< Kolossenserne 4 >

1 I herrer! gjør imot eders tjenere det som rett og rimelig er, for I vet at også I har en herre i himlene!
எஜமான்களே, உங்களுக்கும் பரலோகத்தில் எஜமான் இருக்கிறாரென்று அறிந்து, வேலைக்காரர்களுக்கு நீதியும் செம்மையுமானதைச் செய்யுங்கள்.
2 Vær vedholdende i bønnen, så I våker i den med takksigelse,
இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், நன்றியுள்ள இருதயத்தோடு ஜெபத்தில் விழித்திருங்கள்.
3 og bed også for oss at Gud må oplate oss en dør for ordet så vi kan forkynne Kristi hemmelighet, den for hvis skyld jeg og er i lenker,
கிறிஸ்துவினுடைய இரகசியத்தினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற நான் அந்த இரகசியத்தைக்குறித்துப் பேசவேண்டிய பிரகாரமாகப் பேசி, அதை வெளிப்படுத்துவதற்கு,
4 forat jeg kan åpenbare den således som jeg bør tale.
தேவவார்த்தை செல்லும்படியான வாசலை தேவன் திறந்தருளும்படி எங்களுக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள்.
5 Omgåes i visdom med dem som er utenfor, så I kjøper den beleilige tid.
அவிசுவாசிகளுக்கு முன்பாக ஞானமாக நடந்து, காலத்தைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
6 Eders tale være alltid tekkelig, krydret med salt, så I vet hvorledes I bør svare enhver.
அவனவனுக்கு எவ்வாறு பதில்சொல்லவேண்டுமென்று நீங்கள் அறியும்படிக்கு, உங்களுடைய வசனம் எப்பொழுதும் கிருபை பொருந்தினதாகவும் உப்பினால் சாரமேறினதாகவும் இருப்பதாக.
7 Hvorledes det går mig, det skal Tykikus fortelle eder alt sammen, han min elskede bror og trofaste hjelper og medtjener i Herren,
பிரியமான சகோதரனும், உண்மையுள்ள ஊழியக்காரனும், கர்த்தருக்குள் எனக்கு உடன் வேலையாளுமாக இருக்கிற தீகிக்கு என்பவன் என் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பான்.
8 som jeg just derfor sender til eder, forat I skal få vite hvorledes det er med oss, og forat han skal trøste eders hjerter,
உங்களுடைய செய்திகளை அறியவும், உங்களுடைய இருதயங்களைத் தேற்றவும்,
9 tillikemed Onesimus, den trofaste og elskede bror, som er fra eders by; de skal fortelle eder alt herfra.
அவனையும், உங்களில் ஒருவனாக இருக்கிற உண்மையும் பிரியமும் உள்ள சகோதரனாகிய ஒநேசிமு என்பவனையும், உங்களிடம் அனுப்பியிருக்கிறேன்; அவர்கள் இந்த இடத்துச் செய்திகளையெல்லாம் உங்களுக்கு அறிவிப்பார்கள்.
10 Aristarkus, min medfange, hilser eder, og Markus, Barnabas' søskenbarn, som I fikk pålegg om - når han kommer til eder, da ta imot ham -
௧0என்னோடுகூடக் காவலில் இருக்கிற அரிஸ்தர்க்கும், பர்னபாவிற்கு நெருங்கிய உறவினரான மாற்கும் வாழ்த்துதல் சொல்லுகிறார்கள். மாற்குவைக்குறித்து உத்தரவுபெற்றீர்களே; இவன் உங்களிடம் வந்தால் இவனை அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
11 og Jesus med tilnavnet Justus; iblandt de omskårne er disse de eneste medarbeidere for Guds rike som er blitt mig en trøst.
௧௧யுஸ்து என்னப்பட்ட இயேசுவும் வாழ்த்துதல் சொல்லுகிறான். விருத்தசேதனம் உள்ளவர்களில் இவர்கள்மட்டும் தேவனுடைய ராஜ்யத்திற்காக என் உடன்வேலையாட்களாக இருந்து, எனக்கு ஆறுதல் செய்துவந்தார்கள்.
12 Epafras hilser eder, han som er fra eders by, en Kristi Jesu tjener som alltid strider for eder i sine bønner, at I må stå fullkomne og fullvisse i all Guds vilje;
௧௨எப்பாப்பிராவும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறான்; உங்களைச் சேர்ந்தவனும் கிறிஸ்துவின் ஊழியக்காரனுமாகிய இவன், நீங்கள் தேவனுக்குச் சித்தமானவைகள் எல்லாவற்றிலும் தேறினவர்களாகவும் பூரண நிச்சயமுள்ளவர்களாகவும் நிலைநிற்கவேண்டுமென்று, தன் ஜெபங்களில் உங்களுக்காக எப்பொழுதும் போராடுகிறான்.
13 for jeg gir ham det vidnesbyrd at han har meget strev for eder og dem i Laodikea og dem i Hierapolis.
௧௩இவன் உங்களுக்காகவும், லவோதிக்கேயருக்காகவும், எராப்போலியருக்காகவும், மிகுந்த விழிப்புள்ளவனாக இருக்கிறான் என்பதற்கு நான் சாட்சியாக இருக்கிறேன்.
14 Lægen Lukas, den elskede, hilser eder, og Demas.
௧௪பிரியமான மருத்துவனாகிய லூக்காவும், தேமாவும், உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
15 Hils brødrene i Laodikea, og Nymfas og menigheten i hans hus.
௧௫லவோதிக்கேயாவிலிருக்கிற சகோதரர்களையும், நிம்பாவையும், அவன் வீட்டில் கூடுகிற சபையையும் வாழ்த்துங்கள்.
16 Og når dette brev er lest hos eder, da sørg for at det også blir lest i laodikeernes menighet, og at I får lese brevet fra Laodikea!
௧௬இந்தக் கடிதம் உங்களிடம் வாசிக்கப்பட்டபின்பு இது லவோதிக்கேயா சபையிலும் வாசிக்கப்படும்படி செய்யுங்கள்; லவோதிக்கேயாவிலிருந்து வரும் கடிதத்தை நீங்களும் வாசியுங்கள்.
17 Og si til Arkippus: Gi akt på den tjeneste som du har mottatt i Herren, at du fullbyrder den!
௧௭அர்க்கிப்பைக் கண்டு: நீ கர்த்தரிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றும்படி கவனமாக இருப்பாயாகவென்று சொல்லுங்கள்.
18 Hilsen med min, Paulus' hånd: Kom mine lenker i hu! Nåden være med eder!
௧௮பவுலாகிய நான் என் கையினால் எழுதி, உங்களை வாழ்த்துகிறேன். நான் கட்டப்பட்டிருக்கிறதை நினைத்துக்கொள்ளுங்கள். கிருபை உங்களோடிருப்பதாக. ஆமென்.

< Kolossenserne 4 >