைய முன்னோர்களைச் சேர்ந்த மக்களின் முன்னே வைத்து, அவர்களை நோக்கி: திராட்சைரசம் குடியுங்கள் என்றேன்.
6 Men de sa: Vi vil ikke drikke vin; for vår far Jonadab, Rekabs sønn, har gitt oss det bud: I skal aldri drikke vin, hverken I eller eders barn,
௬அதற்கு அவர்கள்: நாங்கள் திராட்சைரசம் குடிக்கிறதில்லை; ஏனென்றால், ரேகாபின் மகனும் எங்களுடைய தகப்பனுமாகிய யோனதாப், நீங்கள் அந்நியர்களாய்த் தங்குகிற தேசத்தில் நீடித்திருப்பதற்கு,
7 og I skal ikke bygge hus og ikke så korn og ikke plante vingård eller eie noget sådant; men i telt skal I bo alle eders dager, så I kan leve lenge i det land I bor i som fremmede.
௭நீங்களும் உங்கள் பிள்ளைகளும் என்றென்றைக்கும் திராட்சைரசம் குடிக்காமலும், வீட்டைக் கட்டாமலும், விதையை விதைக்காமலும், திராட்சைத்தோட்டத்தை நாட்டாமலும், அதைக் கையாளாமலும், உங்களுடைய எல்லா நாட்களிலும் கூடாரங்களில் குடியிருப்பீர்களாக என்று எங்களுக்குக் கட்டளையிட்டார்.
8 Og vi adlød vår far Jonadab, Rekabs sønn, i alt han bød oss - at vi aldri skulde drikke vin, hverken vi eller våre hustruer eller våre sønner eller våre døtre,
௮அப்படியே எங்களுடைய எல்லா நாட்களிலும் நாங்களும் எங்கள் பெண்களும் எங்கள் மகன்களும் எங்கள் மகள்களும் திராட்சைரசம் குடிக்காமலும்,
9 og ikke bygge oss hus å bo i og ikke ha vingård eller aker og ikke så korn.
௯நாங்கள் குடியிருக்க வீடுகளைக் கட்டாமலும், ரேகாபின் மகனாகிய எங்களுடைய தகப்பன் யோனதாபின் சத்தத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறோம்; எங்களுக்குத் திராட்சைத்தோட்டமும் வயலும் விதைப்புமில்லை.
10 Og vi bodde i telt og var lydige og gjorde alt som vår far Jonadab hadde pålagt oss.
௧0நாங்கள் கூடாரங்களில் குடியிருந்து, எங்கள் தகப்பனாகிய யோனதாப் எங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் கீழ்ப்படிந்து செய்துவந்தோம்.
11 Men da Babels konge Nebukadnesar drog op mot landet, da sa vi: Kom og la oss dra inn i Jerusalem, så vi kan slippe unda kaldeernes og syrernes hærer! Og så tok vi bolig i Jerusalem.
௧௧ஆனாலும் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் இந்தத் தேசத்தில் வந்தபோது, நாம் கல்தேயருடைய படைக்கும் சீரியருடைய படைக்கும் தப்பிக்க எருசலேமுக்குப் போவோம் வாருங்கள் என்று சொன்னோம்; அப்படியே எருசலேமில் தங்கியிருக்கிறோம் என்றார்கள்.
12 Da kom Herrens ord til Jeremias, og det lød så:
௧௨அப்பொழுது யெகோவாவுடைய வார்த்தை எரேமியாவுக்கு உண்டாகி, அவர்:
13 Så sier Herren, hærskarenes Gud, Israels Gud: Gå og si til Judas menn og til Jerusalems innbyggere: Vil I ikke ta imot tukt og lyde mine ord? sier Herren.
௧௩இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால், நீ போய், யூதாவின் மனிதரையும் எருசலேமின் மக்களையும் நோக்கி: நீங்கள் என் வார்த்தைகளைக் கேட்டு, புத்தியை ஏற்றுக்கொள்ளுகிறதில்லையோ என்று யெகோவா சொல்லுகிறார்.
