< 1 UPhetro 5 >

1 Abadala abaphakathi kwenu ngiyabakhuthaza engingomdala kanye labo lomfakazi wenhlupheko zikaKristu, lomhlanganyeli wenkazimulo ezakwembulwa:
உங்களில் உள்ள மூப்பர்களுக்கு உடன்மூப்பனும், கிறிஸ்துவின் பாடுகளுக்குச் சாட்சியும், இனி வெளிப்படும் மகிமைக்குப் பங்குள்ளவனாக இருக்கிற நான் புத்திசொல்லுகிறது என்னவென்றால்:
2 Yelusani umhlambi kaNkulunkulu ophakathi kwenu, liwubonise kungabi ngokubanjwa ngamandla, kodwa ngesihle; njalo kungabi ngenxa yenzuzo elihlazo, kodwa ngokuvuma,
உங்களிடம் உள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, கட்டாயமாக இல்லை, மனப்பூர்வமாகவும், அவலட்சணமான ஆதாயத்திற்காகவும் இல்லை, உற்சாக மனதோடும்,
3 futhi lingabi njengababusi kulabo elabelwa bona, kodwa libe yizibonelo zomhlambi.
சுதந்திரத்தை பெருமையோடு ஆளுகிறவர்களாக இல்லை, மந்தைக்கு முன்மாதிரிகளாகவும், கண்காணிப்புச் செய்யுங்கள்.
4 Kuzakuthi lapho uMelusi omkhulu esebonakele lizakwemukela umqhele wobukhosi ongabuniyo.
அப்படி செய்தால் பிரதான மேய்ப்பர் வெளிப்படும்போது மகிமை குறையாத கிரீடத்தைப் பெற்றுக்கொள்வீர்கள்.
5 Ngokunjalo, batsha, zehliseleni ngaphansi kwabadala; njalo lonke zehliseni omunye komunye, zembathiseni ukuthobeka; ngoba uNkulunkulu umelana labazigqajayo, kodwa abathobekileyo uyabapha umusa.
அப்படியே, இளைஞர்களே, மூப்பர்களுக்குக் கீழ்ப்படியுங்கள். நீங்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; “பெருமை உள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மை உள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”
6 Ngakho zehliseleni ngaphansi kwesandla sikaNkulunkulu esilamandla, ukuze aliphakamise ngesikhathi esifaneleyo,
ஆகவே, குறித்தக் காலத்திலே தேவன் உங்களை உயர்த்துவதற்காக, அவருடைய பலத்த கரங்களுக்குள் அடங்கி இருங்கள்.
7 liphosela phezu kwakhe inkathazo zenu zonke, ngoba yena uyalikhathalela.
அவர் உங்களை விசாரிக்கிறவராக இருப்பதினால், உங்களுடைய கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.
8 Qondani, lilinde, ngoba isitha senu, udiyabhola, siyabhoda njengesilwane esibhongayo sidinga esingamginya;
தெளிந்த புத்தி உள்ளவர்களாக இருங்கள், விழித்திருங்கள்; ஏனென்றால், உங்களுடைய எதிராளியாகிய பிசாசு கெர்ச்சிக்கிற சிங்கம்போல யாரை விழுங்கலாமோ என்று தேடிச் சுற்றித்திரிகிறான்.
9 limelane laye liqinile ekholweni, lisazi ukuthi zona lezonhlupho zapheleliswa kubazalwane benu abasemhlabeni.
விசுவாசத்தில் உறுதியாக இருந்து, அவனுக்கு எதிர்த்து நில்லுங்கள்; உலகத்தில் உள்ள உங்களுடைய சகோதரர்களும் அப்படிப்பட்டப் பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்று தெரிந்திருக்கிறீர்களே.
10 Kodwa uNkulunkulu womusa wonke, owasibizela ebukhosini bakhe obuphakade kuKristu Jesu, sesihlupheke okwesikhatshana, sengathi yena angaliphelelisa, aliqinise, alinike amandla, alisekele. (aiōnios g166)
௧0கிறிஸ்து இயேசுவிற்குள் நம்மை அவருடைய நித்திய மகிமைக்கு அழைத்தவராக இருக்கிற எல்லாக் கிருபையும் பொருந்திய தேவன்தாமே கொஞ்சக்காலம் பாடுகள் அனுபவிக்கிற உங்களைச் சீர்ப்படுத்தி, உறுதிப்படுத்தி, பலப்படுத்தி, நிலைநிறுத்துவாராக; (aiōnios g166)
11 Kakube kuye inkazimulo lamandla kuze kube nini lanini. Ameni. (aiōn g165)
௧௧அவருக்கு மகிமையும் வல்லமையும் எல்லாக் காலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென். (aiōn g165)
12 NgoSilivanu ongumzalwane othembekileyo kini, ngokubona kwami, ngibhale ngokufitshane, ngikhuthaza njalo ngifakaza ukuthi lo ngumusa oqotho kaNkulunkulu, elimi kuwo.
௧௨உங்களுக்குப் புத்திசொல்லுவதற்கும், நீங்கள் நிலைகொண்டு நிற்கிற கிருபை, தேவனுடைய உண்மையான கிருபைதான் என்று சாட்சியிடுவதற்கும், நான் சுருக்கமாக உங்களுக்கு எழுதி, உண்மையுள்ள சகோதரனாக எனக்குத் தோன்றுகிற சில்வானுவின் கையிலே கொடுத்து அனுப்பியிருக்கிறேன்.
13 Ibandla eliseBhabhiloni elikhethiweyo kanye lani liyalibingelela, loMarko indodana yami.
௧௩உங்களோடு தெரிந்துகொள்ளப்பட்டிருக்கிற பாபிலோனிலுள்ள சபையும், என் மகனாகிய மாற்கும் உங்களுக்கு வாழ்த்துதல் சொல்லுகிறார்கள்.
14 Bingelelanani ngokwanga kothando. Ukuthula kakube kini lonke elikuKristu Jesu. Ameni.
௧௪ஒருவரையொருவர் அன்பின் முத்தத்தோடு வாழ்த்துதல் செய்யுங்கள். கிறிஸ்து இயேவிற்குள்ளான உங்கள் அனைவருக்கும் சமாதானம் உண்டாவதாக. ஆமென்.

< 1 UPhetro 5 >