< Jeremias 18 >
1 Dette er det ord som kom til Jeremias fra Herren:
௧யெகோவாவால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
2 Stå op og gå ned til pottemakerens hus, og der vil jeg la dig høre mine ord.
௨நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ; அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார்.
3 Og jeg gikk ned til pottemakerens hus, og se, han gjorde sitt arbeid på skiven;
௩அப்படியே நான் குயவன் வீட்டிற்குப் போனேன்; இதோ, அவன் திரிகையினால் வனைந்துகொண்டிருந்தான்.
4 og når det kar han gjorde, blev mislykket, som det kan gå med leret i pottemakerens hånd, så gjorde han det om igjen til et annet kar, slik som han vilde ha det.
௪குயவன் வனைந்துகொண்டிருந்த மண்பாத்திரம் அவன் கையிலே கெட்டுப்போனது; அப்பொழுது அதைச் சரியாக செய்வதற்கு, தன் பார்வைக்குச் சரியாக தோன்றுகிற விதத்தில் குயவன் அதைத் திரும்ப வேறு பாத்திரமாக வனைந்தான்.
5 Og Herrens ord kom til mig, og det lød så:
௫அப்பொழுது யெகோவாவுடைய வசனம் எனக்கு உண்டாகி, அவர்:
6 Skulde jeg ikke kunne gjøre med eder, Israels hus, som denne pottemaker? sier Herren; se, som leret er i pottemakerens hånd, således er I i min hånd, Israels hus!
௬இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று யெகோவா சொல்லுகிறார்; இதோ, இஸ்ரவேல் வீட்டாரே, களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்.
7 En gang taler jeg om et folk og et rike, at jeg vil rykke op og rive ned og ødelegge;
௭பிடுங்குவேன், இடிப்பேன், அழிப்பேன் என்று நான் ஒரு தேசத்திற்கு விரோதமாகவும், ஒரு ராஜ்யத்திற்கு விரோதமாகவும் சொன்ன உடனே,
8 men dersom det folk som jeg har talt om, vender om fra sin ondskap, da angrer jeg det onde som jeg hadde tenkt å gjøre mot det.
௮நான் விரோதமாய்ப் பேசின அந்த தேசத்தார் தங்கள் தீமையைவிட்டுத் திரும்பினால், நானும் அவர்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாமல், மனம் மாறுவேன்.
9 Og en annen gang taler jeg om et folk og om et rike, at jeg vil bygge og plante;
௯கட்டுவேன், நாட்டுவேன் என்றும் ஒரு தேசத்தையும் ஒரு ராஜ்யத்தையும் குறித்து நான் சொல்லுகிறதுமுண்டு.
10 men gjør det da det som er ondt i mine øine, så det ikke hører på min røst, da angrer jeg det gode som jeg hadde tenkt å ville gjøre mot det.
௧0அவர்கள் என் சத்தத்தைக் கேளாமல், என் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்வார்களென்றால், நானும் அவர்களுக்கு அருள் செய்வேன் என்று சொன்ன நன்மையைச் செய்யாமல், மனம் மாறுவேன்.
11 Og si nu til Judas menn og til Jerusalems innbyggere: Så sier Herren: Se, jeg emner på en ulykke for eder og uttenker et ondt råd mot eder; vend om, hver fra sin onde vei, og bedre eders veier og eders gjerninger!
௧௧இப்பொழுதும், நீ யூதாவின் மனிதரையும் எருசலேமின் குடிமக்களையும் நோக்கி: இதோ, நான் உங்களுக்கு விரோதமாக ஒரு தீங்கை ஏற்படுத்தி, உங்களுக்கு விரோதமாக ஒரு காரியத்தைத் திட்டமிடுகிறேன்; ஆகையால், உங்களில் ஒவ்வொருவரும் தன்தன் பொல்லாத வழியைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் செயல்களையும் ஒழுங்குபடுத்துங்களென்று யெகோவா உரைக்கிறாரென்று சொல்.
12 Men de sier: Du taler forgjeves! Våre egne tanker vil vi følge, og enhver av oss vil følge sitt onde, hårde hjerte.
௧௨ஆனாலும் அவர்கள்: அது முடியாத காரியம், நாங்கள் எங்கள் யோசனைகளின்படியே நடந்து, அவரவர் தம்தம் பொல்லாத இருதயத்தின் கடினத்தின்படியே செய்வோம் என்கிறார்கள்.
13 Derfor sier Herren så: Spør blandt hedningefolkene: Hvem har hørt slikt? Grufulle ting har jomfruen Israel gjort.
௧௩ஆகையால் யெகோவா சொல்லுகிறார்: இப்படிப்பட்டவைகளைக் கேள்விப்பட்டவன் யார் என்று அந்நிய மக்களுக்குள் விசாரித்துப்பாருங்கள்; மிகவும் அதிர்ச்சியடையும் காரியத்தை இஸ்ரவேல் என்னும் கன்னிகை செய்கிறாள்.
14 Mon Libanons sne går bort på det høie fjell? Eller uttørkes de fremmede, kjølige, rinnende vann?
௧௪லீபனோனின் உறைந்த மழை வயல்வெளியின் கன்மலையிலிருந்து இல்லாமல் போகிறதுண்டோ? ஓடிவருகிற அந்நியதேசத்துக் குளிர்ந்த தண்ணீர்கள் வடிந்துபோகிறதுண்டோ?
