< 2 Timoteus 3 >
1 Men dette skal du vite at i de siste dager skal det komme vanskelige tider.
௧மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.
2 For menneskene skal da være egenkjærlige, pengekjære, stortalende, overmodige, spottende, ulydige mot foreldre, utakknemlige, vanhellige,
௨எப்படியென்றால், மனிதர்கள் தற்பிரியர்களாகவும், பணப்பிரியர்களாகவும், வீம்புக்காரர்களாகவும், அகந்தை உள்ளவர்களாகவும், நிந்திக்கிறவர்களாகவும், தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாகவும், நன்றி இல்லாதவர்களாகவும், பரிசுத்தமில்லாதவர்களாகவும்,
3 ukjærlige, upålitelige, baktalende, umåtelige, umilde, uten kjærlighet til det gode,
௩மெய்யான அன்பு இல்லாதவர்களாகவும், மன்னிக்காதவர்களாகவும், அவதூறு செய்கிறவர்களாகவும், இச்சையடக்கம் இல்லாதவர்களாகவும், கொடுமை செய்கிறவர்களாகவும், நல்லவைகளை வெறுக்கிறவர்களாகவும்,
4 svikefulle, fremfusende, opblåste, slike som elsker sine lyster høiere enn Gud,
௪துரோகிகளாகவும், துணிகரம் உள்ளவர்களாகவும், இறுமாப்பு உள்ளவர்களாகவும், தேவனுக்குப் பிரியமானவர்களாக இல்லாமல் சுகபோகப்பிரியர்களாகவும்,
5 som har gudfryktighets skinn, men fornekter dens kraft - og disse skal du vende dig fra.
௫தேவ பக்தியின் வேஷத்தைத்தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாகவும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு.
6 For til dem hører de som lurer sig inn i husene og fanger kvinnfolk som er tynget av synder og drives av mangehånde lyster
௬பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுக்கப்பட்டு,
7 og alltid lærer og aldri kan komme til sannhets erkjennelse.
௭எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாக இருக்கிற பெண்களுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
8 Som Jannes og Jambres stod Moses imot, således står også disse sannheten imot, mennesker som er fordervet i sitt sinn og uduelige I troen.
௮யந்நேயும் யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்துநின்றதுபோல இவர்களும் சத்தியத்திற்கு எதிர்த்துநிற்கிறார்கள்; இவர்கள் தீய சிந்தையுள்ள மனிதர்கள், விசுவாச காரியத்தில் பரீட்சைக்கு நிற்காதவர்கள்.
9 Dog, de skal ikke få mere fremgang; for deres uforstand skal bli åpenbar for alle, likesom og hines blev.
௯ஆனாலும், இவர்கள் அதிகமாகப் பலப்படுவதில்லை; அந்த இருவருடைய அறிவீனம் எல்லோருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய அறிவீனமும் வெளிப்படும்.
10 Men du har efterfulgt min lære, min ferd, mitt forsett, min tro, min langmodighet, min kjærlighet, min tålmodighet,
௧0நீயோ என் போதகத்தையும் நடக்கையையும் நோக்கத்தையும் விசுவாசத்தையும் நீடிய சாந்தத்தையும் அன்பையும் பொறுமையையும்,
11 mine forfølgelser, mine lidelser, sådanne som møtte mig i Antiokia, i Ikonium, i Lystra, sådanne forfølgelser som jeg har utholdt, og Herren har fridd mig ut av dem alle sammen.
௧௧அந்தியோகியா, இக்கோனியா, லீஸ்திரா என்னும் பட்டணங்களில் எனக்கு உண்டான துன்பங்களையும் பாடுகளையும் நன்றாக அறிந்திருக்கிறாய்; எவ்வளவோ துன்பங்களைச் சகித்தேன்; இவைகள் எல்லாவற்றிலிருந்தும் கர்த்தர் என்னைக் காப்பாற்றினார்.
12 Og alle som vil leve gudfryktig i Kristus Jesus, skal bli forfulgt.
௧௨அன்றியும் கிறிஸ்து இயேசுவிற்குள் தேவபக்தியாக நடக்க விருப்பமாக இருக்கிற அனைவரும் துன்பப்படுவார்கள்.
13 Men onde mennesker og slike som kverver synet på folk, går frem til det verre; de fører vill og farer vill.
௧௩பொல்லாதவர்களும் ஏமாற்றுகிறவர்களாகவும் மோசம்போக்குகிறவர்களாகவும், மோசம்போகிறவர்களாகவும் இருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.
14 Men bli du i det som du har lært, og som du er blitt overbevist om, da du vet hvem du har lært det av,
௧௪நீ கற்று உறுதிசெய்துகொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை யாரிடத்திலிருந்து கற்றுக்கொண்டாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல்,
15 og da du fra barndommen av kjenner de hellige skrifter, som kan gjøre dig vis til frelse ved troen på Kristus Jesus.
௧௫கிறிஸ்து இயேசுவைப்பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்பிற்கு ஏற்ற ஞானம் உள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.
16 Den hele Skrift er innblest av Gud av Gud og nyttig til lærdom, til overbevisning, til rettledning, til optuktelse i rettferdighet,
௧௬வேத வாக்கியங்களெல்லாம் தேவனால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனிதன் தேறினவனாகவும், எந்த நல்லசெயல்களையும் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக,
17 forat det Guds menneske kan være fullkommen, duelig til all god gjerning.
௧௭அவைகள் உபதேசத்திற்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது.