< တရားဟောရာ 22 >
1 ၁ သင့် ညီအစ်ကို ၏ သိုး နွား သည် လမ်းလွဲ သည်ကို ကြည့် ၍မ နေရ။ ညီအစ်ကို ထံသို့ ဆက်ဆက်ပြန် ပို့ရမည်။
௧“உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல் இருக்காமல், அதை உன் சகோதரனிடத்திற்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.
2 ၂ ညီအစ်ကို ဝေး သော် ၎င်း ၊ သူ့ ကို မ သိ သော် ၎င်း၊ ထိုသိုးနွားကို ကိုယ် အိမ် သို့ ဆောင် ခဲ့ရမည်။ ညီအစ်ကို သည်မရှာ ၊ သူ ၌ မ အပ် မှီတိုင်အောင်ကိုယ် အိမ်၌ ထား ရမည်။
௨உன் சகோதரன் உனக்குச் சமீபமாயிராமலும், உனக்கு அறிமுகமாயிராமலும் இருந்தால், நீ அதை உன் வீட்டிற்குக் கொண்டுபோய், அதை உன் சகோதரன் தேடிவரும்வரை உன்னிடத்திலே வைத்து, அவனுக்குத் திரும்பக் கொடுக்கக்கடவாய்.
3 ၃ မြည်း ဖြစ်စေ ၊ အဝတ် ဖြစ်စေ ၊ ညီအစ်ကို ၏ဥစ္စာ တစုံတခု ပျောက် ၍ သင်တွေ့ မိလျှင် ၊ ကြည့် ၍မနေဘဲ ထိုအတူ ပြု ရမည်။
௩அப்படியே அவனுடைய கழுதையைக்குறித்தும் செய்யக்கடவாய்; அவன் உடையைக்குறித்தும் அப்படியே செய்யக்கடவாய்; உன் சகோதரனிடத்திலிருந்து காணாமற்போனவைகளில் எதையாகிலும் கண்டுபிடித்தாயானால் அப்படியே செய்யக்கடவாய்; அவைகளை நீ காணாதவன் போல் விட்டுப்போகக்கூடாது.
4 ၄ ညီအစ်ကို မြည်း နွား သည် လမ်း ၌ လဲ လျက်ရှိသည် ကို ကြည့် ၍မ နေရ။ ညီအစ်ကို နှင့် ဝိုင်း၍ ဆက်ဆက်မစ ရမည်။
௪“உன் சகோதரனுடைய கழுதையாவது அவனுடைய மாடாவது வழியிலே விழுந்துகிடக்கிறதை நீ கண்டால், அதைக் காணாதவன்போல விட்டுப்போகாமல், அவனுடன்கூட அதைத் தூக்கியெடுத்துவிடுவாயாக.
5 ၅ မိန်းမ သည် ယောက်ျား အဝတ် ကို မ ဝတ် ရ။ ယောက်ျား သည်လည်း မိန်းမ အဝတ် ကို မ ဝတ် ရ။ ထိုသို့ ဝတ် သောသူရှိသမျှ တို့ကို သင် ၏ဘုရားသခင် ထာဝရဘုရား သည် စက်ဆုပ် ရွံ့ရှာတော်မူ၏။
௫“ஆண்களின் உடைகளை பெண்கள் அணியக்கூடாது, பெண்களின் உடைகளை ஆண்கள் அணியக்கூடாது; அப்படிச் செய்கிறவர்கள் எல்லோரும் உன் தேவனாகிய யெகோவாவுக்கு அருவருப்பானவர்கள்.
6 ၆ သစ်ပင် ပေါ် မြေ ပေါ် မှာ ငှက် သိုက် ၌ ငှက်မ သည် အဥ များ၊ သား ငယ်များကို ဝပ် လျက် နေသည်ကို တွေ့ လျှင် ၊ သား ငယ်တို့နှင့်အတူ အမိ ကိုမ ယူ ရ။
௬“வழியருகே ஒரு மரத்திலோ தரையிலோ குஞ்சுகளாவது முட்டைகளாவது உள்ள ஒரு குருவிக்கூட்டை நீ பார்க்கும்போது, தாயானது குஞ்சுகளின் மேலாவது முட்டைகளின் மேலாவது அடைகாத்துக்கொண்டிருந்தால், நீ குஞ்சுகளுடன் தாயையும் பிடிக்கக்கூடாது.
