< स्तोत्रसंहिता 114 >
1 १ जेव्हा इस्राएल मिसरातून, याकोबाचे घराणे त्या परकी लोकांतून निघाले,
௧இஸ்ரவேல் எகிப்திலும், யாக்கோபின் வீட்டார் அந்நிய மக்களிடமிருந்து புறப்பட்டபோது,
2 २ तेव्हा यहूदा त्याचे पवित्रस्थान झाला, इस्राएल त्याचे राज्य झाले.
௨யூதா அவருக்குப் பரிசுத்த இடமும், இஸ்ரவேல் அவருக்கு இராஜ்ஜியமுமானது.
3 ३ समुद्राने पाहिले आणि पळाला; यार्देन मागे हटली.
௩கடல் கண்டு விலகி ஓடினது; யோர்தான் பின்னிட்டுத் திரும்பினது.
4 ४ पर्वतांनी मेंढ्यांसारख्या, टेकड्यांनी कोकरासारख्या उड्या मारल्या.
௪மலைகள் ஆட்டுக்கடாக்களைப்போலவும், குன்றுகள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளினது.
5 ५ हे समुद्रा, तू का पळून गेलास? यार्देने तू का मागे हटलीस?
௫கடலே, நீ விலகியோடுகிறதற்கும்; யோர்தானே, நீ பின்னாக திரும்புகிறதற்கும்;
6 ६ पर्वतांनो, तुम्ही मेंढ्यांसारख्या का उड्या मारता? लहान टेकड्यांनो, तुम्ही कोकरासारख्या का उड्या मारता?
௬மலைகளே, நீங்கள் ஆட்டுக்கடாக்களைப்போலவும்; குன்றுகளே, நீங்கள் ஆட்டுக்குட்டிகளைப்போலவும் துள்ளுகிறதற்கும், உங்களுக்கு என்ன வந்தது?
7 ७ हे पृथ्वी, तू प्रभूसमोर, याकोबाच्या देवासमोर थरथर काप.
௭பூமியே, நீ ஆண்டவருக்கு முன்பாகவும், யாக்கோபுடைய தேவனுக்கு முன்பாகவும் அதிரு.
8 ८ तो खडक पाण्याच्या तळ्यात, कठीण खडक पाण्याच्या झऱ्यात बदलतो.
௮அவர் கன்மலையைத் தண்ணீர் குளமாகவும், கற்பாறையை நீரூற்றுகளாகவும் மாற்றுகிறார்.