15 Men mitt folk har glemt mig, det brenner røkelse for de falske guder; og de førte dem til fall på deres veier, de gamle veier, så de gikk på stier, på uryddede veier,
௧௫என் மக்களோ என்னை மறந்து, மாயையான விக்கிரகங்களுக்குத் தூபங்காட்டுகிறார்கள்; ஒழுங்குபடுத்தப்படாத பாதைகளிலும் வழியிலும் அவர்கள் நடக்கும்படி, அவைகள் அவர்களை முந்தின பாதைகளாகிய அவர்களுடைய வழிகளிலிருந்து இடறும்படி செய்கிறது.
16 og således gjorde de sitt land til en forferdelse, til en evig spott; hver den som går forbi, skal forferdes og ryste på hodet.
௧௬நான் அவர்களுடைய தேசத்தை அழிக்கவும், என்றென்றைக்கும் சத்தமிட்டு நிந்திக்கும் நிந்தையாக்கவும் இப்படிச் செய்கிறார்கள்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் பிரமித்து, தன் தலையைத் துலுக்குவான்.
17 Som østenvinden vil jeg adsprede dem for fiendens åsyn; med nakken og ikke med ansiktet vil jeg se på dem på deres ulykkes dag.
௧௭கொண்டல்காற்றுப் பறக்கடிப்பதுபோல நான் அவர்களை அவர்கள் எதிரிகளுக்கு முன்பாகப் பறக்கடிப்பேன்; அவர்களுடைய ஆபத்தின் நாளில் என் முகத்தையல்ல, என் முதுகை அவர்களுக்குக் காட்டுவேன் என்று சொல் என்றார்.
18 Da sa de: Kom og la oss uttenke onde råd mot Jeremias! For presten har jo loven, den vise har råd, og profeten har ord fra Gud. Kom, la oss slå ham med tungen og ikke akte på noget av hans ord!
௧௮அதற்கு அவர்கள்: எரேமியாவுக்கு விரோதமாக ஆலோசனை செய்வோம் வாருங்கள்; ஆசாரியரிடத்தில் வேதமும், ஞானிகளிடத்தில் ஆலோசனையும், தீர்க்கதரிசிகளிடத்தில் வசனமும் ஒழிந்துபோவதில்லை. இவன் வார்த்தைகளை நாம் கவனிக்காமல், இவனை தீயவார்த்தைகளால் அவமாக்கிப்போடுவோம் வாருங்கள் என்றார்கள்.
19 Akt på mig, Herre, og hør hvorledes de strider mot mig!
௧௯யெகோவாவே, நீர் என்னைக் கவனித்து, என்னுடன் வழக்காடுகிறவர்களின் சத்தத்தைக் கேளும்.
20 Skal en gjengjelde godt med ondt? For de har gravd en grav for mitt liv. Kom i hu at jeg stod for ditt åsyn og talte godt for dem for å vende din vrede bort fra dem!
௨0நன்மைக்குத் தீமையைச் சரிக்கட்டலாமோ? என் ஆத்துமாவுக்குப் படுகுழியை வெட்டுகிறார்களே; உம்முடைய கடுங்கோபத்தை அவர்களை விட்டுத்திருப்புவதற்கு நான் அவர்களுக்காக நன்மையைப் பேச உமக்கு முன்பாக நின்றதை நினைத்தருளும்.
21 Gi derfor deres barn til hungeren, og overgi dem selv i sverdets vold, og la deres hustruer bli barnløse og enker, og deres menn bli drept av pesten, deres ungdom bli slått ihjel av sverdet i krigen!
௨௧ஆகையால், அவர்களுடைய பிள்ளைகளைப் பஞ்சத்திற்கு ஒப்புக்கொடுத்து, அவர்களைப் பட்டயத்திற்கு இரையாக்கிவிடும்; அவர்கள் மனைவிகள் பிள்ளையில்லாதவர்களும் விதவைகளுமாகி, அவர்கள் கணவன்கள் கொலை செய்யப்பட்டு, அவர்கள் வாலிபர்கள் போரில் பட்டயத்தால் மடியக்கடவர்கள்.
22 La skrik bli hørt fra deres hus, når du lar en fiendeskare komme brått over dem! For de har gravd en grav for å fange mig og lagt skjulte snarer for mine føtter.
௨௨நீர் உடனே அவர்கள்மேல் படையை வரச்செய்யும்போது, கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.
23 Men du, Herre, kjenner alle deres onde råd mot mitt liv; forlat dem ikke deres misgjerning og utslett ikke deres synd for ditt åsyn, men styrt dem ned for ditt åsyn! Straff dem på din vredes tid!
௨௩ஆனாலும் யெகோவாவே, அவர்கள் எனக்கு விரோதமாகச் செய்யும் கொலைபாதக யோசனையையெல்லாம் நீர் அறிவீர்; அவர்களுடைய அக்கிரமத்தை உமது கண்ணுக்கு மறைவாக மூடாமலும், அவர்கள் பாவத்தைக் குலைக்காமலும் இருப்பீராக; அவர்கள் உமக்கு முன்பாகக் கவிழ்க்கப்படக்கடவர்கள்; உமது கோபத்தின் காலத்தில் இப்படி அவர்களுக்குச் செய்யும்.