< KwabaseRoma 9 >
1 Ngikhuluma iqiniso kuKristu, kangiqambi manga, isazela sami sifakazelana lami ngoMoya oNgcwele,
௧எனக்கு அதிக துக்கமும் இடைவிடாத மனவேதனையும் உண்டாயிருக்கிறது;
2 ukuthi ngilokudabuka okukhulu, lobuhlungu obungapheliyo enhliziyweni yami.
௨நான் சொல்லுகிறது பொய்யல்ல, கிறிஸ்துவிற்குள் உண்மையைச் சொல்லுகிறேன் என்று பரிசுத்த ஆவியானவருக்குள் என் மனச்சாட்சியும் எனக்குச் சாட்சியாக இருக்கிறது.
3 Ngoba ngingafisa ukuthi mina uqobo ngiqalekiswe kuKristu ngenxa yabazalwane bami, izihlobo zami ngokwenyama;
௩சரீரத்தின்படி என் இனத்தைச் சேர்ந்த என் சகோதரர்களுக்குப் பதிலாக நானே கிறிஸ்துவைவிட்டுச் சபிக்கப்பட்டவனாகவேண்டுமென்று விரும்புவேனே.
4 abangamaIsrayeli, okungokwabo ukuma kwabantwana, lenkazimulo, lezivumelwano, lokunikwa komlayo, lenkonzo kaNkulunkulu, lezithembiso,
௪அவர்கள் இஸ்ரவேலர்களே; புத்திரசுவிகாரமும், மகிமையும், உடன்படிக்கைகளும், நியாயப்பிரமாணமும், தேவ ஆராதனையும், வாக்குத்தத்தங்களும் அவர்களுடையவைகளே;
5 abangababo obaba, njalo avela kubo uKristu ngokwenyama, ophezu kwakho konke, uNkulunkulu obongekayo kuze kube nininini. Ameni. (aiōn )
௫முற்பிதாக்கள் அவர்களுடையவர்களே; சரீரத்தின்படி கிறிஸ்துவும் அவர்களில் பிறந்தாரே, இவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட எல்லாவற்றிற்கும் மேலான தேவன். ஆமென். (aiōn )
6 Kodwa kakunjengokuthi ilizwi likaNkulunkulu lehlulekile. Ngoba kakusibo bonke abavela kuIsrayeli, abanguIsrayeli;
௬தேவவசனம் நிறைவேறாமல்போனது என்று சொல்லக்கூடாது; ஏனென்றால், இஸ்ரவேல் வம்சத்தார் எல்லோரும் இஸ்ரவேலர் இல்லையே.
7 njalo kungesikuthi ngoba bayinzalo kaAbrahama, bonke bangabantwana; kodwa: NgoIsaka inzalo izabizelwa kuwe.
௭அவர்கள் ஆபிரகாமின் வம்சத்தினராக இருந்தாலும் அனைவரும் பிள்ளைகள் அல்லவே; “ஈசாக்கினிடம் உன் வம்சம் விளங்கும்” என்று சொல்லியிருக்கிறதே.
8 Lokhu kutsho ukuthi, kakusibo abantwana benyama, bona bangabantwana bakaNkulunkulu; kodwa abantwana besithembiso bathiwa yinzalo.
௮அது எப்படியென்றால், சரீரத்தின்படி பிள்ளைகள் ஆனவர்கள் தேவனுடைய பிள்ளைகள் அல்லவே, வாக்குத்தத்தத்தின்படி பிள்ளைகள் ஆனவர்களே அந்த வம்சம் என்று எண்ணப்படுகிறார்கள்.
9 Ngoba ilizwi lesithembiso yileli elokuthi: Ngalesisikhathi ngizafika, njalo uSara uzakuba lendodana.
௯அந்த வாக்குத்தத்தமான வார்த்தையாவது: குறித்த காலத்திலே வருவேன், அப்பொழுது சாராள் ஒரு மகனைப் பெறுவாள் என்பதே.
10 Kakusikho lokhu kuphela, kodwa loRebeka esekhulelwe ngomunye, ubaba wethu uIsaka;
௧0இதுமட்டுமல்லாமல், நம்முடைய முற்பிதாவாகிய ஈசாக்கு என்னும் ஒருவனாலே ரெபெக்காள் கர்ப்பவதியானபோது,
11 ngoba abantwana bengakazalwa, bengakenzi okuhle loba okubi, ukuze icebo likaNkulunkulu elingokokukhetha lime, kungaveli emisebenzini, kodwa kuvele kobizayo,
௧௧குழந்தைகள் இன்னும் பிறக்காமலும், நன்மை தீமை ஒன்றும் செய்யாமல் இருக்கும்போது, தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி இருக்கிற அவருடைய தீர்மானம், செயல்களினாலே நிலைநிற்காமல் அழைக்கிறவராலே நிலைநிற்கும்படி,
12 kwatshiwo kuye ukuthi: Omkhulu uzakhonza omncinyane,
௧௨மூத்தவன், இளையவனுக்கு ஊழியம் செய்வான் என்று அவளுக்கு சொல்லப்பட்டது.
