< 2 Korintierne 12 >

1 Jeg må rose mig skjønt det ikke er gagnlig; men jeg kommer nu til syner og åpenbarelser av Herren.
மேன்மைபாராட்டுகிறது எனக்குத் தகுதியானது இல்லையே; ஆனாலும், கர்த்தர் அருளிய தரிசனங்களையும் வெளிப்படுத்தல்களையும் சொல்லுகிறேன்.
2 Jeg kjenner et menneske i Kristus - om han var i legemet, vet jeg ikke, eller utenfor legemet, vet jeg ikke; Gud vet det - en som for fjorten år siden blev rykket like inn i den tredje himmel.
கிறிஸ்துவிற்குள்ளான ஒரு மனிதனை அறிவேன்; அவன் பதினான்கு வருடத்திற்கு முன்பே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
3 Og jeg kjenner dette menneske - om han var i legemet eller utenfor legemet, vet jeg ikke; Gud vet det -
அந்த மனிதன் பரதீசுக்குள் எடுக்கப்பட்டு, மனிதன் பேசப்படாததும் வாக்குக்கெட்டாததுமான வார்த்தைகளைக் கேட்டான் என்று அறிந்திருக்கிறேன்.
4 han blev rykket inn i Paradis og hørte usigelige ord, som det ikke er et menneske tillatt å tale.
அவன் சரீரத்தில் இருந்தானோ அல்லது சரீரத்திற்கு வெளியே இருந்தானோ, அதை நான் அறியேன்; தேவன் அறிவார்.
5 Av dette vil jeg rose mig; men av mig selv vil jeg ikke rose mig, uten av min skrøpelighet.
இப்படிப்பட்டவனைக்குறித்து மேன்மைபாராட்டுவேன்; ஆனாலும் என்னைக்குறித்து என் பலவீனங்களைத்தவிர, வேறொன்றிலும் மேன்மைபாராட்டமாட்டேன்.
6 For om jeg vil rose mig, blir jeg ikke en dåre; for det er sannhet jeg vil tale; men jeg lar det være, forat ingen skal tenke større om mig enn som han ser mig eller hører av mig.
சத்தியமானதை நான் பேசுகிறேன்; நான் மேன்மைபாராட்ட விரும்பினாலும், நான் புத்தியீனன் இல்லை, ஆனாலும் ஒருவனும் என்னிடம் பார்த்ததற்கும், கேட்டதற்கும் மேலாக என்னை நினைக்காமலிருக்க நான் அப்படிச் செய்யாதிருப்பேன்.
7 Og forat jeg ikke skal ophøie mig av de høie åpenbarelser, er det gitt mig en torn i kjødet, en Satans engel, forat han skal slå mig, så jeg ikke skal ophøie mig.
அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினால் நான் என்னை உயர்த்தாமல் இருக்க, என் சரீரத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; நான் என்னை உயர்த்தாமல் இருக்க, அது என்னைக் குத்தும் சாத்தானுடைய தூதனாக இருக்கிறது.
8 Om denne bad jeg Herren tre ganger at han måtte vike fra mig;
அது என்னைவிட்டு நீங்கும்படி, நான் மூன்றுமுறை கர்த்தரிடம் வேண்டிக்கொண்டேன்.
9 og han sa til mig: Min nåde er dig nok; for min kraft fullendes i skrøpelighet. Derfor vil jeg helst rose mig av min skrøpelighet, forat Kristi kraft kan bo i mig.
அதற்கு அவர்: என் கிருபை உனக்குப் போதும்; உன் பலவீனத்திலே என் பலம் பூரணமாக இருக்கும் என்றார். எனவே, கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாக மேன்மைபாராட்டுவேன்.
10 Derfor er jeg vel til mote i skrøpelighet, i mishandling, i nød, i forfølgelser, i trengsler for Kristi skyld; for når jeg er skrøpelig, da er jeg sterk.
௧0அப்படியே நான் பலவீனமாக இருக்கும்போதே பலமுள்ளவனாக இருக்கிறேன்; எனவே கிறிஸ்துவுக்காக எனக்கு வரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.
11 Jeg er blitt en dåre; I har tvunget mig til det. For jeg burde få ros av eder; jeg stod jo ikke i noget tilbake for de såre store apostler, om jeg enn er intet.
௧௧மேன்மைபாராட்டி, புத்தியீனன் ஆனேன்; நீங்களே இதற்கு என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். நான் ஒன்றுமில்லை என்றாலும், பிரதான அப்போஸ்தலர்களுக்கும் நான் சிறிதளவும் குறைந்தவனாக இல்லாதபடியால், உங்களாலே பாராட்டப்பட வேண்டியதாக இருந்ததே.
12 En apostels tegn blev iallfall gjort blandt eder med all utholdenhet, både med tegn og under og kraftige gjerninger.
௧௨அப்போஸ்தலனுக்குரிய அடையாளங்கள் எல்லாவிதமான பொறுமையோடும், அதிசயங்களோடும், அற்புதங்களோடும், வல்லமைகளோடும், உங்களுக்குள்ளே நடத்தப்பட்டதே.
13 For hvad var det I blev tilsidesatt i for de andre menigheter uten i det at jeg ikke falt eder til byrde? Tilgi mig denne urett!
