< Esaias 63 >

1 Hvem er han som kommer fra Edom, i røde klær fra Bosra, så prektig i sin klædning, kneisende i sin store kraft? - Det er jeg, jeg som taler rettferdighet, som er mektig til å frelse.
ஏதோமிலும் அதிலுள்ள போஸ்றா பட்டணத்திலுமிருந்து, சாயந்தீர்ந்த ஆடைகளுடையவராகவும், மகத்துவமாக அணிந்திருக்கிறவராகவும், தமது மகத்தான வல்லமையிலே எழுந்தருளினவராகவும் வருகிற இவர் யார்? நீதியாகப் பேசி காப்பாற்ற வல்லவராகிய நான்தானே.
2 Hvorfor er din klædning så rød, og dine klær lik hans som treder vinpersen?
உம்முடைய ஆடைகள் சிவப்பாகவும், ஆலையை மிதிக்கிறவனுடைய ஆடைகளைப்போலவும் இருக்கிறதென்ன?
3 Persekaret har jeg trådt, jeg alene, og av folkene var ingen med mig: så trådte jeg på dem i min vrede og trampet dem sønder i min harme; da sprøitet deres blod på mine klær, og hele min klædning fikk jeg tilsølt.
நான் தனி ஒருவனாக ஆலையை மிதித்தேன்; மக்களில் ஒருவனும் என்னோடிருந்ததில்லை; நான் என் கோபத்திலே அவர்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை நசுக்கிப்போட்டேன்; அதினால் அவர்கள் இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, என் ஆடைகளையெல்லாம் கறைப்படுத்திக்கொண்டேன்.
4 For hevnens dag var i mitt hjerte, og mitt gjenløsnings-år var kommet;
நீதியைநிலைப்படுத்தும் நாள் என் மனதிலிருந்தது; என்னுடையவர்களை விடுவிக்கும் வருடம் வந்தது.
5 og jeg så mig om, men det var ingen som hjalp; jeg undret mig, men det var ingen som støttet mig; da hjalp min arm mig, og min harme støttet mig,
நான் பார்த்தேன், துணை செய்வார் ஒருவருமில்லை; தாங்குவார் ஒருவருமில்லை என்று ஆச்சரியப்பட்டேன்; அப்பொழுது என் புயமே எனக்கு பாதுகாப்பாகி, என் கடுங்கோபமே என்னைத் தாங்கியது.
6 og jeg trådte ned folkeslag i min vrede og gjorde dem drukne i min harme, og jeg lot deres blod rinne ned på jorden.
நான் என் கோபத்திலே மக்களை மிதித்து, என் கடுங்கோபத்திலே அவர்களை வெறியாக்கி, அவர்கள் சாரத்தைத் தரையிலே இறங்கச்செய்தேன்.
7 Herrens miskunnhet vil jeg forkynne, Herrens pris efter alt det Herren har gjort mot oss, og hans store godhet mot Israels hus, fordi han gjorde imot dem efter sin barmhjertighet og efter sin store miskunnhet.
யெகோவா எங்களுக்குச் செய்தருளின எல்லாவற்றிற்கும் ஏற்றதாகவும், அவர் தம்முடைய இரக்கங்களின்படியும் தம்முடைய திரளான தயவுகளின்படியும், இஸ்ரவேல் வம்சத்திற்குச் செய்த மகா நன்மைக்கு ஏற்றதாகவும், யெகோவாவுடைய செயல்களையும், யெகோவாவுடைய துதிகளையும் பிரபலப்படுத்துவேன்.
8 Han sa: Ja, de er mitt folk, de er barn som ikke vil svike. Og han blev en frelser for dem.
அவர்கள் என் மக்கள்தானென்றும், அவர்கள் வஞ்சனை செய்யாதிருக்கும் பிள்ளைகளென்றும் சொல்லி, அவர்களுக்கு இரட்சகரானார்.
9 I all deres trengsel var det ingen trengsel, og hans åsyns engel frelste dem; i sin kjærlighet og sin store mildhet gjenløste han dem, og han tok dem op og bar dem alle den gamle tids dager.
அவர்களுடைய எல்லா நெருக்கத்திலும் அவர் நெருக்கப்பட்டார்; அவருடைய சமுகத்தின் தூதனானவர் அவர்களை காப்பாற்றினார் அவர் தமது அன்பின் காரணமாகவும், தமது பரிதாபத்தின் காரணமாகவும் அவர்களை விடுவித்தது, ஆரம்ப நாட்களிலெல்லாம் அவர்களைத் தூக்கிச் சுமந்துவந்தார்.
