< Heremaia 5 >
1 E oma, kopikopiko koutou i nga ara o Hiruharama, tirohia kia mohio ai koutou, rapua i nga waharoa o reira, me kahore e kite i tetahi tangata, mehemea tera he tangata e whakarite pai ana, e rapu ana i te pono; a ka murua e ahau nga he o reira.
௧நியாயஞ்செய்கிற மனிதனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களில் சுற்றிப்பார்த்து, விசாரித்து, அதின் வீதிகளில் தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.
2 Na ahakoa mea noa ratou, Kei te ora a Ihowa; he pono he oati teka ta ratou.
௨அவர்கள்: யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறோம் என்றாலும், பொய்சொல்கிறார்களே.
3 He teka ianei, e Ihowa, kei runga ou kanohi i te pono? i whiua ratou e koe, heoi kihai i pouri; moti iho ratou i a koe, heoi kahore i pai kia anga mai ki te ako; kua meinga e ratou o ratou mata kia maro atu i te kohatu, kua kore e pai ki te hoki mai.
௩யெகோவாவே, உம்முடைய கண்கள் சத்தியத்தை அல்லவோ நோக்குகின்றது; அவர்களை அடிக்கிறீர், ஆனாலும் அவர்களுக்கு வலிக்காது; அவர்களை நிர்மூலமாக்குகிறீர், ஆனாலும் புத்தியை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்கிறார்கள்; தங்கள் முகங்களைக் கன்மலையைவிட கெட்டியாக்கி, திரும்பமாட்டோம் என்கிறார்கள்.
4 Koia ahau i mea ai, He pono he rawakore enei, he kuware, kahore hoki ratou e mohio ki te ara a Ihowa, ki te whakarite a to ratou Atua;
௪அப்பொழுது நான்: இவர்கள் ஏழைகளாமே, இவர்கள் மதியற்றவர்கள்; யெகோவாவுடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறியாதிருக்கிறார்கள் என்றும்;
5 Ka haere ahau ki nga tangata rarahi, ka korero ki a ratou; e mohio ana hoki ratou ki te ara a Ihowa, ki te whakarite a to ratou Atua: heoi ko enei, kotahi tonu ratou tahi nana i wawahi te ioka, i motumotu hoki nga here.
௫நான் பெரியோர்களிடத்தில் போய், அவர்களுடன் பேசுவேன்; அவர்கள் யெகோவாவுடைய வழியையும், தங்கள் தேவனுடைய நியாயத்தையும் அறிவார்கள் என்று சொன்னேன்; அவர்களோ ஏகமாக நுகத்தடியை முறித்து, கட்டுகளை அறுத்துப்போட்டார்கள்.
6 Mo reira ka whakamatea ratou e te raiona i roto i te ngahere, ka pahuatia e te wuruhi o nga ahiahi, ka tuteia o ratou pa e te reparo, ko te hunga katoa e puta mai ki waho ka haehaea; he maha hoki o ratou pokanga ketanga, kua nui haere o ratou tah uritanga ketanga.
௬ஆகையால் காட்டிலிருந்து வரும் சிங்கம் அவர்களைக் கொல்லும், வனாந்திரத்திலுள்ள ஓநாய்கள் அவர்களைப் பீறும், சிவிங்கி அவர்கள் பட்டணங்களின்மேல் நோக்கமாயிருக்கும்; அவைகளிலிருந்து புறப்படுகிறவன் எவனும் பீறப்படுவான்; அவர்கள் மீறுதல்கள் பெருகி, அவர்கள் சீர்கேடுகள் அதிகரித்தது.
7 Me pehea e murua ai e ahau tenei he ou? kua whakarere nei au tama i ahau, oatitia ana e ratou nga mea ehara nei i te atua; i to ratou makonatanga i taku kai, na kei te puremu, ropu tonu ratou i roto i nga whare o nga wahine kairau.
௭இவைகளை நான் உனக்கு மன்னிப்பது எப்படி? உன் பிள்ளைகள் என்னை விட்டுவிட்டு, தெய்வம் அல்லாதவைகள் பேரில் ஆணையிடுகிறார்கள்; நான் திருப்தியாக்கின அவர்கள் விபசாரம்செய்து, வேசிவீட்டில் கூட்டங்கூடுகிறார்கள்.