7 ၇ သင် သည် ကောင်းစား ၍ အသက်တာ ရှည်မည် အကြောင်း ၊ သား ငယ်တို့ကို သိမ်းယူ လျှင် လည်း အမိ ကို လွှတ် လိုက်ရမည်။
௭தாயைப் போகவிட்டு, குஞ்சுகளை மாத்திரம் எடுத்துக்கொள்ளலாம்; அப்பொழுது நீ நன்றாயிருப்பாய்; உன் நாட்களும் நீடித்திருக்கும்.
8 ၈ လူသည် အိမ် မိုးပေါ် ကကျ ၍ လူအသက်ကိုသတ် သော အပြစ်မ ရောက်မည်အကြောင်း ၊ အိမ် အသစ် ကို ဆောက် သောအခါ ၊ အမိုး နားပတ်လည်၌ အဆီး အတားကို လုပ် ရမည်။
௮“நீ புது வீட்டைக் கட்டினால், ஒருவன் அதன் மாடியிலிருந்து விழுகிறதினாலே, நீ இரத்தப்பழியை உன் வீட்டின்மேல் சுமத்திக்கொள்ளாமலிருக்க, அதற்குக் கைப்பிடிச் சுவரைக் கட்டவேண்டும்.
9 ၉ စပျစ် ဥယျာဉ်၌ ခြားနား သော မျိုးစေ့ တို့ကို ရောနှော၍ မ ကြဲ ရ။ ထိုသို့ ကြဲ လျှင် ၊ မျိုးစေ့အသီး ၊ စပျစ် ပင် အသီး နှစ်ပါးစလုံး ပျက် လိမ့်မည်။
௯“உன் திராட்சைத்தோட்டத்திலே பலவிதமான விதையை விதைக்காதே; இப்படிச் செய்தால் நீ விதைத்த விதைகளின் பயிரையும், திராட்சைத்தோட்டத்தின் பலனையும் தீட்டுப்படுத்துவாய்.
10 ၁၀ နွား နှင့် မြည်း ကို ဘက် ၍ လယ် မ ထွန်ရ။
௧0மாட்டையும், கழுதையையும் இணைத்து உழாதிருப்பாயாக.
11 ၁၁ ဝါ နှင့် သိုးမွေး ကို ရောနှော ၍ ရက်သောအဝတ် ကို မ ဝတ် ရ။
௧௧ஆட்டுரோமமும் பஞ்சுநூலும் கலந்த ஆடையை அணியாதே.
12 ၁၂ သင်ခြုံ သော အဝတ် စွန် လေး ဘက်၌ ပန်းပွား တို့ ကို ဆွဲ ရမည်။
௧௨“நீ அணிந்துகொள்கிற உன் மேல்சட்டையின் நான்கு ஓரங்களிலும் தொங்கல்களை உண்டாக்குவாயாக.
