< Amahubo 6 >
1 Nkosi, ungangikhuzi entukuthelweni yakho, ungangijezisi ekuvutheni kolaka lwakho.
௧செமினீத்தால் நரம்புக் கருவிகளை இசைப்பவர்களின் இராகத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். யெகோவாவே, உம்முடைய கோபத்திலே என்னைக் கடிந்துகொள்ளாமல் இரும், உம்முடைய கடுங்கோபத்திலே என்னைத் தண்டியாமல் இரும்.
2 Woba lomusa kimi, Nkosi, ngoba ngibuthakathaka. Nkosi, ngisilisa mina, ngoba amathambo ami ayakhathazeka.
௨என்மேல் இரக்கமாக இரும் யெகோவாவே, நான் பெலனில்லாமல் போனேன்; என்னைக் குணமாக்கும் யெகோவாவே, என்னுடைய எலும்புகள் நடுங்குகின்றன.
3 Lomphefumulo wami ukhathazekile kakhulu: Kodwa wena, Nkosi, koze kube nini?
௩என்னுடைய ஆத்துமா மிகவும் வியாகுலப்படுகிறது; யெகோவாவே, எதுவரைக்கும் இரங்காமலிருப்பீர்.
4 Phenduka, Nkosi, khulula umphefumulo wami; ungisindise ngenxa yomusa wakho.
௪திரும்பும் யெகோவாவே, என்னுடைய ஆத்துமாவை விடுவியும்; உம்முடைய கிருபையினால் என்னை இரட்சியும்.
5 Ngoba ekufeni kakukho ukukukhumbula; engcwabeni ngubani ozakubonga? (Sheol )
௫மரணத்தில் உம்மை யாரும் நினைவுகூர்வதில்லை, பாதாளத்தில் உம்மைத் துதிப்பவன் யார்? (Sheol )
6 Ngikhathele yikububula kwami; ubusuku bonke ngintshezisa icansi lami, ngezinyembezi zami ngimanzise umbheda wami.
௬என்னுடைய பெருமூச்சினால் இளைத்துப்போனேன்; இரவுமுழுவதும் என்னுடைய கண்ணீரால் என்னுடைய படுக்கையை மிகவும் ஈரமாக்கி, என்னுடைய கட்டிலை நனைக்கிறேன்.
7 Ilihlo lami lidliwe ngenxa yosizi, liyaguga ngenxa yezitha zami zonke.
௭துயரத்தினால் என்னுடைய கண் குழி விழுந்துபோனது, என்னுடைய எதிரிகள் அனைவர் நிமித்தமும் மங்கிப்போனது.
8 Sukani kimi, lonke benzi bobubi, ngoba iNkosi izwile ilizwi lokulila kwami.
௮அக்கிரமக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; யெகோவா என்னுடைய அழுகையின் சத்தத்தைக் கேட்டார்.
9 INkosi izwile ukuncenga kwami; iNkosi izakwemukela umkhuleko wami.
௯யெகோவா என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டார்; யெகோவா என்னுடைய ஜெபத்தை ஏற்றுக்கொள்ளுவார்.
10 Zonke izitha zami zizayangeka zitshaywe luvalo kakhulu; zizaphenduka, zihle ziyangeke.
௧0என்னுடைய எதிரிகள் எல்லோரும் வெட்கி மிகவும் கலங்கிப்போவார்கள்; அவர்கள் பின்னாகத் திரும்பி உடனே வெட்கப்படுவார்கள்.