8 Ko to ratou rite kei te hoiho whangai i te ata: e tangi ana ki te wahine a tona hoa, a tona hoa.
௮அவர்கள் கொழுத்த குதிரைகளைப்போல காலமே எழும்பி, அவனவன் தன்தன் அயலானுடைய மனைவியின் பின்னால் கனைக்கிறான்.
9 E kore ianei ahau e whiu mo enei mea? e ai ta Ihowa: e kore ianei toku wairua e rapu utu i te iwi penei?
௯இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட மக்களுக்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார்.
10 Haere koutou ki runga ki ona taiepa wawahi ai; otiia kaua e whakapaua rawatia; whakakahoretia ona pekerangi; ehara hoki ena i a Ihowa
௧0அதின் மதில்கள்மேல் ஏறி அழித்துப்போடுங்கள்; ஆனாலும் சர்வசங்காரம் செய்யாதிருங்கள்; அதின் கொத்தளங்களை இடித்துப்போடுங்கள்; அவைகள் யெகோவாவுடையவைகள் அல்ல.
11 He nui hoki te tinihanga o te whare o Iharaira raua ko te whare o Hura ki ahau, e ai ta Ihowa.
௧௧இஸ்ரவேல் வம்சத்தாரும், யூதா வம்சத்தாரும் எனக்கு விரோதமாய் மிகுதியும் துரோகம் செய்தார்கள் என்று யெகோவா சொல்லுகிறார்.
12 Kua whakakahore ratou ki ta Ihowa, kua mea, ehara i a ia; e kore hoki te he e tae mai ki a tatou; e kore ano tatou e kite i te hoari, i te hemokai.
௧௨அவர் அப்படிப்பட்டவர் அல்லவென்றும், பொல்லாப்பு நம்மேல் வராது, நாம் பட்டயத்தையாகிலும், பஞ்சத்தையாகிலும் காண்பதில்லையென்றும்,
13 Ko nga poropiti he hau kau, kahore hoki he kupu i a ratou: ko enei mea ka pa ki a ratou.
௧௩தீர்க்கதரிசிகள் காற்றாய்ப்போவார்கள்; திருவாக்கு அவர்களில் இல்லை; அவர்களுக்கே அப்படி ஆகக்கடவதென்றும், அவர்கள் சொல்லிக் யெகோவாவை மறுதலித்தார்கள்.
14 Na reira tenei kupu a Ihowa, a te Atua o nga mano, Mo ta koutou korerotanga i tena kupu, tenei ahau te mea nei i aku kupu i roto i tou mangai hei ahi, ko tenei iwi hoki hei rakau, a ka pau ratou.
௧௪ஆகையால் சேனைகளின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நீங்கள் இந்த வார்த்தையைச் சொன்னபடியினால், இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை நெருப்பையும், இந்த மக்களை விறகும் ஆக்குவேன், அது இவர்களை அழிக்கும்.
15 Tenei ahau te kawe nei i tetahi iwi o tawhiti ki a koutou, e te whare o Iharaira, e ai ta Ihowa; he iwi kaha, he iwi nonamata riro, he iwi kahore nei koe e mohio ki tona reo, kahore ano hoki e marama ki tana e korero ai.
௧௫இஸ்ரவேல் வம்சத்தாரே, இதோ, தூரத்திலிருந்து நான் உங்கள்மேல் ஒரு தேசத்தைக் கொண்டுவருவேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அது பலத்த தேசம், அது பூர்வகாலத்து தேசம், அவர்கள் நீ அறியாத மொழியைப் பேசும் தேசம், அவர்கள் பேசுகிறது இன்னதென்று உனக்கு விளங்காது.
16 Ko tana papa pere he urupa tuwhera, he tangata marohirohi katoa ratou.
௧௬திறந்த பிரேதக்குழிகளைப்போல் அவர்கள் அம்புகள் வைக்கும் பைகள் இருக்கும்; அவர்கள் அனைவரும் பராக்கிரமசாலிகள்.
