< भजनसंग्रह 114 >

1 जब इस्राएलले मिश्रदेश छोड्‍यो, याकूबका घराना विदेशी भाषा बोल्ने मानिसहरूबाट आयो,
இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
2 तब यहूदा उहाँको पवित्रस्थान र इस्राएल उहाँको राज्य बन्‍यो ।
யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.
3 समुद्रले हेर्‍यो र भाग्यो । यर्दन पछि फर्कियो ।
கடல் கண்டு விலகி ஓடினது; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
4 पहाडहरू पाठाहरूझैं उफ्रे, डाँडहरू थुमाहरूझैं उफ्रे ।
மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
5 ए समुद्र, तँ किन भागिस्? ए यर्दन, तँ किन पछि फर्किस्?
கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;
6 ए पहाड, तँ किन पाठाहरूझैं उफ्रिस्? ए साना डाँडाहरू, तिमीहरू किन थुमाहरूझैं उफ्र्यौ?
மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
7 ए पृथ्वी, परमप्रभुको याकूबका परमेश्‍वरको उपस्थितिमा सामु थरथर हो ।
பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
8 उहाँले चट्टानलाई पानीको तलाउमा र कडा चट्टानलाई पानीको मूलमा बद्‍लिनुभयो ।
அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.

< भजनसंग्रह 114 >