14 Jonadabs, Rekabs sønns bud er blitt holdt, de som han gav sine barn, at de ikke skulde drikke vin, og like til denne dag har de ikke drukket vin, men lydt sin fars bud. Og jeg har talt til eder tidlig og sent, men I har ikke adlydt mig.
௧௪திராட்சைரசம் குடிக்காமல், ரேகாபின் மகனாகிய யோனதாப் தன் மகன்களுக்குக் கட்டளையிட்ட வார்த்தைகள் கைக்கொள்ளப்பட்டுவருகிறது; அவர்கள் இந்நாள்வரை அதைக் குடிக்காமல், தங்கள் தகப்பனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படிகிறார்கள்; ஆனாலும் நான் உங்களுக்கு ஏற்கனவே சொல்லிக்கொண்டேயிருந்தும், எனக்குக் கீழ்ப்படியாமற்போனீர்கள்.
15 Og jeg sendte til eder alle mine tjenere, profetene, tidlig og sent, og sa: Vend om, hver fra sin onde vei, og bedre eders gjerninger og følg ikke andre guder for å tjene dem! Så skal I få bo i det land jeg har gitt eder og eders fedre. Men I vendte ikke eders øre til og adlød mig ikke.
௧௫நீங்கள் அந்நிய தெய்வங்களை வணங்கி அவர்களைப் பின்பற்றாமல், அவனவன் தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் நடக்கையைச் சீர்திருத்துங்கள், அப்பொழுது உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் நான் கொடுத்த தேசத்தில் குடியிருப்பீர்கள் என்று சொல்லி, தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்திற்கு ஏற்கனவே அனுப்பிக்கொண்டிருந்தும், நீங்கள் கேட்காமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும் போனீர்கள்.
16 Ja, Jonadabs, Rekabs sønns barn har holdt de bud som deres far gav dem; men dette folk har ikke adlydt mig.
௧௬இப்போதும், ரேகாபின் மகனாகிய யோனதாபின் மக்கள் தங்கள் தகப்பன் தங்களுக்குக் கட்டளையிட்ட கற்பனையைக் கைக்கொண்டிருக்கும்போது, இந்த மக்கள் எனக்குக் கீழ்ப்படியாமற் போனபடியினாலும்,
17 Derfor sier Herren, hærskarenes Gud, Israels Gud, så: Se, jeg lar komme over Juda og over alle Jerusalems innbyggere all den ulykke jeg har truet dem med, fordi de ikke vilde høre når jeg talte til dem, og ikke svarte når jeg kalte på dem.
௧௭இதோ, நான் அவர்களிடத்தில் பேசியும் அவர்கள் கேளாமலும், நான் அவர்களை நோக்கிக் கூப்பிட்டும் அவர்கள் மறுஉத்திரவு கொடுக்காமலும் போனதினாலும், யூதாவின்மேலும் எருசலேமின் குடிமக்கள் அனைவரின்மேலும் நான் அவர்களுக்கு விரோதமாகச் சொன்ன எல்லாத் தீங்கையும் வரச்செய்வேன் என்று இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
18 Men til rekabittenes slekt sa Jeremias: Så sier Herren, hærskarenes Gud, Israels Gud: Fordi I har lydt eders far Jonadabs ord og holdt alle hans bud og i alt gjort som han bød eder,
௧௮பின்னும் எரேமியா ரேகாபியருடைய குடும்பத்தாரை நோக்கி: நீங்கள் உங்கள் தகப்பனாகிய யோனதாபின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து, அவனுடைய கற்பனைகளையெல்லாம் கைக்கொண்டு, அவன் உங்களுக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய்துவந்தீர்களென்று, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார்.
19 derfor sier Herren, hærskarenes Gud, Israels Gud, så: Det skal aldri fattes en mann av Jonadabs, Rekabs sønns ætt som skal stå for mitt åsyn.
௧௯ஆகவே எல்லா நாட்களிலும் எனக்கு முன்பாக நிற்கத் தகுதியான மனிதன் ரேகாபின் மகனாகிய யோனதாபுக்கு இல்லாமற்போவதில்லையென்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் யெகோவா சொல்லுகிறார் என்றான்.