< 2 शमुवेल 15 >

1 यानंतर अबशालोमने स्वत: साठी रथ आणि घोड्यांची तयारी केली, तो रथातून जात असताना पन्नास माणसे त्याच्यापुढे धावत असत.
இதற்குப்பின்பு, அப்சலோம் இரதங்களையும் குதிரைகளையும், தனக்கு முன்பாக ஓட ஐம்பது வீரர்களையும் சம்பாதித்தான்.
2 रोज लवकर ऊठून सकाळीच तो वेशीपाशी जाई. आपल्या अडचणी घेऊन निवाड्यासाठी राजाकडे जायला निघालेल्या लोकांस भेटून त्यांच्याशी बोलत असे. चौकशी करून तो विचारी, तू कोणत्या शहरातून आलास? तो सांगत असे, मी इस्राएलच्या अमुक वंशातला.
மேலும் அப்சலோம் காலைதோறும் எழுந்து, பட்டணத்து வாசலுக்குப் போகிற வழி ஓரத்திலே நின்றுகொண்டு, யாராவது தன்னிடம் இருக்கிற வழக்குக்காக ராஜாவிடம் நியாயம் கேட்பதற்காகப் போகும்போது, அவனை அழைத்து, நீ எந்த ஊரைச் சேர்ந்தவன் என்று கேட்பான்; அவன் உமது அடியான் இஸ்ரவேல் கோத்திரங்களில் ஒன்றின், இந்த ஊரைச் சேர்ந்தவன் என்று சொன்னால்,
3 तेव्हा अबशालोम म्हणे, तुमचे म्हणणे खरे आहे, पण राजा तुमच्या अडचणीत लक्ष घालणार नाही.
அப்பொழுது அப்சலோம் அவனை நோக்கி: இதோ, உன்னுடைய வழக்கு நேர்மையும் நியாயமுமாக இருக்கிறது; ஆனாலும் ராஜாவிடம் உன்னுடைய வழக்கை விசாரிப்பவர்கள் ஒருவரும் இல்லை என்பான்.
4 अबशालोम पुढे म्हणे, मला कोणी येथे न्यायाधीश म्हणून नेमले तर किती बरे होईल. तसे झाले तर फिर्याद घेऊन येणाऱ्या प्रत्येकाला मी मदत करू शकेन. यांच्या प्रकरणांना मी न्याय देऊ शकेन.
பின்னும் அப்சலோம்: சிக்கலான வழக்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னிடம் வந்து, நான் அவர்களுக்கு நியாயம் செய்யும்படி, என்னை தேசத்திலே நியாயாதிபதியாக வைத்தால் நலமாக இருக்கும் என்பான்.
5 अशावेळी कोणी त्याच्याजवळ येऊन त्यास आभिवादन करू लागला, तर अबशालोम त्या मनुष्यास मित्रासारखी वागणूक देई. आपला हात पुढे करून तो त्यास स्पर्श करी त्याचे चुंबन घेई.
யாராவது ஒருவன் அவனை வணங்கவரும்போது, அவன் தன்னுடைய கையை நீட்டி அவனைத் தழுவி முத்தம் செய்வான்.
6 राजा दावीदाकडे न्याय मागण्यासाठी आलेल्या सर्व इस्राएलांना त्याने अशाच प्रकारची वागणुक देऊन सर्व इस्राएलांची मने जिंकली.
இப்படியாக அப்சலோம், ராஜாவிடம் நியாயத்திற்காக வரும் இஸ்ரவேலர்களுக்கெல்லாம் செய்து, இஸ்ரவேல் மனிதர்களுடைய இருதயத்தைக் கவர்ந்துகொண்டான்.
7 पुढे चार वर्षानी अबशालोम राजा दावीदाला म्हणाला, हेब्रोनमध्ये मी परमेश्वरास नवस बोललो होतो. तो फेडण्यासाठी मला जाऊ द्या.
நாற்பது வருடங்கள் சென்றபின்பு, அப்சலோம் ராஜாவை நோக்கி: நான் யெகோவாவுக்கு செய்த என்னுடைய பொருத்தனையை எப்ரோனில் செலுத்தும்படி நான் போக அனுமதிகொடும்.
8 अराममधील गशूर येथे राहत असताना मी तो बोललो होतो, परमेश्वराने मला पुन्हा यरूशलेमेला नेले, तर मी परमेश्वराच्या सेनेला वाहून घेईन असे मी बोललो होतो.
