< Zakaria 6 >
1 Nampiandraeko indraike o masokoo le nitalake vaho inge te nimb’eo ty sarete efatse boak’ an-jeba’ ty vohitse roe; haboan-torisìke i vohitse rey.
௧நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து, இதோ, இரண்டு மலைகளின் நடுவாகப் புறப்பட்டு வருகிற நான்கு இரதங்களைக் கண்டேன்; அந்த மலைகள் வெண்கல மலைகளாயிருந்தன.
2 Soavala mena ty tamy sarete valoha’ey, naho soavala mainte ty tamy sarete faharoey,
௨முதலாம் இரதத்தில் சிவப்புக் குதிரைகளும், இரண்டாம் இரதத்தில் கறுப்புக்குதிரைகளும்,
3 naho soavala foty ty tamy sarete fahateloy vaho soavala maremboke maozatse ty tamy sarete fah’ efatsey.
௩மூன்றாம் இரதத்தில் வெள்ளைக்குதிரைகளும், நான்காம் இரதத்தில் புள்ளிபுள்ளியான சிவப்புக்குதிரைகளும் பூட்டப்பட்டிருந்தன.
4 Aa le hoe ty asako tamy anjely nisaontsy amakoy: Ino o raha reo, talèko?
௪நான் என்னுடன் பேசின தூதனை நோக்கி: ஆண்டவனே, இவைகள் என்னவென்று கேட்டேன்.
5 Le hoe ty natoi’ i anjeliy ahy: Tion-dikerañe efatse mionjomb’eo, boak’ amy nijohaña’e aolo’ i Talè’ ty tane-bey toiy.
௫அந்தத் தூதன் எனக்கு மறுமொழியாக: இவைகள் சர்வலோகத்திற்கும் ஆண்டவராயிருக்கிறவருடைய சமுகத்தில் நின்று புறப்படுகிற வானத்தினுடைய நான்கு ஆவிகள் என்றார்.
6 Mionjoñe mb’ avaratse añe o an-tsoavala mainteo; manonjohy iareo o fotio; vaho mb’ atimo mb’eo o maroembokeo.
௬ஒன்றில் பூட்டப்பட்டிருந்த கறுப்புக்குதிரைகள் வடதேசத்திற்குப் புறப்பட்டுப்போயின; வெண்மையான குதிரைகள் அவைகளின் பின்னே புறப்பட்டுப்போனது; புள்ளிபுள்ளியான குதிரைகள் தென்தேசத்திற்குப் புறப்பட்டுப்போனது.
7 Nionjoñe i maozatse rey nipay hijelanjelañe an-tane atoy; le hoe re: Akia, mikariokarioha mb’eo mb’eo an-tane atoy. Aa le nihelahela nanitsike ty tane toy iereo.
௭சிவப்புக் குதிரைகளோவென்றால் புறப்பட்டுப்போய், பூமியிலே சுற்றித்திரிய கேட்டுக்கொண்டன; அதற்கு அவர்: போய் பூமியில் சுற்றித்திரியுங்கள் என்றார்; அப்படியே பூமியிலே சுற்றித்திரிந்தன.
8 Nikoik’ ahy re nanao ty hoe: Hehe te nampanintsiñe ty troko an-tane avaratsey o mb’ an-tane avaratseo.
௮பின்பு அவர் என்னைக் கூப்பிட்டு: பார், வடதேசத்திற்குப் புறப்பட்டுப்போனவைகள், வடதேசத்திலே என் கோபத்தைச் சாந்தப்படுத்தியது என்று என்னுடன் சொன்னார்.
9 Niheo amako ty tsara’ Iehovà, nanao ty hoe:
௯பின்பு யெகோவாவுடைய வார்த்தை எனக்கு உண்டாகி அவர்:
10 Angalao amo mirohio, amo boake Kelday naho e Tobià naho e Iedaiào, amo boake Bavele añeo; le amy àndroy avao, miziliha an-kiboho’ Iosià ana’ i Tsefanià;
௧0சிறையிருப்பின் மனிதர்களாகிய எல்தாயும், தொபியாவும், யெதாயாவும் பாபிலோனிலிருந்து வந்திருக்கும் அந்நாளிலே நீ போய், செப்பனியாவின் மகனாகிய யோசியாவின் வீட்டிற்குள் நுழைந்து,
11 naho andrambeso volafoty naho volamena vaho mitsenea sabaka fanjàka, le aombeo añambone’ Iehosoa mpisorom-bey ana’ Iehozadake;
௧௧அங்கே அவர்களுடைய கையிலே வெள்ளியையும் பொன்னையும் வாங்கி, கிரீடங்களைச் செய்வித்து, யோத்சதாக்கின் மகனாகிய யோசுவா என்னும் பிரதான ஆசாரியனுடைய தலையிலே வைத்து,
12 le isaontsio ty hoe: Hoe ty nafè’ Iehovà’ i Màroy: Ingo t’indaty atao ty hoe Toramionjo: handrevake boak’ an-toe’ey; ie ty hamboatse ty anjomba’ Iehovà;
௧௨அவனுடன் சொல்லவேண்டியது: சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, ஒரு மனிதன், அவருடைய நாமம் கிளை என்னப்படும்; அவர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து முளைத்தெழும்பிக் யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவார்.
13 eka! ie ty handranjy ty kivoho’ Iehovà; naho ie ty hivave ty enge’e, naho hiambesatse vaho hifehe am-piambesa’e eo, ho mpisoroñe amy fiambesa’ey; naho añivo’ i roroey ty fanoroan-kanintsiñe.
௧௩அவரே யெகோவாவுடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராகவும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.
14 Ho faniahiañe añ’ anjomba’ Iehovà ao ho a’ i Keleme, naho i Tobià, naho Iedaià, vaho i Kene ana’ i Tsefanià, i sabakay.
௧௪இந்தக் கிரீடங்களோவென்றால், யெகோவாவுடைய ஆலயத்திலே, ஏலேமுக்கும், தொபியாவுக்கும், யெதாயாவுக்கும், செப்பனியாவின் மகனாகிய ஏனுக்கும் நினைப்பூட்டுதலுக்கென்று வைக்கப்படுவதாக.
15 Homb’ eo ka o tsietoitane añeo hamboatse añ’ anjomba’ Iehovà ao, vaho ho fohi’ areo te nirahe’ Iehovà’ i Màroy ama’ areo iraho. Ho tondroke izay naho orihe’ areo ty fiarañanaña’ Iehovà Andrianañahare’areo.
௧௫தூரத்திலுள்ளவர்கள் வந்து யெகோவாவுடைய ஆலயத்தைக் கூட இருந்து கட்டுவார்கள்; அப்பொழுது சேனைகளின் யெகோவா என்னை உங்களிடத்திற்கு அனுப்பினாரென்று அறிந்துகொள்வீர்கள்; நீங்கள் உங்கள் தேவனாகிய யெகோவாவின் சத்தத்தைக் கேட்டு நடந்தீர்களென்றால் இது நிறைவேறும் என்று சொல் என்றார்.