13 ၁၃ လူ သည် မယား နှင့် ထိမ်းမြား ဆက်ဆံပြီးမှ ၊ တဖန် ထိုမိန်းမ ကို မုန်း ၍၊
௧௩“ஒரு பெண்ணைத் திருமணம்செய்த ஒருவன் அவளிடத்தில் உறவுகொண்ட பின்பு அவளை வெறுத்து:
14 ၁၄ ငါသည် ဤ မိန်းမ နှင့် ထိမ်းမြား ဆက်ဆံသောအခါ ၊ ကညာ မ စစ်ကြောင်း ကို သိရ ပြီဟု ထိုမိန်းမ ၌ ကဲ့ရဲ့ စရာအကြောင်းကို ပြု ၍ သူ့ အသရေ ကို ဖျက် လျှင်၊
௧௪நான் இந்தப் பெண்ணைத் திருமணம்செய்து, அவளிடத்தில் உறவுகொண்டபோது கன்னித்தன்மையைக் காணவில்லை என்று அவள் மேல் குற்றம் சுமத்தி, அவளுக்கு அவதூறு உண்டாக்கினால்;
15 ၁၅ ထိုမိန်းမ ၏ မိဘ တို့သည် ကညာ ၏ လက္ခဏာ သက်သေကို ဆောင် လျက် ၊ မြို့ ၌ အသက်ကြီး သူတို့ရှိ ရာ မြို့တံခါးဝ သို့ သွား ၍၊
௧௫அந்தப் பெண்ணின் தகப்பனும் தாயும் அவளுடைய கன்னித்தன்மையின் அடையாளத்தைப் பட்டணத்து வாசலிலுள்ள மூப்பர்களிடத்தில் கொண்டுவரக்கடவர்கள்.
16 ၁၆ ထိုမိန်းမ ၏အဘ က၊ အကျွန်ုပ် သမီး ကို ဤ လူ ၌ အကျွန်ုပ်ပေးစား ပါပြီ။ သူသည် အကျွန်ုပ် သမီးကို မုန်း ၍၊
௧௬அங்கே அந்தப் பெண்ணின் தகப்பன்: என் மகளை இந்த மனிதனுக்கு மனைவியாகக் கொடுத்தேன், இவன் அவளை வெறுத்து,
17 ၁၇ သင် ၏သမီး သည် ကညာ မ စစ်ကြောင်းကို ငါတွေ့ ပြီဟု ဆို လျက် ကဲ့ရဲ့ စရာအကြောင်းကို ပြု ပါ၏။ သို့ရာတွင် ဤ သည်ကား၊ အကျွန်ုပ် သမီး ၏ ကညာ လက္ခဏာ သက်သေဖြစ်ပါ၏ဟု အသက်ကြီး သူတို့အား လျှောက် ဆိုလျက် ထိုအဝတ် ကို သူတို့ရှေ့ မှာလှန် ၍ ပြရမည်။
௧௭நான் உன் மகளிடத்தில் கன்னித்தன்மையைக் காணவில்லையென்று அவள்மேல் குற்றம் சுமத்துகிறான்; என் மகளுடைய கன்னித்தன்மையின் அடையாளம் இங்கே இருக்கிறது என்று மூப்பர்களிடத்தில் சொல்வானாக; பின்பு பட்டணத்து மூப்பர்களுக்கு முன்பாக அந்த ஆடையை விரிக்கக்கடவர்கள்.
18 ၁၈ ထိုအခါ မြို့ ၌ အသက်ကြီး သူတို့သည် ထို လူ ကို ယူ ၍ ရိုက် ပြီးမှ၊
௧௮அப்பொழுது அந்தப் பட்டணத்து மூப்பர்கள் அந்த மனிதனைப் பிடித்து, அவனைத் தண்டித்து,
19 ၁၉ ငွေ တစ် ပိဿာကို လျော် စေ၍ ၊ မိန်းမ ၏ အဘ အား ပေး ရမည်။ အကြောင်း မူကား၊ ဣသရေလ အမျိုး ကညာ ၏ အသရေ ကို ထိုသူဖျက်လေပြီ။ ထိုမိန်းမသည် သူ ၏မယား ဖြစ် ရမည်။ တသက်လုံး ထိုမိန်းမ နှင့် မ ကွာ ရ။
௧௯அவன் இஸ்ரவேலில் ஒரு கன்னியை அவதூறுசெய்ததால், அவன் கையிலிருந்து நூறு வெள்ளிக்காசை அபராதமாக வாங்கி, பெண்ணின் தகப்பனுக்குக் கொடுக்கவேண்டும்; அவளோ அவனுக்கு மனைவியாயிருக்க வேண்டும்; அவன் தான் உயிருள்ளவரை அவளைத் தள்ளிவிடக்கூடாது.