யெகோவா என்னை எருசலேமிற்குத் திரும்பி வரச்செய்தால், யெகோவாவுக்கு ஆராதனை செய்வேன் என்று உமது அடியானாகிய நான் சீரியா தேசத்தில் கெசூரில் குடியிருக்கும்போது, பொருத்தனை செய்தேன் என்றான்.
9 तेव्हा राजा दावीदाने त्यास निश्चिंत होऊन जाण्यास सांगितले. अबशालोम हेब्रोन येथे आला.
அதற்கு ராஜா, சமாதானத்தோடு போ என்றான்; அப்பொழுது அவன் எழுந்து எப்ரோனுக்கு போனான்.
10 १० पण त्याने इस्राएलच्या सर्व वंशामध्ये हेर पाठवून लोकांस कळवले रणशिंग फुंकल्याचे ऐकल्यावर अबशालोम हेब्रोनचा राजा झाला आहे असा तुम्ही घोष करा.
௧0அப்சலோம் இஸ்ரவேல் கோத்திரங்களுக்கெல்லாம் உளவாளிகளை அனுப்பி, நீங்கள் எக்காளச் சத்தத்தைக் கேட்கும்போது, அப்சலோம் எப்ரோனிலே ராஜாவானான் என்று சொல்லுங்கள் என்று சொல்லச்சொல்லி வைத்திருந்தான்.
11 ११ अबशालोमने स्वत: बरोबर दोनशे माणसे घेतली यरूशलेम सोडून ती त्याच्या बरोबर निघाली. पण त्यांना त्याच्या बेताची कल्पना नव्हती.
௧௧எருசலேமிலிருந்து வரவழைக்கப்பட்ட 200 பேர் அப்சலோமோடு போனார்கள்; அவர்கள் வஞ்சகம் இல்லாமல் ஒன்றும் அறியாமற்போனார்கள்.
12 १२ अहिथोफेल हा तेव्हा दावीदाचा एक सल्लागार होता. हा गिलो या गावाचा होता. यज्ञ करत असताना अबशालोमने अहिथोफेलला गिलोहून बोलावून घेतले. सर्व काही अबशालोमच्या योजने प्रमाणे सुरळीत चालले होते. त्यास अधिकाधिक पाठिंबा मिळत होता.
௧௨அப்சலோம் பலிகளைச் செலுத்தும்போது, தாவீதின் ஆலோசனைக்காரனான அகித்தோப்பேல் என்னும் கிலோனியனையும் அவன் ஊரான கீலோவிலிருந்து வரவழைத்தான்; அப்படியே கட்டுப்பாடு பெலத்து, மக்கள் அப்சலோமிடம் திரளாக வந்து கூடினார்கள்.
13 १३ एका निरोप्याने दाविदास वर्तमान सांगितले की इस्राएलच्या लोकांचा कल अबशालोमकडे झुकत आहे.
௧௩அதை அறிவிக்கிற ஒருவன் தாவீதிடம் வந்து, இஸ்ரவேலில் ஒவ்வொருவருடைய இருதயமும் அப்சலோமைச் சார்ந்துப்போகிறது என்றான்.
14 १४ तेव्हा यरूशलेमेमध्ये आपल्या भोवती असलेल्या सर्व सेवकांना दावीद म्हणाला, आता आपण पळ काढला पाहिजे. आपण येथून निसटलो नाही तर अबशालोमच्या तावडीत सापडू. त्याने पकडायच्या आतच आपण तातडीने निघून जाऊ. नाही तर तो आपल्यापैकी कोणालाही शिल्लक ठेवणार नाही. यरूशलेमेच्या लोकांस तो मारून टाकेल.
௧௪அப்பொழுது தாவீது எருசலேமிலே தன்னிடத்தில் உள்ள தன்னுடைய எல்லா வேலைக்காரர்களையும் நோக்கி: எழுந்து ஓடிப்போவோம், இல்லாவிட்டால் நாம் அப்சலோமுக்குத் தப்ப இடமில்லை; அவன் விரைவாக நம்மிடம் வந்து, நம்மைப் பிடித்து, நம்மேல் தீங்கு வரச்செய்து, நகரத்தைக் கூர்மையான பட்டயத்தால் அழிக்காதபடி விரைவாகப் புறப்படுங்கள் என்றான்.
