< 1 Peters 4 >

1 Da nu Kristus har lidt i kjødet, så væbne og I eder med den samme tanke, at den som har lidt i kjødet, er ferdig med synden,
இப்படியிருக்க, கிறிஸ்து நமக்காக சரீரத்திலே பாடுகள்பட்டதினால், நீங்களும் அப்படிப்பட்ட சிந்தையை ஆயுதமாக அணிந்துகொள்ளுங்கள்.
2 så I ikke lenger skal leve efter menneskers lyster, men efter Guds vilje, den tid I ennu skal være i kjødet.
ஏனென்றால், சரீரத்தில் பாடுபடுகிறவன் இனி சரீரத்தில் இருக்கும் காலம்வரைக்கும் மனிதர்களுடைய இச்சைகளின்படி பிழைக்காமல் தேவனுடைய விருப்பத்தின்படியே பிழைப்பதற்காகப் பாவங்களைவிட்டு விலகியிருப்பான்.
3 For det er nok at I i den fremfarne livstid har gjort hedningenes vilje, idet I ferdedes i skamløshet, lyster, fyll, svir, drikk og skammelig avgudsdyrkelse;
கடந்த வாழ்நாட்களிலே நாம் யூதரல்லாத மக்கள் செய்ய விரும்புவதைபோல செய்துவந்தது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் தீயஆசைகளையும் நடத்தி, மதுஅருந்தியும், களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரக ஆராதனையைச் செய்துவந்தோம்.
4 derfor undrer de sig når I ikke renner med dem ut i den samme strøm av ryggesløshet, og spotter eder;
அந்தத் துன்மார்க்க உளையிலே அவர்களோடு சேர்ந்து நீங்கள் விழுந்துவிடாமல் இருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களை அவமதிக்கிறார்கள்.
5 men de skal gjøre regnskap for ham som står ferdig til å dømme levende og døde.
உயிரோடு இருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் நியாயத்தீர்ப்புக் கொடுக்க ஆயத்தமாக இருக்கிறவருக்கு அவர்கள் கணக்கு ஒப்புவிப்பார்கள்.
6 For derfor blev evangeliet forkynt også for døde at de visstnok skulde dømmes som mennesker i kjødet, men leve således som Gud i ånden.
இதற்காக மரித்தோர்கள், மனிதர்களுக்கு முன்பாக சரீரத்திலே தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தும், தேவன்முன்பாக ஆவியிலே பிழைப்பதற்காக, அவர்களுக்கும் நற்செய்தி அறிவிக்கப்பட்டது.
7 Men alle tings ende er kommet nær; vær derfor sindige og edrue så I kan bede,
எல்லாவற்றிற்கும் முடிவு நெருங்கிவிட்டது; ஆகவே, தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருந்து, ஜெபம்பண்ணுவதற்கு கவனம் உள்ளவர்களாக இருங்கள்.
8 og ha fremfor alle ting inderlig kjærlighet til hverandre! for kjærligheten skjuler en mangfoldighet av synder.
எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்பு உள்ளவர்களாக இருங்கள்; அன்பு திரளான பாவங்களை மூடும்.
9 Vær gjestfrie mot hverandre uten knurr!
முறுமுறுப்பு இல்லாமல் ஒருவரையொருவர் உபசரியுங்கள்.
10 Efter som enhver har fått en nådegave, så tjen hverandre med den som gode husholdere over Guds mangehånde nåde:
௧0அவனவன் பெற்றுக்கொண்ட வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல பொறுப்பாளர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.
11 om nogen taler, han tale som Guds ord; om nogen tjener i menigheten, han tjene som av den kraft Gud gir, forat Gud må æres i alle ting ved Jesus Kristus, han som æren og makten tilhører i all evighet. Amen. (aiōn g165)
௧௧ஒருவன் போதனை செய்தால் தேவனுடைய வார்த்தைகளின்படியே போதனை செய்யவேண்டும்; ஒருவன் உதவிசெய்தால் தேவன் தந்தருளும் பெலத்தின்படியே உதவிசெய்யவேண்டும்; எல்லாவற்றிலேயும் இயேசுகிறிஸ்து மூலமாக தேவன் மகிமைப்படும்படியே செய்வீர்களாக; அவருக்கே மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
12 I elskede! undre eder ikke over den ild som kommer over eder til prøvelse, som om det hendte eder noget underlig;
௧௨பிரியமானவர்களே, உங்களைப் பரீட்சைப்பார்க்க உங்கள் நடுவில் அக்கினியைப்போன்ற சோதனைகள் வரும்போது ஏதோ புதுமை நடக்கிறது என்று ஆச்சரியப்படாமல்,
13 men i samme mon som I har del i Kristi lidelser, skal I glede eder, forat I også i hans herlighets åpenbarelse kan glede eder med jubel.
௧௩கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழ்வதற்காக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.
14 Om I hånes for Kristi navns skyld, er I salige, fordi herlighetens og Guds Ånd hviler over eder.
௧௪நீங்கள் கிறிஸ்துவின் நாமத்திற்காக அவமதிக்கப்பட்டால் பாக்கியவான்கள்; ஏனென்றால், தேவனுடைய ஆவியாகிய மகிமையுள்ள ஆவியானவர் உங்கள்மேல் தங்கியிருக்கிறார்; அவர்களாலே அவமதிக்கப்படுகிறார்; உங்களாலே மகிமைப்படுகிறார்.
15 For ingen av eder må lide som morder eller tyv eller ugjerningsmann eller som en som blander sig i andres saker;
௧௫ஆகவே, உங்களில் யாரும் கொலைபாதகனாகவோ, திருடனாகவோ, தீங்கு செய்தவனாகவோ, அந்நிய காரியங்களில் தலையிட்டுக்கொண்டவனாகவோ இருந்து பாடுபடுகிறவனாக இருக்கக்கூடாது.
16 men lider han som kristen, da skal han ikke skamme sig, men prise Gud for dette navn.
௧௬ஒருவன் கிறிஸ்தவனாக இருப்பதினால் பாடுபட்டால் வெட்கப்படாமல் இருந்து, அதினால் தேவனை மகிமைப்படுத்தவேண்டும்.
17 For det er nu tiden da dommen skal begynne med Guds hus; men begynner det med oss, hvad blir da enden for dem som ikke vil tro Guds evangelium?
௧௭நியாயத்தீர்ப்பு தேவனுடைய வீட்டிலே ஆரம்பமாகும் காலமாக இருக்கிறது; அது முதலில் நம்மிடத்திலே ஆரம்பிக்கப்பட்டால் தேவனுடைய நற்செய்திக்குக் கீழ்ப்படியாதவர்களின் முடிவு எப்படியாக இருக்கும்?
18 Og blir den rettferdige vanskelig frelst, hvor skal det da bli av den ugudelige og synderen?
௧௮“நீதிமானே இரட்சிக்கப்படுவது கடினமென்றால், பக்தியில்லாதவனும் பாவியும் எங்கே நிற்பார்கள்?
19 Derfor skal og de som efter Guds vilje må lide, overgi sine sjeler til den trofaste skaper, idet de gjør det gode.
௧௯ஆகவே, தேவனுடைய விருப்பத்தினால் பாடுகளை அனுபவிக்கிறவர்கள் நன்மை செய்கிறவர்களாகத் தங்களுடைய ஆத்துமாக்களை உண்மையுள்ள சிருஷ்டிகர்த்தாவாகிய அவருக்கு ஒப்புக்கொடுக்கவேண்டும்.

< 1 Peters 4 >