< Apostlenes-gjerninge 5 >

1 Men en mann ved navn Ananias og hans hustru Saffira solgte en eiendom,
அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவனுடைய மனைவியாகிய சப்பீராளும் தங்களுடைய சொத்துக்களை விற்றார்கள்.
2 og han stakk til side noget av pengene med sin hustrus vitende, og bar frem en del og la det for apostlenes føtter.
தன் மனைவியின் சம்மதத்தோடு அவன் விற்ற பணத்திலே ஒரு பங்கை மறைத்துவைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலர்களுடைய பாதத்திலே வைத்தான்.
3 Da sa Peter: Ananias! hvorfor har Satan fylt ditt hjerte, så du skulde lyve for den Hellige Ånd og stikke til side noget av pengene for akeren?
பேதுரு அவனை நோக்கி: அனனியாவே, சொத்தை விற்றதில் ஒரு பங்கை மறைத்துவைத்து, பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன?
4 Var den ikke din så lenge du hadde den, og var den ikke i din makt da den blev solgt? Hvorfor har du satt dig denne gjerning fore i ditt hjerte? Du har ikke løiet for mennesker, men for Gud.
அதை விற்கும் முன்னே அது உன்னுடையதாயிருக்கவில்லையோ? அதை விற்றப்பின்பும் அதின் கிரயப்பணம் உன்னிடத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணம் கொண்டதென்ன? நீ மனிதனிடத்தில் இல்லை, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.
5 Men da Ananias hørte disse ord, falt han om og opgav ånden. Og stor frykt kom over alle som hørte det;
அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்டவுடனே, கீழே விழுந்து மரித்துப்போனான். இவைகளைக் கேள்விப்பட்ட எல்லோருக்கும் மிகுந்த பயமுண்டானது.
6 og de unge menn stod op og la ham til rette og bar ham ut og begravde ham.
வாலிபர்கள் எழுந்து, அவனைத் துணியில் சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய், அடக்கம்பண்ணினார்கள்.
7 Så gikk det omkring tre timer; da trådte hans hustru inn, uten å vite hvad som var skjedd.
ஏறக்குறைய மூன்று மணி நேரத்திற்குப்பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள்.
8 Peter tok da til orde og sa til henne: Si mig: Var det for denne pris I solgte akeren? Hun sa: Ja, for denne pris.
பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவிற்குத்தான் விற்றீர்களா என்று எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவிற்குத்தான் என்றாள்.
9 Da sa Peter til henne: Hvorfor er I dog blitt enige om å friste Herrens Ånd? Se, deres føtter som har begravet din mann, er for døren, og de skal bære dig ut.
பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் கணவனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.
10 Og straks falt hun om for hans føtter og opgav ånden, og da de unge menn kom inn, fant de henne død; og de bar henne ut og begravde henne hos hennes mann.
௧0உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து மரித்துப்போனாள். வாலிபர்கள் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு அவளை வெளியே எடுத்துக்கொண்டுபோய், அவளுடைய கணவனருகே அடக்கம்பண்ணினார்கள்.
11 Og stor frykt kom over hele menigheten og over alle som hørte dette.
௧௧சபையாரெல்லோருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற எல்லோருக்கும், மிகுந்த பயமுண்டானது.
12 Men det blev gjort mange tegn og undergjerninger blandt folket ved apostlenes hender, og de holdt alle samdrektig til i Salomos buegang.
௧௨அப்போஸ்தலர்களுடைய கைகளினாலே அநேக அடையாளங்களும் அற்புதங்களும் மக்களுக்குள்ளே செய்யப்பட்டது. சபையாரெல்லோரும் ஒருமனப்பட்டு சாலொமோனுடைய மண்டபத்தில் கூடியிருந்தார்கள்.
13 Av de andre vågde ingen å holde sig til dem; men folket priste dem;
௧௩மற்றவர்களில் ஒருவரும் அவர்களோடு சேரத் துணியவில்லை. ஆனாலும் மக்கள் அவர்களைப் புகழ்ந்தார்கள்.