15 १५ तेव्हा राजाचे सेवक त्यास म्हणाले, तुम्ही म्हणाल ते करायला आम्ही तयार आहोत.
௧௫ராஜாவின் வேலைக்காரர்கள் ராஜாவைப் பார்த்து: இதோ, ராஜாவான எங்கள் ஆண்டவன் கட்டளைகளை எல்லாம் செய்ய உமது அடியார்களான நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம் என்றார்கள்.
16 १६ आपल्या कुटुंबातील सर्वांसह राजा बाहेर पडला. आपल्या दहा उपपत्नी होत्या त्यांना त्याने घराचे रक्षण करायला म्हणून मागे ठेवले.
௧௬அப்படியே ராஜாவும் அவனுடைய குடும்பத்தினர் எல்லோரும் கால்நடையாகப் புறப்பட்டார்கள்; வீட்டைக்காக்க ராஜா மறுமனையாட்டிகளான பத்து பெண்களை வைத்தான்.
17 १७ राजा आणि त्याच्या मागोमाग सर्व लोक निघून गेले अगदी शेवटच्या घरापाशी ते थांबले.
௧௭ராஜாவும் எல்லா மக்களும் கால்நடையாகப் புறப்பட்டு, சற்றுத்தூரம் போய், ஒரு இடத்திலே நின்றார்கள்.
18 १८ त्याचे सर्व सेवक तसेच एकूणएक करेथी, पलेथी आणि सहाशे गित्ती राजामागोमाग चालत गेले.
௧௮அவனுடைய வேலைக்காரர்கள் எல்லாரும், கிரேத்தியர்கள் யாவரும், பிலேத்தியர்கள் யாவரும் அவன் பக்கத்திலே நடந்து போனார்கள்; காத்தூரிலிருந்து கால்நடையாக வந்த அறுநூறுபேர்களான கித்தியர்கள் எல்லோரும் ராஜாவுக்கு முன்பாக நடந்தார்கள்.
19 १९ गथ येथील इत्तयला राजा म्हणाला, तू ही आमच्याबरोबर कशाला येतोस? मागे फिर आणि नवीन राजा अबशालोम याला साथ दे. तू परकाच आहेस ही तुझी माय भूमी नव्हे.
௧௯அப்பொழுது ராஜா, கித்தியனான ஈத்தாயைப் பார்த்து: நீ எங்களுடன் ஏன் வருகிறாய்? நீ திரும்பிப்போய், ராஜாவுடன் இரு; நீ அந்நிய தேசத்தை சேர்ந்தவன்; நீ உன்னுடைய இடத்திற்குத் திரும்பிப் போகலாம்.
20 २० तू कालच येऊन मला मिळालास. आम्ही वाट फुटेल तिकडे जाणार तू कशाला भटकत फिरतोस? तेव्हा तुझ्या बांधवांसह परत फिर, तुला प्रेमाची आणि न्यायाची वागणूक मिळो.
௨0நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடு நடந்துவரும்படி அழைத்துக்கொண்டு போகலாமா நான் போகவேண்டிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன்னுடைய சகோதரர்களையும் அழைத்துகொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடு இருப்பதாக என்றான்.
21 २१ पण इत्तय राजाला म्हणाला परमेश्वराची शपथ, तुम्ही जिवंत असेपर्यंत मी तुमची साथ सोडणार नाही. आता जगणे मरणे तुमच्याबरोबरच.
௨௧ஆனாலும் ஈத்தாய் ராஜாவுக்குப் பதிலாக: ராஜாவான என்னுடைய ஆண்டவன் எங்கேயிருப்பாரோ, அங்கே உமது அடியானும், செத்தாலும் பிழைத்தாலும், இருப்பான் என்று யெகோவாவுடைய ஜீவனையும் ராஜாவான என் ஆண்டவனுடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்.
22 २२ दावीद इत्तयला म्हणाला, मग चल तर, किद्रोन ओहोळा पलीकडे आपण जाऊ. तेव्हा इत्तय आपल्या बरोबरच्या सर्व मुला-मनुष्यांसह किद्रोन ओहोळा पलीकडे गेला.
௨௨அப்பொழுது தாவீது ஈத்தாயை நோக்கி: நடந்துவா என்றான்; அப்படியே கித்தியனான ஈத்தாயும் அவனுடைய எல்லா மனிதர்களும் அவனோடு இருக்கிற எல்லாப் பிள்ளைகளும் நடந்துபோனார்கள்.