10 Men de, de var gjenstridige og gjorde hans Hellige Ånd sorg; da skiftet han hu og blev deres fiende, han selv stred imot dem.
௧0அவர்களோ கலகம்செய்து, அவருடைய பரிசுத்த ஆவியை விசனப்படுத்தினார்கள்; அதினால் அவர் அவர்களுக்கு எதிரியாக மாறி, அவரே அவர்களுக்கு விரோதமாக போர்செய்தார்.
11 Da tenkte hans folk på de gamle dager, på Moses: Hvor er han som førte dem op av havet med sin hjords hyrde? Hvor er han som gav sin Hellige Ånd midt iblandt dem,
௧௧ஆகிலும் அவர் ஆரம்பநாட்களையும், மோசேயையும், தம்முடைய மக்களையும் நினைவுகூர்ந்தார்; ஆனாலும் அவர்களையும் தமது மந்தையின் மேய்ப்பனையும் கடலிலிருந்து ஏறச்செய்தவர் இப்பொழுது எங்கே?
12 han som lot sin herlige arm gå frem ved Moses' høire side, som kløvde vannene for deres åsyn for å gjøre sig et evig navn,
௧௨அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்திய புகழ்ச்சியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து,
13 han som førte dem gjennem dypene som en hest gjennem ørkenen, så de ikke snublet?
௧௩ஒரு குதிரை வனாந்திரவெளியிலே நடக்கிறதுபோல, அவர்கள் இடறாதபடிக்கு அவர்களை ஆழங்களில் நடக்கச்செய்தவர் எங்கே?
14 Likesom feet som går ned i dalen, førte Herrens Ånd dem til hvile; således ledet du ditt folk for å gjøre dig et herlig navn.
௧௪யெகோவாவுடைய ஆவியானவர் அவர்களைப் பள்ளத்தாக்கிலே போய் இறங்குகிற மிருகஜீவன்களைப்போல இளைப்பாறச்செய்தார்; இப்படியே தேவரீர், உமக்கு மகிமையுள்ள புகழ்ச்சியை உண்டாக்கும்படி உம்முடைய மக்களை நடத்தினீர்.
15 Sku ned fra himmelen og se, fra din hellige og herlige bolig! Hvor er din nidkjærhet og ditt velde? Ditt hjertes medynk og din miskunnhet holder sig tilbake fra mig.
௧௫தேவரீர் பரலோகத்திலிருந்து கண்ணோக்கி, பரிசுத்தமும் மகிமையுமுள்ள உம்முடைய வாசஸ்தலத்திலிருந்து பாரும், உம்முடைய வைராக்கியமும், உம்முடைய வல்லமையும் எங்கே? உம்முடைய உள்ளத்தின் கொதிப்பையும், உம்முடைய மனஉருக்கத்தையும் எனக்கு முன்பாக அடக்கிக்கொள்ளுகிறீரோ?
16 For du er vår far; Abraham vet jo ikke om oss, og Israel kjenner oss ikke; du Herre er vår far, vår gjenløser fra eldgammel tid er ditt navn.
௧௬தேவரீர் எங்கள் பிதாவாயிருக்கிறீர்; ஆபிரகாம் எங்களை அறியான், இஸ்ரவேலுக்கு நாங்கள் அறியப்பட்டவர்களுமல்ல; யெகோவாவே, நீர் எங்கள் பிதாவும், எங்கள் மீட்பருமாயிருக்கிறீர்; இது ஆரம்பகாலமுதல் உம்முடைய நாமம்.
17 Hvorfor lar du oss fare vill fra dine veier, Herre? Hvorfor forherder du vårt hjerte, så det ikke frykter dig? Vend om for dine tjeneres skyld, for de stammers skyld som er din arv!
௧௭யெகோவாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகச்செய்து, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்கு ஏன் கடினப்படுத்தவேண்டும்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உமக்குச் சொந்தமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.
18 En liten stund har ditt hellige folk hatt landet i eie; våre motstandere har trådt ned din helligdom.
௧௮பரிசுத்தமுள்ள உமது மக்கள் கொஞ்சக் காலமாத்திரம் அதைச் சுதந்தரித்தார்கள்; எங்கள் எதிரிகள் உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தை மிதித்துப்போட்டார்கள்.
19 Vi er blitt som de du aldri har hersket over, som de ditt navn ikke har vært nevnt over.
௧௯நாங்களே உம்முடையவர்கள், அவர்களை ஒருபொழுதும் நீர் ஆண்டதில்லை; அவர்களுக்கு உமது நாமம் சூட்டப்பட்டதுமில்லை.

< Esaias 63 >