14 og dess flere troende blev vunnet for Herren, menn og kvinner i hopetall,
௧௪அநேக ஆண்களும், பெண்களும் விசுவாசமுள்ளவர்களாகி கர்த்தரிடத்தில் அதிகமதிகமாகச் சேர்க்கப்பட்டார்கள்.
15 så de endog bar de syke ut på gatene og la dem på senger og benker, forat endog bare skyggen av Peter kunde overskygge nogen av dem når han kom.
௧௫சுகவீனமானவர்களைப் படுக்கைகளின்மேலும் கட்டில்களின்மேலும் கிடத்தி, பேதுரு நடந்துபோகும்போது அவனுடைய நிழலாவது அவர்களில் சிலர்மேல் படும்படிக்கு, அவர்களை வெளியே வீதிகளில் கொண்டுவந்து வைத்தார்கள்.
16 Ja, også fra de omliggende byer kom de sammen i mengde til Jerusalem og førte med sig syke og folk som var plaget av urene ånder, og de blev alle helbredet.
௧௬சுற்றுப்பட்டணங்களிலுமிருந்து திரளான மக்கள் சுகவீனமானவர்களையும் அசுத்தஆவிகளால் துன்புறுத்தப்பட்டவர்களையும் எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்; அவர்களெல்லோரும் குணமாக்கப்பட்டார்கள்.
17 Da stod ypperstepresten op og alle de som holdt med ham, det var sadduseernes parti, og de blev fulle av nidkjærhet
௧௭அப்பொழுது பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்த சதுசேய சமயத்தினர் அனைவரும் எழும்பி, பொறாமையினால் நிறைந்து,
18 og la hånd på apostlene og kastet dem i det offentlige fengsel.
௧௮அப்போஸ்தலர்களைப் பிடித்து, பொதுவான சிறைச்சாலையிலே வைத்தார்கள்.
19 Men en Herrens engel åpnet om natten fengslets dører og førte dem ut og sa:
௧௯கர்த்தருடைய தூதன் இரவிலே சிறைச்சாலையின் கதவுகளைத் திறந்து, அவர்களை வெளியே கொண்டுவந்து:
20 Gå avsted, og stå frem og tal i templet alle dette livs ord for folket!
௨0நீங்கள் போய், தேவாலயத்திலே நின்று, இந்த ஜீவனுள்ள வார்த்தைகள் எல்லாவற்றையும் மக்களுக்குச் சொல்லுங்கள் என்றான்.
21 Da de hørte dette, gikk de mot dagningen inn i templet og lærte. Da nu ypperstepresten og hans følge kom, kalte de sammen rådet og alle Israels barns eldste, og sendte bud til fengslet for å hente dem.
௨௧அவர்கள் அதைக்கேட்டு, அதிகாலமே தேவாலயத்தில் பிரவேசித்து போதகம்பண்ணினார்கள். பிரதான ஆசாரியனும் அவனுடனே இருந்தவர்களும் வந்து, ஆலோசனைச் சங்கத்தினரையும் இஸ்ரவேல் கோத்திரத்தின் மூப்பர்களெல்லோரையும் வரவழைத்து, அப்போஸ்தலர்களை அழைத்துவரும்படி சிறைச்சாலைக்கு அதிகாரிகளை அனுப்பினார்கள்.
22 Men de tjenere som kom dit, fant dem ikke i fengslet; de kom da tilbake og meldte:
௨௨அதிகாரிகள் போய், சிறைச்சாலையிலே அவர்களைக் காணாமல், திரும்பிவந்து:
23 Fengslet fant vi pålitelig lukket, og vaktmennene stod ved døren; men da vi lukket op, fant vi ingen der inne.
௨௩சிறைச்சாலை மிகுந்த பத்திரமாகப் பூட்டப்பட்டிருக்கவும், காவல்காரர்கள் வெளியே கதவுகளுக்கு முன் நிற்கவும் கண்டோம்; திறந்தபொழுதோ உள்ளே ஒருவரையும் காணோம் என்று அறிவித்தார்கள்.