23 २३ सर्व लोक मोठ्याने आकांत करत होते. राजाने ही किद्रोन झरा ओलांडला मग सर्वजण वाळवंटाकडे निघाले.
௨௩அனைத்து மக்களும் நடந்துபோகிறபோது, தேசத்தார்கள் எல்லோரும் உரத்த சத்தமிட்டு அழுதார்கள்; ராஜா கீதரோன் ஆற்றைக் கடந்தான்; மக்கள் எல்லோரும் வனாந்திரத்திற்குப் போகிற வழியே நடந்துபோனார்கள்.
24 २४ सादोक आणि त्याच्या बरोबरचे सर्व लेवी देवाचा कोश घेऊन निघाले होते. त्यांनी देवाचा कराराचा कोश खाली ठेवला. यरूशलेमेमधून सर्व लोक बाहेर पडेपर्यंत अब्याथार कोशाजवळ उभा राहून अर्पणे अर्पित होता.
௨௪சாதோக்கும் தேவனுடைய உடன்படிக்கைப் பெட்டியை அவனோடு இருந்து சுமக்கிற எல்லா லேவியர்களும் வந்து, தேவனுடைய பெட்டியை அங்கே வைத்தார்கள்; மக்கள் எல்லோரும் நகரத்திலிருந்து கடந்துபோகும்வரை, அபியத்தார் அங்கேயே இருந்தான்.
25 २५ राजा दावीद सादोकाला म्हणाला, हा देवाचा कोश यरूशलेमेला परत घेऊन जा. परमेश्वराची कृपा असेल तर तो मला पुन्हा येथे आणेल. यरूशलेम आणि हे त्याचे मंदिर मला पुन्हा पाहता येईल.
௨௫ராஜா சாதோக்கை நோக்கி: தேவனுடைய பெட்டியை நகரத்திற்குத் திரும்பக் கொண்டுபோ; யெகோவாவுடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்தால், நான் அதையும் அவர் தங்கும் இடத்தையும் பார்ப்பதற்கு, என்னைத் திரும்ப வரச்செய்வார்.
26 २६ पण तो माझ्यावर प्रसन्न नसेल तर त्याच्या मनात असेल ते माझे होईल.
௨௬அவர்: உன்மேல் எனக்குப் பிரியமில்லை என்று சொன்னால், இதோ, இங்கே இருக்கிறேன்; அவர் தம்முடைய பார்வைக்கு நலமானபடி எனக்குச் செய்வாராக என்றான்.
27 २७ पुढे राजा सादोक याजकाला म्हणाला, तू द्रष्टा आहेस तू सुखरुप नगरात परत जा. तुझा पुत्र अहीमास आणि अब्याथारचा मुलगा योनाथान यांनाही घेऊन जा.
௨௭பின்னும் ராஜா ஆசாரியனான சாதோக்கை நோக்கி: நீ ஞானதிருஷ்டிக்காரன் அல்லவோ? நீ சமாதானத்தோடு நகரத்திற்குத் திரும்பு; உன்னுடைய மகன் அகிமாசும் அபியத்தாரின் மகன் யோனத்தானுமான உங்கள் மகன்கள் இரண்டுபேர்களும் உங்களோடு திரும்பிப் போகட்டும்.
28 २८ हा प्रदेश ओलांडून वाळवंट लागते, त्याठिकाणी मी तुझा संदेश येईपर्यंत थांबतो.
௨௮எனக்கு அறிவிப்பதற்கு உங்களிடமிருந்து செய்தி வரும்வரை, நான் வனாந்திரத்தின் பள்ளத்தாக்கிலே தங்கியிருப்பேன் என்றான்.
29 २९ तेव्हा देवाचा कोश घेऊन सादोक आणि अब्याथार यरूशलेमेला परतले आणि तिथेच राहिले.
௨௯அப்படியே சாதோக்கும் அபியத்தாரும் தேவனுடைய பெட்டியை எருசலேமிற்குத் திரும்பக் கொண்டுபோய், அங்கே இருந்தார்கள்.
30 ३० दावीद शोक करत जैतूनाच्या डोंगरावर गेला. मस्तक झाकून, अनवाणी तो चालत राहिला त्याच्याबरोबरच्या लोकांनीही त्याचे अनुकरण केले तेही रडत होते.