17 A ka pau i a ratou au hua e kotia ana, me tau taro, nga kai hei kainga ma au tama, ma au tamahine; ka pau i a ratou au hipi me au kau; ka pau i a ratou au waina me au piki; ka hautopea iho ki te hoari ou pa taiepa, au i whakawhirinaki ai.
௧௭அவர்கள் உன் மகன்களும் உன் மகள்களும் சாப்பிடவேண்டிய உன் விளைச்சலையும், உன் அப்பத்தையும் சாப்பிட்டு, உன் ஆடுகளையும் உன் மாடுகளையும் பட்சித்து, உன் திராட்சைப்பழங்களையும் உன் அத்திப்பழங்களையும் சாப்பிட்டு, நீ நம்பின உன்னுடைய பாதுகாப்பான பட்டணங்களைப் பட்டயத்தால் வெறுமையாக்குவார்கள்.
18 Ahakoa i aua ra ano, e ai ta Ihowa, e kore e whakapaua rawatia taku ki a koutou.
௧௮ஆகிலும் நான் அந்நாட்களிலும் உங்களை முற்றிலும் அழிக்காதிருப்பேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
19 Na, ki te ki mai koutou a mua, He aha a Ihowa, to tatou Atua i mea ai i enei mea katoa ki a tatou? ko reira koe ki atu ai ki a ratou, Ka pena i a koutou kua whakarere na i ahau, kua mahi na ki nga atua ke i to koutou whenua, waihoki ka mahi kout ou ki nga tangata ke i te whenua ehara nei i a koutou.
௧௯எங்கள் தேவனாகிய யெகோவா எங்களுக்கு இவைகளையெல்லாம் எதினால் செய்தார் என்று நீங்கள் கேட்டால், அப்பொழுது நீ அவர்களைப் பார்த்து: நீங்கள் என்னைவிட்டு, உங்களுடைய தேசத்தில் அந்நிய தெய்வங்களைச் சேவித்ததுபோல, உங்களுடையதல்லாத தேசத்தில் அந்நியர்களைச் சேவிப்பீர்களென்று சொல்வாயாக.
20 Whakaaturia tenei i roto i te whare o Hakopa, kia rangona ano i roto i a Hura; mea atu,
௨0நீங்கள் யாக்கோபின் வீட்டில் அறிவித்து, யூதாவில் சொல்ல வேண்டியது என்னவென்றால்,
21 Tena, whakarongo ki tenei, e te iwi wairangi kahore nei he ngakau, he kanohi nei o ratou, heoi kahore e kite, he taringa o ratou, a kahore e rongo.
௨௧கண்கள் இருந்தும் காணாமலும், காதுகள் இருந்தும் கேளாமலுமிருக்கிற அறிவில்லாத மக்களே, கேளுங்கள்.
22 Kahore ranei o koutou wehi ki ahau? e ai ta Ihowa; e kore ianei koutou e hopohopo ki toku aroaro? naku nei hoki i mea te onepu hei rohe ki te moana, he tikanga mau tonu, e kore ano e koni mai: ahakoa ngana noa ona ngaru, e kore e taea ta ratou; hamama noa, e kore ano e koni mai.
௨௨எனக்குப் பயப்படாதிருப்பீர்களோ என்று யெகோவா சொல்லுகிறார்; அலைகள் மோதியடித்தாலும் மேற்கொள்ளாதபடிக்கும், அவைகள் இரைந்தாலும் கடவாதபடிக்கும், கடக்கக்கூடாத நித்திய பிரமாணமாக சமுத்திரத்தின் மணலை எல்லையாக வைத்திருக்கிறவராகிய எனக்குமுன்பாக அதிராதிருப்பீர்களோ?
23 Ko tenei iwi ia, he tutu, he whakakeke o ratou ngakau; kua peka ke atu ratou, kua riro.
௨௩இந்த மக்களோ முரட்டாட்டமும் கலகமுமான இருதயமுள்ளவர்கள்; முரட்டாட்டம்செய்து போய்விடுகிறார்கள்.