24 Da høvedsmannen for tempelvakten og yppersteprestene hørte disse ord, visste de ikke hvad de skulde tenke om dem, og hvad dette skulde bli til.
௨௪இந்தச் செய்தியை ஆசாரியனும் தேவாலயத்தைக் காக்கிற படைத்தலைவனும் பிரதான ஆசாரியர்களும் கேட்டபொழுது, இது என்னமாய் முடியுமோ என்று, அவர்களைக்குறித்துக் கலக்கமடைந்தார்கள்.
25 Da kom det en og meldte dem: Se, de menn som I kastet i fengsel, står i templet og lærer folket.
௨௫அப்பொழுது ஒருவன் வந்து: இதோ, நீங்கள் காவலில் வைத்த மனிதர்கள் தேவாலயத்திலே நின்று மக்களுக்குப் போதகம்பண்ணுகிறார்கள் என்று அவர்களுக்கு அறிவித்தான்.
26 Da gikk høvedsmannen avsted med tjenerne og hentet dem, dog ikke med vold; for de fryktet for folket, at de skulde bli stenet.
௨௬உடனே படைத்தலைவன் அதிகாரிகளோடுகூடப்போய், மக்கள் கல்லெறிவார்களென்று பயந்ததினால், பலவந்தம்பண்ணாமல் அவர்களை அழைத்துக்கொண்டுவந்தான்.
27 Og da de hadde hentet dem, stilte de dem for rådet, og ypperstepresten spurte dem og sa:
௨௭அப்படி அழைத்துக்கொண்டுவந்து, ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக நிறுத்தினார்கள். அப்பொழுது பிரதான ஆசாரியன் அவர்களை நோக்கி:
28 Vi bød eder strengt at I ikke skulde lære i dette navn, og nu har I fylt Jerusalem med eders lære og vil føre dette menneskes blod over oss!
௨௮நீங்கள் இயேசுவின் நாமத்தைக்குறித்து போதகம்பண்ணக்கூடாது என்று நாங்கள் உங்களுக்கு உறுதியாகக் கட்டளையிடவில்லையா? அப்படியிருந்தும், இதோ, எருசலேமை உங்களுடைய போதகத்தினாலே நிரப்பி, அந்த மனிதனுடைய இரத்தப்பழியை எங்கள்மேல் சுமத்தவேண்டுமென்றிருக்கிறீர்கள் என்று சொன்னான்.
29 Da svarte Peter og apostlene: En skal lyde Gud mere enn mennesker.
௨௯அதற்கு பேதுருவும் மற்ற அப்போஸ்தலர்களும்: மனிதர்களுக்குக் கீழ்ப்படிகிறதைவிட தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாக இருக்கிறது.
30 Våre fedres Gud opvakte Jesus, som I drepte ved å henge ham på et tre;
௩0நீங்கள் சிலுவையில் அறைந்து கொலைசெய்த இயேசுவை நம்முடைய முற்பிதாக்களின் தேவன் எழுப்பி,
31 ham ophøiet Gud ved sin høire hånd til høvding og frelser, for å gi Israel omvendelse og syndenes forlatelse.
௩௧இஸ்ரவேலுக்கு மனந்திரும்புதலையும் பாவமன்னிப்பையும் கொடுப்பதற்காக, அவரை அதிபதியாகவும் இரட்சகராகவும் தமது வலது கரத்தினாலே உயர்த்தினார்.
32 Og vi er hans vidner om disse ting, og likeså den Hellige Ånd, som Gud gav dem som lyder ham.
௩௨இந்தச் செய்திகளைக்குறித்து நாங்கள் அவருக்குச் சாட்சிகளாக இருக்கிறோம்; தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குக் கொடுத்த பரிசுத்த ஆவியானவரும் சாட்சி என்றார்கள்.
33 Da de hørte dette, skar det dem i hjertet, og de la råd op om å slå dem ihjel.
௩௩அதை அவர்கள் கேட்டபொழுது, மிகுந்த கோபமடைந்து, அவர்களைக் கொலைசெய்யும்படிக்கு யோசனைபண்ணினார்கள்.