20 ၂၀ သို့မဟုတ်လင်စကား မှန် ၍ ၊ ထို မိန်းမ ၌ ကညာ လက္ခဏာသက်သေမ ရှိ လျှင်၊
௨0அந்தப் பெண்ணிடத்தில் கன்னித்தன்மை காணப்படவில்லையென்னும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால்,
21 ၂၁ မြို့ သားယောက်ျား တို့သည် ထိုမိန်းမ ကို အဘ အိမ် တံခါး သို့ ဆောင် ခဲ့ပြီးလျှင် ကျောက်ခဲ နှင့် ပစ် ၍ အသေ သတ်ရကြမည်။ အကြောင်း မူကား၊ သူ သည် အဘ အိမ် ၌ မတရား သောမေထုန် သို့လိုက်၍ ဣသရေလ အမျိုး၌ မိုက်မဲ သောအမှုကို ပြု လေပြီ။ ထိုသို့ သင် တို့တွင် ဒုစရိုက် အပြစ်ကို ပယ်ရှား ရကြမည်။
௨௧அந்தப் பெண்ணை அவள் தகப்பனுடைய வீட்டுவாசலுக்கு முன்பாகக் கொண்டுவந்து, அவள் இஸ்ரவேலில் மதிகெட்ட காரியத்தைச் செய்து, தன் தகப்பன் வீட்டில் வேசித்தனம்செய்ததால், அவளுடைய பட்டணத்து மனிதர்கள் அவளைக் கல்லெறிந்து கொல்லக்கடவர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
22 ၂၂ လင် ရှိသောမိန်းမ နှင့် အခြားသောယောက်ျား သင့် နေသည်ကို တွေ့ မိလျှင် ၊ ထိုယောက်ျား နှင့် မိန်းမ နှစ် ယောက်တို့သည် အသေ သတ်ခြင်းကိုခံ ရမည်။ ထိုသို့ ဒုစရိုက် အပြစ်ကို ဣသရေလ အမျိုးမှ ပယ်ရှား ရမည်။
௨௨“ஆணுக்கு திருமணம்செய்யப்பட்ட பெண்ணுடன் ஒருவன் உறவுகொள்வது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தப் பெண்ணுடன் உறவுகொண்ட மனிதனும் அந்த பெண்ணும் இருவரும் சாகவேண்டும்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்குவாயாக.
23 ၂၃ အပျို ကညာကို ယောက်ျား နှင့် ထိမ်းမြား ဆောင်နှင်း ပြီးမှ၊ အခြားသောယောက်ျား သည် မြို့ ထဲမှာ တွေ့ ၍ သင့် နေလျှင်၊
௨௩“கன்னிகையான ஒரு பெண் ஒருவனுக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, மற்றொருவன் அவளை ஊருக்குள்ளே கண்டு, அவளுடன் உறவுகொண்டால்,
24 ၂၄ ထိုသူနှစ် ယောက်တို့ကို မြို့ တံခါးဝ သို့ ထုတ် ဆောင် ပြီးလျှင် ကျောက်ခဲ နှင့် ပစ် ၍ အသေ သတ်ရကြမည်။ မိန်းမ သည် မြို့ ထဲမှာ ရှိလျက်ပင် မ အော် မဟစ်သောကြောင့် ၎င်း၊ ယောက်ျား လည်း သူ့ မယား ကို ရှုတ်ချ သောကြောင့် ၎င်း၊ ထိုသူနှစ်ယောက်တို့သည် အသေသတ်ခြင်း ကိုခံ ရမည်။ ထိုသို့ သင် တို့တွင် ဒုစရိုက် အပြစ်ကို ပယ်ရှား ရကြမည်။
௨௪அப்பொழுது அந்தப் பெண் ஊருக்குள்ளிருந்தும் கூச்சலிடாததினாலும், அந்த மனிதன் பிறனுடைய மனைவியைக் கற்பழித்தபடியினாலும், இருவரையும் அந்தப் பட்டணத்து வாசலுக்குமுன் கொண்டுபோய், அவர்கள்மேல் கல்லெறிந்து கொல்லக்கடவீர்கள்; இப்படியே தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.
