< यहोशवा 12 >
1 १ यार्देन नदीच्या पूर्वेकडील सूर्य उगवतो त्या बाजूला, आर्णोन नदीपासून ते हर्मोन डोंगरापर्यंत, आणि पूर्वेकडील संपूर्ण अराबाचा प्रदेश इस्राएल लोकांनी जिंकून काबीज केला, त्याच्या राजांची नावे ही आहेत:
௧யோர்தான் நதிக்கு அந்தப் புறத்தில் சூரியன் உதயமாகிற திசையிலே அர்னோன் ஆறு துவங்கி எர்மோன் மலைவரைக்கும், கிழக்கே சமபூமி எல்லைகளிலெல்லாம் உள்ள ராஜாக்களை இஸ்ரவேலர்கள் முறியடித்து, அவர்களுடைய தேசங்களையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்.
2 २ अमोऱ्यांचा राजा सीहोन; जो हेशबोन शहरात राहत होता, तो खोऱ्याच्या मध्यावर आर्णोन गोर्गच्या काठावर असणाऱ्या अरोएरपासून अम्मोन्यांच्या अर्ध्या गिलादावर खाली याब्बोक सीमेपर्यंत राज्य करत असे.
௨அந்த ராஜாக்களில், எஸ்போனில் குடியிருந்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோன், அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேர் துவங்கி ஆற்றின் நடுமையமும் பாதிக் கீலேயாத் உட்பட அம்மோனியர்களின் எல்லையான யாப்போக்கு ஆறுவரையுள்ள தேசத்தையும்,
3 ३ किन्नेरोथ समुद्रापर्यंत आराबावर, अराब समुद्राच्या पूर्वेकडे, बेथ-यशिमोथापर्यंत आणि दक्षिणेकडे, पिसगा पर्वताच्या उतरणीपर्यंतसुद्धा सीहोन राज्य करत असे.
௩சமவெளி துவங்கிக் கிழக்கே இருக்கிற கின்னரேத் கடல்வரைக்கும் பெத்யெசிமோத் வழியாகக் கிழக்கே இருக்கிற சமவெளியின் கடலாகிய உப்புக்கடல்வரைக்கும் இருக்கிற தேசத்தையும் தெற்கே அஸ்தோத்பிஸ்காவுக்குக் கீழாக இருக்கிற தேசத்தையும் ஆட்சிசெய்தான்.
4 ४ बाशानाचा राजा ओग, उरलेल्या रेफाई लोकांतून राहिलेल्यांपैकी एक होता, तो अष्टारोथ व एद्रई येथे राहत होता.
௪இராட்சதரில் மீதியான பாசானின் ராஜாவாகிய ஓகின் எல்லையையும் சுதந்தரித்துக்கொண்டார்கள்; அவன் அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் வாழ்ந்து,
5 ५ तो हर्मोन पर्वत, सलेख, आणि संपूर्ण बाशानावर, गशूरी सीमेपर्यंत आणि माकाथी, आणि अर्ध्या गिलादावर, हेशबोनचा राजा सीहोन याच्या सीमेपर्यंत राज्य करत असे.
௫எர்மோன் மலையையும் சல்காயிவையும், கெசூரியர்கள், மாகாத்தியர்கள் எல்லைவரைக்கும் எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் எல்லையாக இருந்த பாதிக் கீலேயாத்வரைக்கும் இருக்கும் பாசான் அனைத்தையும் ஆட்சிசெய்தான்.
6 ६ परमेश्वराचा सेवक मोशे, आणि इस्राएली लोकांनी त्यांचा पराभव केला, आणि परमेश्वराचा सेवक मोशे याने ती भूमी रऊबेनी, गादी, आणि मनश्शेचा अर्धा वंश यांना वतन म्हणून दिली.
௬அவர்களைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசேயும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தார்கள்; அந்த தேசத்தைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே ரூபனியர்களுக்கும் காத்தியர்களுக்கும் மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகக் கொடுத்தான்.
