< यहोशू 16 >
1 योसेफको कुलको भू-भागको अंश यरीहोमा यर्दनबाट यरीहोको पानीका मुहानहरूको पूर्वतिर, मरुभूमितिर, बेथेलको पहाडी देश हुँदै यरीहोबाट माथि जान्छ ।
யோசேப்பின் பங்கு, எரிகோவின் நீர் நிலைகளுக்குக் கிழக்கே, யோர்தானிலிருந்து எரிகோவுக்கு அப்பால், பாலைவன வழியாகச் சென்று பெத்தேல் மலைநாட்டை அடைந்தது.
2 त्यसपछि यो बेथेलबाट लूजतिर, अरकीको क्षेत्रतिर गयो ।
பெத்தேல் என்னும் லூஸில் இருந்து அதரோத்திலுள்ள அர்கியின் பிரதேசத்தைக் கடந்து,
3 त्यसपछि यो तल्लो बेथ-होरोनको क्षेत्रसम्मै यल्पेतीको क्षेत्रसम्म पश्चिमतिर झर्यो र गेजेरतिर गयो; यो समुद्रमा टुङ्गियो ।
பின் மேற்குத் திசையில் யப்லெத்திரின் பிரதேசத்தை நோக்கிக் கீழ் இறங்கி, அப்பிரதேசத்திலுள்ள கீழ் பெத் ஓரோன், கேசேர்வரை சென்று அங்கிருந்து கடலில் முடிவடைந்தது.
4 योसेफका कुल मनश्शे र एफ्राइमले तिनीहरूका उत्तराधिकार यसरी प्राप्त गरे ।
இவ்வாறு யோசேப்பின் மகன்களான மனாசேயும், எப்பிராயீமும் தங்கள் சொத்துரிமையைப் பெற்றுக்கொண்டார்கள்.
5 कुल-कुलअनुसार एफ्राइमको कुलको क्षेत्रः तिनीहरूको भागको पूर्वतिरको सिमाना अतारोत-अद्दारबाट माथिल्लो बेथ-होरोनसम्म निस्क्यो,
எப்பிராயீம் கோத்திரத்திற்கு வம்சம் வம்சமாகக் கொடுக்கப்பட்ட பிரதேசமாவது: அவர்களுடைய சொத்துரிமை நிலத்தின் எல்லை, கிழக்கே அதரோத் அதாரில் ஆரம்பித்து, மேல் பெத் ஓரோன் வழியாக,
6 र यो त्यहाँबाट सममुद्रसम्म पुग्यो । मिक्मतातबाट उत्तरतिर यो पूर्वतर्फ तानत-शीलोतिर मोडियो र यसभन्दा उता पूर्वतिर यानोह निस्क्यो ।
அங்கிருந்து மத்திய தரைக்கடலுக்குச் சென்றது. வடக்கிலுள்ள மிக்மேத்தா என்னும் இடத்தில் இருந்து, தானாத் சீலோவுக்குக் கிழக்கே வளைந்துசென்று அதனை கடந்து கிழக்கிலுள்ள யநோகாவைச் சென்றடைந்தது.
7 त्यसपछि यो यानोहबाट अतारोतिर तल झर्यो, र यरीहो पुगेर यर्दनमा अन्त भयो ।
பின் யநோகாவிலிருந்து கீழ்நோக்கிச்சென்று, அதரோத்தையும் நாராவையும் கடந்து எரிகோவை நெருங்கி யோர்தான் நதியில் முடிந்தது.
8 तप्पूहबाट पश्चिमतिर कना खोलातिर समुद्रमा टुङ्गियो । यो कुल-कुलअनुसार एफ्राइमको कुलको भाग,
தப்புவாவிலிருந்து எல்லையானது மேற்கே கானா நதிக்குச் சென்று மத்திய தரைக்கடலில் முடிவடைந்தது. இதுவே எப்பிராயீம் கோத்திரத்தாருக்கு அவர்களின் குடும்பங்களின்படி அளிக்கப்பட்ட சொத்துரிமை நிலமாகும்.
9 मनश्शेको कुलको उत्तराधिकारभित्र एफ्राइमको कुललाई चुनिएका सहरहरूसँगै तिनीहरूका गाउँहरूसहित सबै सहर थिए ।
இதைவிட மனாசேயின் கோத்திரத்தாருக்கு அளிக்கப்பட்ட சொத்துரிமை நிலத்தில் எப்பிராயீமியருக்குக் கொடுக்கப்பட்ட நகரங்களும் அவற்றின் சுற்றுப்புறக் கிராமங்களும் இதற்குள் அடங்கியிருந்தன.
10 तिनीहरूले गेजेरमा बस्ने कनानीहरूलाई धपाएनन्, त्यसैले आजको दिनसम्म पनि एफ्राइमभित्र कनानीहरू बस्छन्, तर यी मानिसहरूलाई बेगारी काम गर्न लगाइएको थियो ।
ஆனால் எப்பிராயீமியர் கேசேர் பகுதியில் வாழ்ந்த கானானியரை அங்கிருந்து வெளியேற்றவில்லை. கானானியரும் எப்பிராயீம் மக்கள் மத்தியில் இன்றுவரை வாழ்கின்றார்கள். அவர்கள் கட்டாய வேலைசெய்ய வேண்டியிருந்தது.