< 2 Mosebok 5 >
1 Derefter gikk Moses og Aron inn til Farao og sa: Så sier Herren, Israels Gud: La mitt folk fare, så de kan holde høitid for mig i ørkenen!
அதன்பின் மோசேயும் ஆரோனும் பார்வோனிடம் போய், “பாலைவனத்தில் ஒரு பண்டிகை கொண்டாடுவதற்கு, என் மக்களைப் போகவிடு என்று இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்கிறார்” என்றார்கள்.
2 Men Farao sa: Hvem er Herren som jeg skal lyde og la Israel fare? Jeg kjenner ikke Herren, og heller ikke vil jeg la Israel fare.
அதற்குப் பார்வோன், “நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து இஸ்ரயேல் மக்களைப் போகவிட அவர் யார்? எனக்கு யெகோவாவைத் தெரியாது, நான் இஸ்ரயேலரைப் போகவிடமாட்டேன்” என்றான்.
3 Da sa de: Hebreernes Gud har møtt oss; la oss dra tre dagsreiser ut i ørkenen og ofre til Herren vår Gud, så han ikke skal slå oss med pest eller sverd!
அப்பொழுது அவர்கள், “எபிரெயரின் இறைவன் எங்களைச் சந்தித்திருக்கிறார். இப்பொழுது நாங்கள் பாலைவனத்தில் மூன்று நாட்கள் பயணம் செய்து, இறைவனாகிய யெகோவாவுக்குப் பலிசெலுத்தும்படி எங்களைப் போகவிடும். இல்லாவிட்டால் கொள்ளைநோயினாலோ வாளினாலோ அவர் எங்களைத் தண்டிப்பார்” என்றார்கள்.
4 Men kongen i Egypten sa til dem: Hvorfor vil I, Moses og Aron, dra folket fra dets arbeid? Gå og gjør det I skal!
அதற்கு எகிப்தின் அரசன், “மோசே, ஆரோன் நீங்கள் ஏன் மக்களை வேலைசெய்வதிலிருந்து குழப்புகிறீர்கள்? உங்கள் வேலைக்குத் திரும்பிப்போங்கள்!” என்றான்.
5 Så sa Farao: Se, folket er nu blitt altfor tallrikt i landet, og så vil I dra dem bort fra det de har å gjøre!
மேலும் பார்வோன், “பாருங்கள், இப்பொழுது இந்த நாட்டில் உங்கள் மக்கள் பெருகியிருக்கிறார்கள்; அப்படியிருக்க நீங்கள் அவர்கள் வேலைசெய்வதைத் தடுக்கிறீர்களே!” என்றான்.
6 Og samme dag bød Farao arbeidsfogdene og opsynsmennene over folket og sa:
அன்றைய தினமே பார்வோன், அடிமைகளை நடத்தும் கண்காணிகளிடமும், மக்களுக்குப் பொறுப்பாயிருந்த தலைவர்களிடமும் கொடுத்த உத்தரவு இதுவே:
7 I skal ikke mere gi folket halm til teglarbeidet, som før; de skal selv gå og sanke sig halm.
“நீங்கள் இனிமேல் செங்கல் சுடுவதற்கு மக்களுக்கு வைக்கோல் கொடுக்கக்கூடாது; அவர்களே போய் வைக்கோலைச் சேகரித்து வரட்டும்.
8 Men den samme mengde teglsten som de før har gjort, skal I pålegge dem; I skal ikke avkorte noget i deres arbeid. For de er dovne; derfor skriker de og sier: La oss gå og ofre til vår Gud!
ஆனால் நீங்கள் அவர்களிடம் முன்பு செய்த அளவு செங்கற்களைச் செய்யும்படி கேட்டுக்கொள்ளுங்கள்; அந்த அளவைக் குறைக்கவேண்டாம், அவர்கள் சோம்பேறிகள்; அதனால்தான் அவர்கள், ‘நாங்கள் போய் எங்கள் இறைவனுக்குப் பலிசெலுத்த அனுமதியும்’ என்று கூக்குரலிடுகிறார்கள்.
9 Legg tungt arbeid på disse mennesker, så de har nok med det og ikke hører efter løgnaktige ord!
அந்த மனிதர்கள் தொடர்ந்து வேலைசெய்யும்படிக்கும், பொய்களை நம்பாதபடிக்கும் அவர்களுடைய வேலையை இன்னும் கடினமாக்குங்கள்.”
10 Da gikk arbeidsfogdene og opsynsmennene ut og sa til folket: Så sier Farao: Jeg gir eder ikke lenger halm.
அப்பொழுது அடிமைகளை நடத்தும் கண்காணிகளும், தலைவர்களும் மக்களிடம்போய், “பார்வோன், ‘இனிமேல் வைக்கோல் கொடுக்கமாட்டேன்.
11 Gå selv og finn eder halm, hvor I kan; Men i eders arbeid skal det ikke avkortes noget.
நீங்களே வைக்கோல் கிடைக்கும் இடங்களுக்குப் போய், உங்களுக்கான வைக்கோலை எங்கேயாவது தேடிக்கொள்ளுங்கள்; ஆனாலும் உங்கள் வேலை கொஞ்சமும் குறைக்கப்படமாட்டாது’ என்று சொல்கிறான்” என்றார்கள்.
12 Da spredte folket sig over hele Egyptens land for å sanke stubber til å bruke istedenfor halm.
எனவே மக்கள் வைக்கோலுக்குப் பதிலாக வயலில் விடப்பட்ட பயிரின் அடித்தாழ்களை சேகரிப்பதற்கு எகிப்து முழுவதும் சிதறிப்போனார்கள்.
