< Amahubo 108 >
1 Ingoma. Ihubo likaDavida. Inhliziyo yami ibambelele, kayiguquki, Oh Nkulunkulu; ngizahlabela ngenze iculo elimnandi ngomoya wami wonke.
தாவீதின் சங்கீதமாகிய பாடல். இறைவனே, என் இருதயம் உறுதியாயிருக்கிறது; நான் என் முழு ஆத்துமாவோடும் இசையமைத்துப் பாடுவேன்.
2 Vuka, mhubhe lechacho! Ngizayivusa intathakusa.
யாழே, வீணையே, விழித்தெழுங்கள், நான் அதிகாலையை விழித்தெழச் செய்வேன்.
3 Ngizakudumisa, yebo Thixo, phakathi kwezizwe; ngizahlabela ngawe phakathi kwabantu.
யெகோவாவே, நாடுகள் மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; மக்கள் மத்தியில் நான் உம்மைப் பாடுவேன்.
4 Ngoba lukhulu uthando lwakho, luphakame kulamazulu; ukwethembeka kwakho kufinyelela emkhathini.
ஏனெனில் உமது உடன்படிக்கையின் அன்பு பெரியது, அது வானங்களைப் பார்க்கிலும் உயர்ந்தது; உமது சத்தியம் ஆகாயங்களை எட்டுகிறது.
5 Kawuphakanyiswe, yebo Nkulunkulu, ngaphezu kwamazulu, akuthi inkazimulo yakho ibe khona emhlabeni wonke.
இறைவனே, வானங்களுக்கு மேலாக புகழ்ந்து உயர்த்தப்படுவீராக; உமது மகிமை பூமியெங்கும் இருக்கட்டும்.
6 Sisindise usisize ngesandla sakho sokunene, ukuze kuthi laba obathandayo bakhululwe.
நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும்.
7 UNkulunkulu usekhulumile esendlini yakhe engcwele: “Ngokunqoba ngizayaba iShekhemu ngihlole leSigodi saseSukhothi.
இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: “நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன்.
8 Ngeyami iGiliyadi, loManase ngowami; u-Efrayimi yisivikelo sekhanda lami, uJuda uyintonga yami yobukhosi.
கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலைக்கவசம், யூதா என் செங்கோல்.
9 IMowabi ngumganu wami wokugezela, phezu kuka-Edomi ngiphosela amanyathelo ami; phezu kweFilistiya ngihalalisa umkhosi wokunqoba.”
மோவாப் என் கழுவும் பாத்திரம், நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.”
10 Ngubani ozangisa emzini olenqaba na? Ngubani ozangiholela e-Edomi na?
அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்?
11 Kakusuwe na, Oh Nkulunkulu, wena osusikhalele, ongasaphumi lathi ezimpini zethu?
இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?
12 Ake usisize ezitheni zethu, ngoba usizo lomuntu luyize.
பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.
13 Nxa siloNkulunkulu sizanqoba, njalo uzazinyathelela phansi izitha zethu.
இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.