13 njengokulotshiweyo ukuthi: UJakobe ngamthanda, kodwa uEsawu ngamzonda.
௧௩அப்படியே, யாக்கோபை நேசித்து, ஏசாவை வெறுத்தேன் என்றும் எழுதியிருக்கிறது.
14 Pho-ke sizakuthini? Kukhona ukungalungi kuNkulunkulu yini? Phinde!
௧௪ஆகவே, நாம் என்னசொல்லுவோம்? தேவனிடத்திலே அநீதி உண்டென்று சொல்லலாமா? சொல்லக்கூடாதே.
15 Ngoba uthi kuMozisi: Ngizakuba lomusa kwengilomusa kuye, njalo ngimhawukele engimhawukelayo.
௧௫அவர் மோசேயைப் பார்த்து: எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் இரக்கமாக இருப்பேன், எவன்மேல் உருக்கமாக இருக்க விருப்பமாக இருப்பேனோ அவன்மேல் உருக்கமாக இருப்பேன் என்றார்.
16 Ngakho kakusikho kothandayo, njalo kakusikho kogijimayo, kodwa ngokukaNkulunkulu olesihawu.
௧௬ஆகவே, விரும்புகிறவனாலும் இல்லை, ஓடுகிறவனாலும் இல்லை, இரங்குகிற தேவனாலே ஆகும்.
17 Ngoba umbhalo uthi kuFaro: Ngakuphakamisela khona lokho, ukuze ngibonakalise amandla ami ngawe, njalo ukuze ibizo lami litshunyayelwe emhlabeni wonke.
௧௭மேலும் என்னுடைய வல்லமையை உன்னிடம் காண்பிப்பதற்காகவும், என்னுடைய பெயர் பூமியில் எங்கும் பிரசித்தமடைவதற்காகவும், உன்னை நிலைநிறுத்தினேன் என்று பார்வோனோடு சொன்னதாக வேதத்தில் சொல்லியிருக்கிறது.
18 Ngakho uhawukela lowo athanda ukumhawukela; njalo amenze abe lukhuni lowo athanda ukumenza lukhuni.
௧௮எனவே, எவன்மேல் இரக்கமாக இருக்க விருப்பாமாக இருக்கிறாரோ அவன்மேல் இரக்கமாக இருக்கிறார், எவனைக் கடினப்படுத்த விருப்பமாக இருக்கிறாரோ அவனைக் கடினப்படுத்துகிறார்.
19 Ngakho uzakuthi kimi: Usasolelani? Ngoba ngubani ongamelana lentando yakhe?
௧௯அப்படியானால், அவர் இன்னும் ஏன் குற்றம் கண்டுபிடிக்கிறார்? அவருடைய விருப்பத்திற்கு எதிர்த்து நிற்பவன் யார்? என்று என்னோடு சொல்லுவாய்.
20 Hatshi bo, wena muntu, ungubani wena ophikisana loNkulunkulu? Okubunjiweyo kungatsho yini kowakubumbayo ukuthi: Wangenzelani ngabanje?
௨0அப்படியானால், மனிதனே, தேவனோடு எதிர்த்து வாக்குவாதம் செய்கிற நீ யார்? உருவாக்கப்பட்ட பொருள் உருவாக்கினவனைப் பார்த்து: நீ என்னை ஏன் இப்படி உருவாக்கினாய் என்று சொல்லலாமா?
21 Kumbe umbumbi kalagunya yini phezu kwebumba, ukuthi ngesigaqa sisinye enze isitsha esinye esihloniphekayo, lesinye esingahloniphekiyo?
௨௧மிதிக்கப்பட்ட ஒரே களிமண்ணினாலே குயவன் ஒரு பாத்திரத்தைக் கனமான காரியத்திற்காகவும், ஒரு பாத்திரத்தைக் கனவீனமான காரியத்திற்காகவும் செய்கிறதற்கு மண்ணின்மேல் அவனுக்கு அதிகாரம் இல்லையோ?
22 Njalo uba uNkulunkulu ethanda ukubonakalisa ulaka lwakhe, lokwazisa amandla akhe, wathwala ngokubekezela okukhulu izitsha zolaka ezilungiselwe ukubhujiswa;
௨௨தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும்,
23 njalo ukuze azise inotho yenkazimulo yakhe phezu kwezitsha zomusa, ayezilungisele ngaphambili inkazimulo,
௨௩தாம் மகிமைக்காக ஆயத்தம்பண்ணின கிருபா பாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் செல்வத்தைத் தெரியப்படுத்தவும் விருப்பமாக, அழிவிற்கு ஆயத்தம்பண்ணப்பட்ட கோபத்தின் தண்டனையின் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடு பொறுமையாக இருந்தால் உனக்கு என்ன?