13 Men arbeidsfogdene drev på og sa: Gjør eders arbeid ferdig, fullt dagsverk for hver dag, likesom dengang I hadde halm.
அடிமை நடத்தும் அதிகாரிகள் அவர்களிடம், “வைக்கோல் இருக்கும்போது செய்ததுபோலவே, ஒவ்வொரு நாளுக்கும் குறிக்கப்பட்ட அளவின்படியே வேலைசெய்யவேண்டும்” என வற்புறுத்தினார்கள்.
14 Og opsynsmennene som Faraos arbeidsfogder hadde satt over Israels barn, fikk hugg, og arbeidsfogdene sa til dem: Hvorfor har I ikke gjort ferdig den fastsatte mengde teglsten, likesom før, hverken igår eller idag?
தலைவர்களாய் இருந்த இஸ்ரயேலரை, அடிமைகளை நடத்தும் பார்வோனின் கண்காணிகள் அடித்து, “நீங்கள் ஏன் உங்களுக்குக் குறித்த செங்கற்களை முன்பு செய்ததுபோல நேற்றும் இன்றும் செய்யவில்லை” என்றும் கேட்டார்கள்.
15 Da gikk opsynsmennene over Israels barn til Farao og klaget høilydt for ham og sa: Hvorfor gjør du således med dine tjenere?
அப்பொழுது இஸ்ரயேல் மக்களின் தலைவர்கள் பார்வோனிடம் சென்று, “நீங்கள் ஏன் உங்கள் பணியாளர்களான எங்களை இவ்விதமாய் நடத்துகிறீர்கள்?
16 Dine tjenere får ikke halm, og allikevel sier de til oss: Gjør tegl! Og så får dine tjenere hugg, enda det er ditt eget folk som har skylden.
உமது பணியாளர்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படவில்லை; அப்படியிருந்தும் செங்கல் சுடும்படி கேட்கப்பட்டு உங்கள் பணியாளர்களால் அடிக்கப்படுகிறோம்; ஆனால், குற்றம் உமது சொந்த மக்களிலேயே இருக்கிறது” என்றார்கள்.
17 Men han sa: Dovne er I, dovne! Derfor sier I: Vi vil gå og ofre til Herren.
அதற்குப் பார்வோன், “சோம்பேறிகளே, நீங்கள் சோம்பேறிகளாய் இருப்பதனால்தான், ‘நாங்கள் போய் யெகோவாவுக்குப் பலியிட எங்களை விடுங்கள்’ என்று கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள்.
18 Så gå nu og arbeid! Halm får I ikke, men den fastsatte mengde tegl skal I komme med.
இப்பொழுதே வேலைக்குப் போங்கள். உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படமாட்டாது, ஆனாலும் நீங்கள் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட முழு எண்ணிக்கையின்படி செங்கற்களைச் செய்தே ஆகவேண்டும்” என்றான்.
19 Israels barns opsynsmenn så at de var ille farne, da det blev sagt til dem: I skal ikke avkorte noget i den teglsten I skal ha ferdig - fullt dagsverk for hver dag!
“ஒவ்வொரு நாளும் செய்யவேண்டிய செங்கற்களின் எண்ணிக்கையை நீங்கள் குறைக்கக்கூடாது” என்று இஸ்ரயேல் மக்களின் தலைவர்களுக்குச் சொல்லப்பட்டபோது, தாம் பெரும் பிரச்சனைக்கு உட்பட்டிருப்பதை அவர்கள் உணர்ந்தார்கள்.
20 Og da de kom ut fra Farao, møtte de Moses og Aron, som stod og ventet på dem.
அவர்கள் பார்வோனிடம் இருந்து திரும்பி வரும்போது, மோசேயும் ஆரோனும் தங்களைச் சந்திக்கக் காத்துக்கொண்டிருப்பதைக் கண்டார்கள்.
21 Og de sa til dem: Herren hjemsøke eder og dømme eder fordi I har ført oss i vanrykte hos Farao og hans tjenere, så I har gitt dem sverd i hånden til å slå oss ihjel.
அப்பொழுது அவர்கள் மோசேயையும் ஆரோனையும் நோக்கி, “யெகோவாவே உங்களைப் பார்த்து நியாயந்தீர்ப்பாராக! நீங்கள் எங்களைப் பார்வோனுக்கும், அவனுடைய அலுவலர்களுக்கும் அருவருப்பானவர்களாக்கி, எங்களைக் கொல்லும்படி அவர்களின் கைகளில் வாளையும் கொடுத்திருக்கிறீர்கள்” என்றார்கள்.
22 Da vendte Moses sig igjen til Herren og sa: Herre, hvorfor har du gjort så ille med dette folk? Hvorfor har du sendt mig?
மோசே யெகோவாவிடம் திரும்பிப்போய், “யெகோவாவே, இந்த மக்கள்மேல் ஏன் பிரச்சனையைக் கொண்டுவந்திருக்கிறீர்? இதற்காகவா என்னை அனுப்பினீர்?
23 For fra den stund jeg gikk inn til Farao for å tale i ditt navn, har han gjort ille mot dette folk, og du har aldeles ikke hjulpet ditt folk.
பார்வோனிடம் சென்று உம்முடைய பெயரைச் சொல்லிப் பேசியதுமுதல், அவன் இந்த மக்கள்மேல் தொல்லையையே கொண்டுவந்திருக்கிறான். நீர் உமது மக்களை எவ்விதத்திலும் விடுதலையாக்கவில்லையே” என்றான்.