< १ इतिहास 8 >
1 बेन्यामीन पाँच छोराहरूमा जेठा बेला, अश्बेल, अहरह,
பென்யமீனின் மகன்கள்: பேலா முதற்பேறானவன், இரண்டாவது மகன் அஸ்பேல், மூன்றாவது மகன் அகராக்,
நான்காவது மகன் நோகா, ஐந்தாவது மகன் ரப்பா.
3 बेलाका छोराहरू अद्दार, गेरा, अबीहूद,
பேலாவின் மகன்கள்: ஆதார், கேரா, அபியூத்;
5 गेरा, शपूपान र हुराम थिएन ।
கேரா, செப்புப்பான், ஊராம்.
6 एहूदका सन्तानहरू जो मानहतमा बसाइँ सर्न बाध्य पारिएका गेबाका बासिन्दाहरूका पुर्खाका घरानाहरूका मुखियाहरू यि नै थिए:
ஏகூத்தின் சந்ததிகள்: இவர்கள் மனாகாத்திற்கு நாடுகடத்தப்பட்டு கேபாவின் குடிகளின் தலைவர்களாயிருந்தவர்கள்:
7 नामान, अहियाह र गेरा । गेराले तिनीहरूलाई सर्ने बेलामा डोर्याएका थिए । तिनी उज्जा र अहीहूदका पिता थिए ।
நாமான், அகியா, கேரா. ஊசா, அகியூத் என்பவர்களின் தகப்பன் கேரா இவர்களை நாடுகடத்திக் கொண்டுபோனான்.
8 आफ्ना पत्नीहरू हुशीम र बारासित सम्बन्ध-बिच्छेद गरेपछि मोआब देशमा सहरेम छोराछोरीका पिता बने ।
சகராயீம் தனது மனைவிகளான ஊசிம், பாராள் என்பவர்களை விவாகரத்துச் செய்தபின் மோவாப் நாட்டிலே அவனுக்கு மகன்கள் பிறந்தார்கள்.
9 सहरेम आफ्नी पत्नी होदेशबाट योबाब, सिबिअ, मेशा, मल्काम,
அவனுடைய மனைவி ஒதேசாள் என்பவள் யோவாப், சிபியா, மேசா, மல்காம்,
10 यूस, साकिया र मिर्माका पिता बने । आ-आफ्ना पिताका घरानाहरूका मुखिहरू, अर्थात् तिनका छोराहरू यि नै थिए ।
எயூஸ், சாகியா, மிர்மா ஆகியோரைப் பெற்றாள். இவர்களே குடும்பங்களின் தலைவர்களான அவனுடைய மகன்கள்.
11 तिनी हुशीमबाट पहिले नै अबीतूब र एल्पालका पिता भइसकेका थिए ।
அவனுடைய மனைவி ஊசிம் மூலம் அபிதூபையும் எல்பாலையும் பெற்றான்.
12 एल्पालका छोराहरू एबेर, मिशाम र शेमेद थिए (जसले ओनो र लोदोलाई ती वरिपरिका गाउँहरूसहित निर्माण गरे) ।
எல்பாலின் மகன்கள்: ஏபேர், மீஷாம், ஷேமேத்; ஷேமேத் ஓனோவையும், லோதையும் அதன் கிராமங்களையும் கட்டினான்.
13 बरीआ र शेमा पनि त्यहाँ थिए । तिनीहरू गातका बासिन्दाहरूलाई निकालेर अय्यालोनमा बस्नेहरूका पिताहरूका घारानाका मुखियाहरू थिए ।
எல்பாலின் மற்ற பிள்ளைகள் பெரீயா, சேமா என்பவர்கள். இவர்கள் ஆயலோனில் இருந்த குடும்பங்களுக்குத் தலைவர்களாயிருந்து, காத்தின் குடிகளைத் துரத்திவிட்டனர்.
14 बरीआका छोराहरू यि नै थिएः अहियो, शाशक, यरेमोत,
அகியோ, சாஷாக், எரேமோத்
16 मिखाएल, यिश्पा र योहा बरीआका छोराहरू थिए ।
மிகாயேல், இஸ்பா, யோகா என்பவர்கள் பெரீயாவின் மகன்கள்.
17 एल्पालका छोराहरू यि नै थिएः जबदियाह, मशुल्लाम, हिज्की, हेबेर,
செபதியா, மெசுல்லாம், இஸ்கி, ஏபேர்,
18 यिश्मरै, यिज्लीअ, र योबाब थिए ।
இஸ்மெராயி, இஸ்லியா, யோவாப் என்பவர்கள் எல்பாலின் மகன்கள்.
19 शिमीका छोराहरू यि नै थिएः याकीम, जिक्री, जब्दी,
யாக்கீம், சிக்ரி, சப்தி
20 एलीएनै, सिल्लतै, एलीएल,
எலியேனாய், சில்தாய், எலியேல்,
21 अदायाह, बरायाह र शिम्रात थिए ।
அதாயா, பெராயா, சிம்ராத் என்பவர்கள் சீமேயியின் மகன்கள்.
22 शाशकका छोराहरू यि नै थिएः यिश्पान, एबेर, एलीएल,
இஸ்பான், ஏபேர், ஏலியேல்,
23 अब्दोन, जिक्री, हानान,
அப்தோன், சிக்ரி, ஆனான்,
24 हनन्याह, एलाम, अन्तोतियाह,
அனனியா, ஏலாம், அந்தோதியா,
இபிதியா, பெனூயேல் என்பவர்கள் சாஷாக்கின் மகன்கள்.