24 ngitsho thina, asibizileyo, kungeyisikho kumaJuda kuphela, kodwa lakwabezizwe?
௨௪அவர் யூதர்களிலிருந்து மட்டுமல்ல, யூதரல்லாத மக்களிடமிருந்து நம்மை அழைத்திருக்கிறாரே.
25 Njengalokhu akutsho lakuHoseya: Abangeyisibo abantu bami ngizababiza ngokuthi ngabantu bami; lowayengathandwa ngokuthi ngothandekayo;
௨௫அந்தப்படி: “எனக்கு மக்களாக இல்லாதவர்களை என்னுடைய மக்கள் என்றும், நேசிக்கப்படாமல் இருந்தவளை நேசிக்கப்பட்டவள் என்றும் சொல்லி அழைப்பேன்.
26 njalo kuzakuthi, endaweni lapho okwathiwa khona kubo: Kalisibo abantu bami, khona lapho bazabizwa ngokuthi ngabantwana bakaNkulunkulu ophilayo.
௨௬நீங்கள் என்னுடைய மக்கள் இல்லை என்று அவர்களுக்குச் சொல்லப்பட்ட இடத்திலே அவர்கள் ஜீவனுள்ள தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்” என்று ஓசியாவின் தீர்க்கதரிசனத்தில் சொல்லியிருக்கிறது.
27 LoIsaya umemeza ngoIsrayeli esithi: Lanxa inani labantwana bakoIsrayeli lingangetshebetshebe lolwandle, insali izasindiswa;
௨௭அல்லாமலும் இஸ்ரவேல் மக்களுடைய எண்ணிக்கை கடற்கரை மணலைப்போல இருந்தாலும், மீதியாக இருப்பவர்கள்மட்டும் இரட்சிக்கப்படுவார்கள் என்றும்;
28 ngoba uzaqeda isenzo asiqume ngokulunga; ngoba iNkosi izakwenza isenzo siqunywe ngokuphangisa emhlabeni.
௨௮அவர் நீதியோடு சீக்கிரமாகத் தம்முடைய காரியத்தை நிறைவேற்றுவார்; கர்த்தர் பூமியிலே சீக்கிரமாகவே காரியத்தை நிறைவேற்றி முடிப்பார்” என்றும், ஏசாயா இஸ்ரவேலரைக்குறித்துச் சொல்லுகிறான்.
29 Njalo njengoba uIsaya watsho ngaphambili ukuthi: Uba iNkosi yamabandla ibingasitshiyelanga inzalo, besizakuba njengeSodoma, njalo besizakwenziwa sifanane leGomora.
௨௯அல்லாமலும் ஏசாயா முன்பே சொன்னபடி: “சேனைகளின் கர்த்தர் நமக்குள்ளே ஒரு வம்சத்தைக்கூட மீதியாக வைக்காமல் இருந்தாரானால் நாம் சோதோமைப்போலாகி கொமோராவைப்போல இருந்திருப்போம்.”
30 Pho sizakuthini? Ukuthi abezizwe abangadingisisi ukulunga, bakubambile ukulunga, ukulunga-ke okungokholo;
௩0இப்படியிருக்க நாம் என்னசொல்லுவோம்? நீதியைத் தேடாத யூதரல்லாத மக்கள் நீதியை அடைந்தார்கள்; அது விசுவாசத்தினால் உண்டாகும் நீதியே.
31 kodwa uIsrayeli, edingisisa umlayo wokulunga, kawufinyelelanga umlayo wokulunga.
௩௧நீதிப்பிரமாணத்தைத் தேடின இஸ்ரவேலரோ நீதிப்பிரமாணத்தை அடையவில்லை.
32 Ngani? Ngoba kabadingisisanga ngokholo, kodwa ngokungathi ngemisebenzi yomlayo; ngoba bakhubeka elitsheni lokukhubekisa,
௩௨ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தினாலே அதைத் தேடாமல், நியாயப்பிரமாணத்தின் செயல்களினாலே தேடினதினால் அதை அடையவில்லை; இடறுதற்கான கல்லில் இடறினார்கள்.
33 njengokulotshiweyo ukuthi: Khangela ngibeka eSiyoni ilitshe lokukhubekisa ledwala lokuwisa; laye wonke okholwa kuye kayikuyangeka.
௩௩“இதோ, இடறுதற்கான கல்லையும், தவறுகிறதற்கான கன்மலையையும், சீயோனில் வைக்கிறேன்; அவரிடம் விசுவாசமாக இருப்பவன் எவனோ அவன் வெட்கப்படுவதில்லை” என்று எழுதியிருக்கிறபடி நடந்தது.