௧௩எதிலே மற்றச் சபைகளுக்குக் குறைவாக இருந்தீர்கள்? நான் உங்களை வருத்தப்படுத்தாமல் இருந்ததே உங்களுக்குக் குறைவு; இந்த அநியாயத்திற்காக என்னை மன்னியுங்கள்.
14 Se, for tredje gang er jeg nu rede til å komme til eder, og jeg vil ikke falle eder til byrde; for jeg søker ikke det som eders er, men eder selv. Barna er jo ikke skyldige å samle til foreldrene, men foreldrene til barna.
௧௪இதோ, உங்களிடம் மூன்றாவது முறையும் வருவதற்கு ஆயத்தமாக இருக்கிறேன்; நான் உங்களை வருத்தப்படுத்துவது இல்லை; நான் உங்களுடையவைகளை அல்ல, உங்களையே தேடுகிறேன்; பெற்றோருக்குக் குழந்தைகள் இல்லை, குழந்தைகளுக்குப் பெற்றோர்களே பொக்கிஷங்களைச் சேர்த்துவைக்கவேண்டும்.
15 Men jeg vil med glede ofre, ja bli ofret for eders sjeler, om jeg enn elskes dess mindre av eder jo mere jeg elsker eder.
௧௫எனவே, நான் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறேனோ அவ்வளவு குறைவாக உங்களால் நான் நேசிக்கப்பட்டிருந்தாலும், மிகவும் சந்தோஷமாக நான் உங்களுடைய ஆத்துமாக்களுக்காகச் செலவுபண்ணவும் செலவுபண்ணப்படவும் விரும்புகிறேன்.
16 Men la så være at jeg ikke var eder til byrde, men jeg var listig og fanget eder med svik!
௧௬அப்படியே ஆகட்டும், நான் உங்களுக்குச் சுமையாக இருக்கவில்லை; ஆனாலும், உதவி செய்கிறவனாக இருந்து, தந்திரத்தினாலே உங்களைப் பிடித்தேனாம்.
17 Søkte jeg vel vinning av eder ved nogen av dem som jeg sendte til eder?
௧௭நான் உங்களிடம் அனுப்பினவர்களில் எவன் மூலமாவது உங்களிடம் நன்மையைத் தேடினது உண்டா?
18 Jeg tilskyndte Titus og sendte vår bror med ham; mon vel Titus søkte vinning av eder? vandret vi ikke i den samme ånd? ikke i de samme spor?
௧௮தீத்து உங்களிடம் வரும்படி நான் அவனைக் கேட்டுக்கொண்டு, அவனோடுகூட ஒரு சகோதரனை அனுப்பினேன்; தீத்து உங்களிடம் ஏதாவது நன்மையைத் தேடினானா? நாங்கள் ஒரே ஆவியை உடையவர்களாக, ஒரே அடிச்சுவடுகளில் நடந்தோம் அல்லவா?
19 Alt lenge har I tenkt at det er eder vi forsvarer oss for. Nei, det er for Guds åsyn vi taler i Kristus; men alt er til eders opbyggelse, mine elskede!
௧௯நாங்கள் யோக்கியமானவர்கள் என்று தெரியும்படி உங்களிடம் பேசுகிறோம் என்று நினைக்கிறீர்களோ? தேவனுக்கு முன்பாகக் கிறிஸ்துவிற்குள் பேசுகிறோம். பிரியமானவர்களே, எல்லாவற்றையும் உங்களுடைய பக்திவளர்ச்சிக்காகச் செய்கிறோம்.
20 For jeg frykter for at når jeg kommer, skal jeg ikke finne eder slik som jeg ønsker, og at jeg skal finnes av eder slik som I ikke ønsker - at det skal være kiv, avind, vrede, stridigheter, baktalelse, sladder, opblåsthet, uorden -
௨0ஆனாலும் நான் வந்து, உங்களை என் மனவிருப்பத்தின்படி இருக்கிறவர்களாகப் பார்க்காமலும், நானும் உங்களுடைய மனவிருப்பத்தின்படி இருக்கிறவனாகப் பார்க்கப்படாமல் இருப்பேனோ என்றும்; விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், வாக்குவாதங்கள், புறங்கூறுதல், கோள் சொல்லுதல், இறுமாப்பு, கலகங்கள் ஆகிய இவைகள் உங்களுக்குள்ளே உண்டாயிருக்குமோ என்றும்;
21 at når jeg kommer, skal min Gud atter ydmyke mig hos eder, og jeg skal komme til å sørge over mange av dem som før har syndet og ikke har omvendt sig fra den urenhet og utukt og skamløshet som de har drevet.
௨௧மீண்டும் நான் வருகிறபோது, என் தேவன் உங்களிடம் என்னைத் தாழ்த்தும்படிக்கு முன்பு பாவம் செய்தவர்களாகிய அநேகர் தாங்கள் செய்த அசுத்தத்தையும் வேசித்தனத்தையும் காமவிகாரத்தையும்விட்டு மனம்திரும்பாமல் இருக்கிறதைக்குறித்து, நான் துக்கப்படவேண்டியதாக இருக்குமோ என்றும் பயந்திருக்கிறேன்.

< 2 Korintierne 12 >