26 यरोहामका छोराहरू यि नै थिएः शम्शरै, सहर्याह, अतल्याह,
சம்செராய், செகரியா, அத்தாலியா,
27 यारेश्याह, एलिया र जिक्री ।
யாரெஷியா, எலியா, சிக்ரி என்பவர்கள் எரோகாமின் மகன்கள்.
28 यिनीहरू आ-आफ्ना पिताका घरानाहरूका मुखियाहरू र यरूशलेममा बस्नेहरूका मुख्य मानिसहरू थिए ।
இவர்கள் எல்லோரும் வம்சங்களுக்கேற்ப பதிவு செய்யப்பட்டபடி குடும்பங்களின் தலைவர்களாகவும், முதன்மையானவர்களாகவும் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
29 गिबोनका पिता यीएलचाहिं गिबोनमा बस्थे, तिनकी पत्नीको नाउँ माका थियो ।
கிபியோனின் தலைவனான யெகியேல் கிபியோனில் வாழ்ந்தான். இவனது மனைவியின் பெயர் மாக்காள்.
30 तिनका जेठा छोरा अब्दोन, तिनीपछि सूर, कीश, बाल, नेर, नादाब,
இவனது மூத்த மகன் அப்தோன்; அவனுக்குப்பின் பிறந்தவர்கள் சூர், கீஸ், பாகால், நேர், நாதாப்,
31 गदोर, अहियो, र जेकेर, थिए ।
கேதோர், அகியோ, சேகேர்,
32 यीएलका अर्का छोरा मिक्लोत थिए, जो शिमाहका पिता भए । तिनीहरू पनि यरूशलेममा आफ्ना आफन्तहरूका नजिक बस्थे ।
மிக்லோத் என்பவர்கள். மிக்லோத் சிமியாவின் தகப்பன். இவர்களும் தங்கள் உறவினர்களுக்கு அருகில் எருசலேமில் வாழ்ந்தார்கள்.
33 नेर कीशका पिता थिए । कीश शाऊलका पिता थिए । शाऊल जोनाथन, मल्कीशूअ, अबीनादाब र एश्बालका पिता थिए ।
நேர் என்பவன் கீஷின் தகப்பன்; கீஷ் சவுலின் தகப்பன்; சவுல் யோனத்தான், மல்கிசூவா, அபினதாப், எஸ்பால் ஆகியோரின் தகப்பன்.
34 जोनाथनका छोरा मरीब्बाल थिए । मरीब्बाल मीकाका पिता थिए ।
யோனத்தானின் மகன்: மேரிபால்; இவன் மீகாவின் தகப்பன்.
35 मीकाका छोराहरू पीतोन, मेलेक, तारे र आहाज थिए ।
மீகாவின் மகன்கள்: பித்தோன், மெலெக், தரேயா, ஆகாஸ்.
36 आहाज यहोअदाका पिता बने । यहोअदा आलेमेत, अज्मावेत र जिम्रीका पिता थिए । जिम्री मोसका पिता थिए ।
ஆகாஸ் யோகதாவின் தகப்பன்; யோகதா அலெமேத், அஸ்மாவேத், சிம்ரி ஆகியோரின் தகப்பன். சிம்ரி மோசாவின் தகப்பன்.
37 मोस बिनेका पिता थिए । बिने रफाहका पिता थिए । रफाह एलासाका पिता थिए । एलासा आसेलका पिता थिए ।
மோசா பினியாவின் தகப்பன்; அவன் மகன் ரப்பா, அவன் மகன் எலியாசா, அவன் மகன் ஆத்சேல்,
38 आसेलका छ छोराहरू थिएः अज्रीकाम, बोकरू, इश्माएल, शार्याह, ओबदिया र हानान । यी सबै आसेलका छोराहरू थिए ।
ஆத்சேலுக்கு ஆறு மகன்கள் இருந்தனர்; அவர்களின் அஸ்ரீக்காம், பொக்குரு, இஸ்மயேல், சேராயா, ஒபதியா, ஆனான் ஆகியோர். இவர்கள் யாவரும் ஆத்சேரின் மகன்கள்.
39 तिनका भाइ एशेकका छोराहरू जेठा ऊलाम, माहिला येऊश र कान्छा एलीपेलेत थिए ।
அவனுடைய சகோதரனான ஏசேக்கின் மகன்கள்: முதற்பேறானவன் ஊலாம், இரண்டாவது மகன் எயூஷ், மூன்றாவது மகன் எலிபேலேத்.
40 ऊलामका छोराहरू योद्धाहरू र धनुर्धारीहरू थिए । तिनीहरूका धेरै, जम्मा १५० जना छोराहरू र नातिहरू थिए । यी सबै जना बेन्यामीनका सन्तानहरू थिए ।
ஊலாமின் மகன்கள் தைரியமுள்ள வில் ஏந்தும் வீரர்களாயிருந்தனர். இவர்களுக்கு மகன்களும், பேரப்பிள்ளைகளுமாக நூற்றைம்பதுபேர் இருந்தனர். இவர்கள் எல்லோரும் பென்யமீனின் சந்ததிகள்.