34 Men det stod op en fariseer i rådet ved navn Gamaliel, en lovlærer som var høit aktet av hele folket, og han bød å føre mennene ut et øieblikk,
௩௪அப்பொழுது அனைத்து மக்களாலும் கனம்பெற்ற வேதபண்டிதர் கமாலியேல் என்னும் பெயர்கொண்ட ஒரு பரிசேயன் ஆலோசனைச் சங்கத்தில் எழுந்திருந்து, அப்போஸ்தலர்களைக் கொஞ்சநேரம் வெளியே கொண்டுபோகச் சொல்லி,
35 og han sa til dem: Israelittiske menn! Se eder vel for hvad I gjør med disse mennesker!
௩௫சங்கத்தினரை நோக்கி: இஸ்ரவேலர்களே, இந்த மனிதர்களுக்கு நீங்கள் செய்யப்போகிறதைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
36 For nogen tid siden fremstod Teudas, som sa sig å være noget, og omkring fire hundre menn slo sig sammen med ham; han blev drept, og alle de som lød ham, spredtes og blev til intet.
௩௬ஏனென்றால், இந்த நாட்களுக்கு முன்னே தெயுதாஸ் என்பவன் எழும்பி, தன்னை ஒரு பெரியவனாகப் பாராட்டினான்; ஏறக்குறைய நானூறுபேர் அவனிடத்தில் சேர்ந்தார்கள்; அவன் மரித்துப்போனான்; அவனை நம்பின அனைவரும் சிதறிப்போனார்கள்.
37 Efter ham fremstod Judas fra Galilea i skatteutskrivningens dager og forførte folket til å følge sig; også han omkom, og alle de som lød ham, blev spredt.
௩௭அவனுக்குப்பின்பு, மக்களைக் கணக்கெடுக்கும் நாட்களிலே, கலிலேயனாகிய யூதாஸ் என்பவன் எழும்பி, தன்னைப் பின்பற்றும்படி அநேக மக்களை இழுத்தான்; அவனும் மரித்துப்போனான்; அவனை நம்பியிருந்த அனைவரும் சிதறிப்போனார்கள்.
38 Og nu sier jeg eder: Hold eder fra disse menn og la dem være i fred! for er dette råd eller dette verk av mennesker, da skal det gå til grunne,
௩௮இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறது என்னவென்றால் இந்த மனிதர்களுக்கு ஒன்றும் செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள். இந்த யோசனையும் இந்தச் செயல்களும் மனிதர்களால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோகும்;
39 men er det av Gud, vil I ikke kunne ødelegge dem. Vokt eder at I ikke må finnes stridende mot Gud!
௩௯தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை அழித்துவிட உங்களால் முடியாது; தேவனோடு போர் செய்யாதவர்களாக இருக்கும்படிக்குப் பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
40 De lød ham da, og kalte apostlene inn igjen og lot dem hudstryke, og bød dem at de ikke skulde tale i Jesu navn, og så lot de dem gå.
௪0அப்பொழுது அவர்கள் அவனுடைய யோசனைக்கு உடன்பட்டு, அப்போஸ்தலர்களை வரவழைத்து, அடித்து, இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசக்கூடாதென்று கட்டளையிட்டு, அவர்களை விடுதலையாக்கினார்கள்.
41 Så gikk de da bort fra rådet, glade over at de var aktet verdige til å vanæres for det navns skyld;
௪௧அவருடைய நாமத்துக்காக தாங்கள் அவமானமடைவதற்குத் தகுதியானவர்களாக எண்ணப்பட்டபடியினால், சந்தோஷமாக ஆலோசனைச் சங்கத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய்,
42 og de holdt ikke op med å lære hver dag i templet og hjemme og å forkynne evangeliet om Kristus Jesus.
௪௨தினந்தோறும் தேவாலயத்திலேயும் வீடுகளிலேயும் இடைவிடாமல் உபதேசம்பண்ணி இயேசுவே கிறிஸ்து என்று பிரசங்கித்தார்கள்.

< Apostlenes-gjerninge 5 >