< Jeremia 38 >

1 Aa le jinanji’ i Sefatia ana’ i Matane, naho i Gedalia ana’ i Pasore, naho Iokale ana’ i Selemia, naho i Pasore ana’ i Malkia, ty tsara nisaontsie’ Iirmeà am’ ondaty iabio ami’ty hoe,
இந்த நகரத்தில் தங்கியிருக்கிறவன், பட்டயத்தாலும், பஞ்சத்தாலும், கொள்ளைநோயாலும் இறப்பான்; கல்தேயரிடத்திற்குப் புறப்பட்டுப்போகிறவனோ உயிரோடிருப்பான்; அவனுடைய உயிர் அவனுக்குக் கிடைத்த கொள்ளைப்பொருளைப் போலிருக்கும்; அவன் பிழைப்பானென்பதைக் யெகோவா சொல்கிறார் என்றும்,
2 Hoe t’Iehovà: Ho zamanem-pibara, naho ty hasalikoañe naho ty angorosy ze midoñe an-drova atoy; fe ho veloñe ze mionjomb’ amo nte-kasdio mb’eo, le hengañe ama’e ty fiai’e ho tsindroke vaho ho veloñe.
இந்த நகரம் பாபிலோன் ராஜாவுடைய படையின் கையில் நிச்சயமாக ஒப்புக்கொடுக்கப்படும்; அவன் அதைப் பிடிப்பானென்பதை யெகோவா சொல்கிறார் என்றும்,
3 Hoe t’Iehovà, Toe hatolotse am-pità’ ty lia-rain-dahindefo’ i mpanjaka’ i Baveleiy ty rova toy vaho ho tavaneñe.
எரேமியா எல்லா மக்களிடமும் சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை மாத்தானின் மகனாகிய செப்பத்தியாவும், பஸ்கூரின் மகனாகிய கெதலியாவும், செலேமியாவின் மகனாகிய யூகாலும், மல்கியாவின் மகனாகிய பஸ்கூரும் கேட்டார்கள்.
4 Le hoe i roandriañe rey amy mpanjakay, Ehe, mihalaly ama’o zahay te havetrake indatiy; amy te mokore’e ty fità’ o lahindefo sisa an-drova atoio, naho ty fità’ ondaty iabio, ie taroñe’e i tsara zay le t’ie tsy mipay ty hahasoa ondaty retoa fa ty hampiantoa’e.
அப்பொழுது பிரபுக்கள் ராஜாவை நோக்கி: இந்த மனிதன் கொல்லப்பட அனுமதிக்கவேண்டும்; அதேனென்றால், இந்த நகரத்தில் மீதியாயிருக்கிற போர்வீரர்களிடத்திலும், மற்றுமுள்ள எல்லா மக்களிடத்திலும், இவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறதினால் அவர்களுடைய கைகளைத் தளர்ந்து போகச்செய்கிறான்; இவன் இந்த மக்களின் நலனைத் தேடாமல், அவர்கள் கேட்டையே தேடுகிறான் என்றார்கள்.
5 Le hoe t’i Tsidkia mpanjaka am’ iereo, Ingo, am-pità’ areo re: fa ia’ mbao ty mpanjaka te hahafiatrek’ ama’ areo?
அப்பொழுது சிதேக்கியா ராஜா: இதோ, அவன் உங்கள் கைகளில் இருக்கிறான்; உங்களுக்கு விரோதமாக ராஜா ஒன்றும் செய்யமுடியாது என்றான்.
6 Aa le rinambe’ iereo t’Iirmeà vaho nagodo’ iareo an-kadaha’ i Malkia ana’ i mpanjakay, an-kiririsam-pigaritse ao naho nazotso’ iareo an-taly t’Iirmeà. Tsy aman-drano i kadahay, fa fotake, vaho nilempotse an-ditsak’ ao t’Iirmeà.
அப்பொழுது அவர்கள் எரேமியாவைப் பிடித்து, அவனைக் காவல்நிலையத்தின் முற்றத்திலிருந்த அம்மெலேகின் மகனாகிய மல்கியாவினுடைய கிணற்றில் போட்டார்கள்; எரேமியாவைக் கயிறுகளினால் அதில் இறக்கிவிட்டார்கள்; அந்தக் கிணறு தண்ணீர் இல்லாமல் சேறாயிருந்தது, அந்த சேற்றில் எரேமியா புதைந்தான்.
7 Aa ie jinanji’ i Ebed-meleke nte Kosy, vositse, añ’anjomba’ i mpanjakay te najo’ iareo an-kadaha ao t’Iirmeà—ie tandalam-bei’ i Beniamine eo i mpanjakay,
அவர்கள் எரேமியாவை கிணற்றில் போட்டதை ராஜாவின் அரண்மனையில் இருந்த எத்தியோப்பியனாகிய எபெத்மெலேக் என்னும் ஒரு பிரதானி கேள்விப்பட்டான்; ராஜாவோ பென்யமீன் வாசலில் உட்கார்ந்திருந்தான்.