25 ၂၅ အပျို ကို ယောက်ျား နှင့် ထိမ်းမြား ဆောင်နှင်းပြီးမှ အခြားသော ယောက်ျား သည် တော ၌ တွေ့ ၍ အနိုင် အထက် ပြုလျှင် ၊ ထို ယောက်ျား တယောက်တည်းကိုသာ အသေ သတ်ရမည်။
௨௫“ஒருவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை வெளியிலே ஒருவன் கண்டு, அவளைப் பலவந்தமாகப் பிடித்து, அவளுடன் உறவுகொண்டானேயாகில், அவளுடன் உறவுகொண்ட மனிதன் மாத்திரம் சாகக்கடவன்.
26 ၂၆ သေ ထိုက်သော အပြစ် မ ရှိသော ထိုမိန်းမ ကို သင်သည် အဘယ်သို့မျှ မ ပြု ရ။
௨௬பெண்ணுக்கு ஒன்றும் செய்யக்கூடாது; பெண்ணின்மேல் மரணத்திற்கு ஏதுவான குற்றம் இல்லை; இக்காரியம் ஒருவன் மற்றொருவன்மேல் எழும்பி அவனைக் கொன்றதுபோல இருக்கிறது.
27 ၂၇ အကြောင်း မူကား၊ ယောက်ျား သည် ထိုမိန်းမ ကို တော ၌ တွေ့ ၍ မိန်းမ အော်ဟစ် သော်လည်း ကူညီ သောသူ မ ရှိသောကြောင့်၊ ထို အမှု သည်လူ ချင်းတယောက်ကို တယောက်ရန် ပြု၍ သတ် သောအမှုနှင့် တူ၏။
௨௭வெளியிலே அவன் அவளைக் கண்டான்; நிச்சயிக்கப்பட்ட அந்தப் பெண் அச்சமயத்தில் கூக்குரலிட்டும் அவளைக் காப்பாற்றுபவர் இல்லாமற்போனது.
28 ၂၈ ယောက်ျား နှင့် မ ထိမ်းမြား မဆောင်နှင်းသေး သော အပျို ကညာကို အခြားသောယောက်ျားသည် တွေ့ ၍ ကိုင် ဆွဲသင့် နေသည်ကို တွေ့ မိလျှင်၊
௨௮“நிச்சயிக்கப்படாத கன்னிகையாகிய ஒரு பெண்ணை ஒருவன் கண்டு, கையைப் பிடித்து அவளுடன் உறவுகொள்ளும்போது, அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால்,
29 ၂၉ ထိုယောက်ျား သည် မိန်းမ ၏ အဘ အား ငွေ ငါးဆယ် ကို လျော် ရမည်။ ထိုမိန်းမသည်လည်း သူ ၏ မယား ဖြစ် ရမည်။ သူ့ ကို ရှုတ်ချ သောကြောင့် တသက်လုံး မ ကွာ ရ။
௨௯அவளுடன் உறவுகொண்ட மனிதன் பெண்ணின் தகப்பனுக்கு ஐம்பது வெள்ளிக்காசுகளைக் கொடுக்கக்கடவன்; அவன் அவளைக் கற்பழித்ததால், அவள் அவனுக்கு மனைவியாக இருக்கவேண்டும்; அவன் உயிரோடிருக்கும்வரை அவளை விவாகரத்து செய்யக்கூடாது.
30 ၃၀ လူ သည် မိမိ အဘ နှင့် သာဆိုင်သော အဘ ၏ မယား ကို မ သိမ်း ရ။
௩0“ஒருவனும் தன் தகப்பனுடைய மனைவியுடன் உறவுகொள்ளக்கூடாது; தன் தகப்பன் மானத்தை அவன் வெளிப்படுத்தக்கூடாது.