< Amahubo 124 >

1 Ingoma yemiqanso. ElikaDavida. Aluba uThixo ubengemanga lathi yekela u-Israyeli atsho njalo,
சீயோன் மலை ஏறும்போது பாடும் தாவீதின் பாடல். யெகோவா நமது பக்கத்தில் இல்லாவிட்டால், இதை இஸ்ரயேலர் சொல்லட்டும்:
2 aluba uThixo ubengemanga lathi, lapho sasihlaselwa ngabantu,
மனிதர் நம்மை தாக்கும்போது யெகோவா தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,
3 lapho ulaka lwabo lwalutshisa ngathi ngabe basiginya siphila;
அவர்கள் கோபம் நமக்கு எதிராகப் பற்றியெரிந்தபோது, அவர்கள் நம்மை உயிருடன் விழுங்கியிருப்பார்களே;
4 ngabe izikhukhula zasigalulisa, umsinga wawuzasikhukhula,
வெள்ளம் நம்மை மூழ்கடித்திருக்குமே, நீரோட்டம் நம்மீது புரண்டு ஓடியிருக்குமே,
5 amanzi ayabulayo ayezasikhucula.
பொங்கி வந்த வெள்ளம் நம்மீது பாய்ந்தோடியிருக்குமே.
6 Udumo kalube kuThixo ongasiyekelanga sadlithizwa ngamazinyo abo.
அவர்கள் நம்மை பற்களால் கிழித்துப்போட இடமளிக்காத யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும்.
7 Siphunyukile njengenyoni emjibileni womthiyi; umjibila uqamukile sahle saphunyuka.
வேடனுடைய கண்ணியிலிருந்து தப்பின பறவையைப்போல் நாம் தப்பிப் பிழைத்தோம்; கண்ணி அறுந்தது, நாம் தப்பினோம்.
8 Usizo lwethu lusegameni likaThixo uMenzi wezulu lomhlaba.
வானத்தையும் பூமியையும் படைத்தவரான யெகோவாவினுடைய பெயரிலே நமக்கு உதவி உண்டு.

< Amahubo 124 >