௩0தாவீது தன்னுடைய முகத்தை மூடி, வெறுங்காலால் நடந்து அழுதுகொண்டு, ஒலிவமலையின்மேல் ஏறிப்போனான்; அவனோடு இருந்த எல்லா மக்களும் முகத்தை மூடி அழுதுகொண்டு ஏறினார்கள்.
31 ३१ एकाने दावीदाला सांगितले अहिथोफेल हा अबशालोम बरोबर कारस्थाने करणाऱ्यांपैकी आहे. तेव्हा दावीदाने देवाची करूणा भाकली तो म्हणाला, परमेश्वरा, अहिथोफेलचा सल्ला निष्फळ ठरु दे.
௩௧அப்சலோமோடு சதி செய்தவர்களுடன் அகித்தோப்பேலும் சேர்ந்திருக்கிறான் என்று தாவீதுக்கு அறிவிக்கப்பட்டபோது, தாவீது: யெகோவாவே, அகித்தோப்பேலின் ஆலோசனையைப் பைத்தியமாக்கிவிடுவீராக என்றான்.
32 ३२ दावीद डोंगरमाथ्यावर पोहोचला येथे तो अनेकदा देवाची आराधना करत असे. त्या वेळी हूशय अर्की त्यास भेटायला आला. त्याचा अंगरखा फाटलेला होता. त्याने डोक्यात माती घालून घेतलेली होती.
௩௨தாவீது மலையின் உச்சிவரை வந்து, அங்கே தேவனைத் தொழுதுகொண்டபோது, இதோ, அற்கியனான ஊசாய் தன்னுடைய ஆடையைக் கிழித்துக் கொண்டு, தலையின்மேல் புழுதியைப் போட்டுக்கொண்டவனாக அவனுக்கு எதிராக வந்தான்.
33 ३३ दावीद हूशयला म्हणाला, तू माझ्याबरोबर आलास तर एवढे लोक आहेत त्यामध्ये आणखी तुझा भार.
௩௩தாவீது அவனைப் பார்த்து: நீ என்னோடு நடந்துவந்தால் எனக்குப் பாரமாக இருப்பாய்.
34 ३४ पण तू यरूशलेमेला परतलास तर अहिथोफेलची मसलत तू धुळीला मिळवू शकशील. अबशालोमला सांग, महाराज मी तुमचा दास आहे. मी तुमच्या वडीलांच्या सेवेत होतो, पण आता तुमची सेवा करीन.
௩௪நீ நகரத்திற்குத் திரும்பிப்போய், அப்சலோமை நோக்கி: ராஜாவே, உம்முடைய வேலைக்காரனாக இருப்பேன்; முன்பு நான் உம்முடைய தகப்பனுக்கு வேலைக்காரனாக இருந்தேன்; இப்போது நான் உமக்கு வேலைக்காரன் என்று சொன்னால், எனக்காக அகித்தோப்பேலின் ஆலோசனையை பயனற்றுப் போகும்படிச் செய்வாய்.
35 ३५ सादोक आणि अब्याथार हे याजक तुझ्याबरोबर असतील. राजाच्या घरी जे ऐकशील ते सगळे त्यांच्या कानावर घालत जा.
௩௫உன்னோடு அங்கே சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்கள் இருக்கிறார்கள் அல்லவா? ராஜாவின் வீட்டிலே ஏதேனும் செய்தியை கேள்விப்பட்டால், அதையெல்லாம் சாதோக் அபியத்தார் என்னும் ஆசாரியர்களுக்கு தெரியப்படுத்து.
36 ३६ सादोकाचा मुलगा अहीमास आणि अब्याथारचा योनाथान हे ही त्यांच्या बरोबर आहेत. त्यांच्या मार्फत तू मला खबर कळवत जा.
௩௬அங்கே அவர்களோடு சாதோக்கின் மகன் அகிமாசும், அபியத்தாரின் மகன் யோனத்தானும், அவர்களுடைய இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்; நீங்கள் கேள்விப்படுகிற செய்தியையெல்லாம் அவர்கள் மூலமாக எனக்கு அனுப்புங்கள் என்றான்.
37 ३७ तेव्हा दावीदाचा मित्र हूशय यरूशलेमेमध्ये परतला. अबशालोम ही तेथे आला.
௩௭அப்படியே தாவீதின் நண்பனான ஊசாய் எருசலேமுக்கு வந்தான்; அப்சலோமும் எருசலேமிற்கு வந்தான்.

< 2 शमुवेल 15 >