24 Kahore hoki a ratou kianga ake i roto i o ratou ngakau, Tena, kia wehi tatou ki a Ihowa, ki to tatou Atua, ko ia nei te kaihomai i te ua; i to mua, i to muri, i te wa e tika ai; nana nei i mau ai ki a tatou nga wiki i whakaritea mo te kotinga.
௨௪அந்தந்தப் பருவத்தில் எங்களுக்கு மழையையும், முன்மாரியையும் பின்மாரியையும் கொடுத்து, அறுப்புக்கு நியமித்த வாரங்களை எங்களுக்குத் தற்காக்கிற எங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பயந்திருப்போம் என்று அவர்கள் தங்கள் இருதயத்தில் சொல்லுகிறதில்லை.
25 Na o koutou he enei i puta ke ai, ko o koutou hara ano hei kaiponu atu i te pai i a koutou.
௨௫உங்கள் அக்கிரமங்கள் இவைகளை விலக்கி, உங்கள் பாவங்கள் உங்களுக்கு நன்மையை வரவிடாமல் தடுக்கிறது.
26 E kitea ana hoki he hunga kino i roto i taku iwi: titiro matatau mai ana ratou, me te mea he kaihopu manu e kupapa ana; kei te whakatakoto mahanga ratou, kei te hopu tangata.
௨௬குருவிபிடிக்கிறவர்கள் பதுங்குகிறதுபோல் பதுங்கி, மனிதரைப் பிடிக்கக் கண்ணிகளை வைக்கிற துன்மார்க்கர் என் மக்களில் காணப்படுகிறார்கள்.
27 Kei te whare manu e ki ana i nga manu te rite o o ratou whare e ki tonu nei i te tinihanga: na reira ratou i nui ai, i whai taonga ai.
௨௭குருவிகளால் கூண்டு நிறைந்திருக்கிறதுபோல், அவர்கள் வீடுகள் கபடங்களால் நிறைந்திருக்கிறது; ஆதலால் அவர்கள் பெருகி செல்வந்தர்களாகிறார்கள்.
28 Tetere tonu ratou, towahiwahi ana; kua neke rawa ake ta ratou i nga mahi a te hunga kino: ko te whakawa, ko te whakawa a te pani, kahore i whakaritea e ratou, heoi kake tonu ratou; kahore hoki e whakatikaia e ratou te whakawa a nga rawakore.
௨௮கொழுத்து, அடம்பிடிக்கிறார்கள்; துன்மார்க்கனுடைய செயல்களைக் கண்டிக்காமல் விடுகிறார்கள்; திக்கற்றவனுடைய வழக்கை விசாரியாமல், தாங்கள்மாத்திரம் வாழுகிறார்கள்; எளியவர்களின் நியாயத்தைத் தீர்க்கமாட்டார்கள்.
29 E kore ranei ahau e whai mahara ki enei mea? e ai ta Ihowa; e kore ranei toku wairua e rapu utu i te iwi penei?
௨௯இவைகளை விசாரியாதிருப்பேனோ? இப்படிப்பட்ட தேசத்திற்கு என் ஆத்துமா நீதியைச் சரிக்கட்டாதிருக்குமோ என்று யெகோவா சொல்லுகிறார்.
30 Whakamiharo rawa, whakawehi rawa te mea e meatia ana ki te whenua;
௩0திகைத்துத் திடுக்கிடத்தக்க காரியம் தேசத்தில் நடந்துவருகிறது.
31 E poropiti teka ana nga poropiti; a e whakahaere ana nga tohunga, ko ta ratou te tikanga; a pai tonu taku iwi ki te pena. Na ka pehea ra koutou i tona tukunga iho?
௩௧தீர்க்கதரிசிகள் கள்ளத்தீர்க்கதரிசனம் சொல்லுகிறார்கள்; ஆசாரியர்கள் அவர்கள் மூலமாய் ஆளுகிறார்கள்; இப்படியிருப்பது என் மக்களுக்குப் பிரியமாயிருக்கிறது; ஆனாலும் முடிவில் என்ன செய்வீர்கள்?