7 ७ यार्देनेच्या पश्चिमेस लबानोन खोऱ्यातील बाल-गादापासून सेईरास जाणाऱ्या घाटातील हालाक डोंगरापर्यंत ज्या राजांचे देश होते आणि ज्यांना यहोशवा व इस्राएल लोकांनी मारले ते हे, हा देश यहोशवाने इस्राएल वंशाना त्यांच्या वाट्याप्रमाणे वतन म्हणून दिला,
௭யோர்தானுக்கு இந்தப் புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத் துவங்கி சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைவரைக்கும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த பகுதிகளிலும் வனாந்திரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,
8 ८ डोंगराळ प्रदेशात, तळवटीत, अराबात, उतरणीत, रानात आणि नेगेबात, हित्ती, अमोरी, कनानी, परिज्जी, हिव्वी व यबूसी राहत होते.
௮யோசுவா இஸ்ரவேல் கோத்திரங்களுக்குச் சொந்தமாகப் பங்கிட்டதுமான ஏத்தியர்கள், எமோரியர்கள், கானானியர்கள், பெரிசியர்கள், ஏவியர்கள், எபூசியர்கள் என்பவர்களுடைய தேசத்தில் இருந்தவர்களும், யோசுவாவும் இஸ்ரவேல் மக்களும் முறியடித்தவர்களுமான ராஜாக்கள் யாரென்றால்:
9 ९ या राजांमध्ये, यरीहोचा राजा, बेथेलशेजारी असलेल्या आयचा राजा,
௯எரிகோவின் ராஜா ஒன்று, பெத்தேலுக்கு அருகான ஆயீயின் ராஜா ஒன்று,
10 १० यरूशलेमचा राजा, हेब्रोनाचा राजा,
௧0எருசலேமின் ராஜா ஒன்று, எபிரோனின் ராஜா ஒன்று,
11 ११ यर्मूथाचा राजा, लाखीशाचा राजा
௧௧யர்மூத்தின் ராஜா ஒன்று, லாகீசின் ராஜா ஒன்று,
12 १२ एग्लोनाचा राजा, गेजेराचा राजा,
௧௨எக்லோனின் ராஜா ஒன்று, கேசேரின் ராஜா ஒன்று,
13 १३ दबीरचा राजा, बेथ-गेदेरचा राजा,
௧௩தெபீரின் ராஜா ஒன்று, கெதேரின் ராஜா ஒன்று,
14 १४ हर्माचा राजा, अरादचा राजा,
௧௪ஓர்மாவின் ராஜா ஒன்று, ஆராதின் ராஜா ஒன்று,
15 १५ लिब्नाचा राजा, अदुल्लामाचा राजा.
௧௫லிப்னாவின் ராஜா ஒன்று, அதுல்லாமின் ராஜா ஒன்று,
16 १६ मक्केदाचा राजा बेथेलचा राजा,
௧௬மக்கெதாவின் ராஜா ஒன்று, பெத்தேலின் ராஜா ஒன்று,
17 १७ तप्पूहाचा राजा, हेफेरचा राजा,
௧௭தப்புவாவின் ராஜா ஒன்று, எப்பேரின் ராஜா ஒன்று,
18 १८ अफेकाचा राजा, शारोनचा राजा,
௧௮ஆப்பெக்கின் ராஜா ஒன்று, லசரோனின் ராஜா ஒன்று,
19 १९ मादोनाचा राजा, हासोराचा राजा,
௧௯மாதோனின் ராஜா ஒன்று, ஆத்சோரின் ராஜா ஒன்று,
20 २० शिम्रोन-मरोनचा राजा, अक्षाफाचा राजा,
௨0சிம்ரோன் மேரோனின் ராஜா ஒன்று, அக்சாபின் ராஜா ஒன்று,
21 २१ तानखाचा राजा, मगिद्दोचा राजा,
௨௧தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,
22 २२ केदेशचा राजा, कर्मेलांतील यकनामाचा राजा,
௨௨கேதேசின் ராஜா ஒன்று, கர்மேலைச் சார்ந்த யொக்னியாமின் ராஜா ஒன்று,
23 २३ नाफत-दोर येथील दोराचा राजा, गिलगाल येथील गोयीमचा राजा,
௨௩தோரின் கரையைச் சேர்ந்த தோரின் ராஜா ஒன்று, கில்காலைச்சேர்ந்த கோயிமின் ராஜா ஒன்று,
24 २४ तिरसाचा राजा; या प्रमाणे एकंदर एकतीस राजे होते.
௨௪திர்சாவின் ராஜா ஒன்று; ஆக இவர்களெல்லோரும் முப்பத்தொரு ராஜாக்கள்.