8 le niakatse añ’ anjombam-panjaka ao t’i Ebed-meleke vaho nisaontsy amy mpanjakay ty hoe,
அப்பொழுது எபெத்மெலேக் ராஜாவின் அரண்மனையிலிருந்து புறப்பட்டுப்போய், ராஜாவை நோக்கி:
9 O ry talèko mpanjaka, Hekoheko raty ty nanoe’ ondaty reo amy fonga fitoloña’ iareo am’ Iirmeà mpitokiy, ie najorobo an-kadaha ao; toe hihomak’ an-toe’e ao re ty amy mosarey, ie tsy ama-mofo ka ty an-drova atoy.
ராஜாவாகிய என் ஆண்டவனே, இந்த மனிதர்கள் எரேமியா தீர்க்கதரிசியை கிணற்றில் போட்டது தகாத செய்கையாயிருக்கிறது; அவன் இருக்கிற இடத்தில் பட்டினியினால் இறப்பானே இனி நகரத்தில் அப்பமில்லை என்றான்.
10 Aa le nafanto’ i mpanjakay amy Ebed-meleke nte Kosy ty hoe: Angalao ondaty telo-polo atoy, vaho akaro an-kadaha ao t’Iirmeà mpitoky, tsy mone hihomake.
௧0அப்பொழுது ராஜா எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியனை நோக்கி: நீ இவ்விடத்திலிருந்து முப்பது மனிதரை உன்னுடனே கூட்டிக்கொண்டுபோய், எரேமியா தீர்க்கதரிசி இறப்பதற்குமுன்னே அவனைக் கிணற்றிலிருந்து தூக்கிவிடு என்று கட்டளையிட்டான்.
11 Aa le nampindreze’ i Ebed-meleke ama’e i ondaty rey, le nizilik’ añ’ anjomba’ i mpanjakay ambane’ i trañom-baray le nandrambe tsirodea naho tsikotita, vaho nazotso’ iareo an-taly mb’am’ Iirmeà amy kadahay.
௧௧அப்பொழுது எபெத்மெலேக் அந்த மனிதரைத் தன்னுடனே கூட்டிக்கொண்டு, ராஜாவின் அரண்மனைப் பொக்கிஷசாலையின் கீழிருந்த அறைக்குள் புகுந்து, கிழிந்துபோன பழைய புடவைகளையும் கந்தைத் துணிகளையும் எடுத்துக்கொண்டுபோய், அவைகளைக் கயிறுகளினால் எரேமியாவின் அருகில் கிணற்றில் இறக்கிவிட்டு,
12 Le hoe t’i Ebed-meleke nte-Kosy am’ Iirmeà, Ano an-kilek’ ao o tsirodea naho tsikotitao ty amo tàlio. Le nanoe’ Iirmeà.
௧௨எபெத்மெலேக் என்னும் எத்தியோப்பியன் எரேமியாவுடனே: கிழிந்துபோன இந்தப் பழைய புடவைகளையும் கந்தைகளையும் உம்முடைய அக்குள்களில் கயிறுகளுக்கு இடையில் வைத்துப் போட்டுக்கொள்ளும் என்றான்; எரேமியா அப்படியே செய்தான்.
13 Aa le tinari’ iareo mañambone amo talìo t’Iirmeà, naho naaka’ iareo an-kadahay, vaho nidok’ an’ kiririsam-pigaritse ao t’Iirmeà.
௧௩அப்பொழுது எரேமியாவைக் கயிறுகளால் தூக்கி, அவனைக் கிணற்றிலிருந்து எடுத்துவிட்டார்கள்; எரேமியா காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்.
14 Nampisangitrife’ i Tsidkia am’ Iirmeà mpitoky vaho nendese’e mb’an-dalambey faha-telo añ’ an­jomba’ Iehovà ao, le hoe i mpanjakay am’ Iirmeà. Hañontane raha ama’o iraho le ko añetaha’o ndra inoñ’ inoñe.
௧௪பின்பு சிதேக்கியா ராஜா, எரேமியா தீர்க்கதரிசியைக் யெகோவாவுடைய ஆலயத்தில் இருக்கும் மூன்றாம் வாசலில் தன்னிடத்திற்கு வரவழைத்தான்; அங்கே ராஜா, எரேமியாவை நோக்கி: நான் உன்னிடத்தில் ஒரு காரியம் கேட்கிறேன்; நீ எனக்கு ஒன்றும் மறைக்கவேண்டாம் என்றான்.
15 Le hoe t’Iirmeà amy Tsidkia, Aa naho taroñeko, tsy hañohofa’o loza hao? Aa ndra te toroako, ho haoñe’o hao?
௧௫அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நான் அதை உமக்கு அறிவித்தால் என்னைக் கண்டிப்பாகக் கொலைசெய்வீரல்லவா? நான் உமக்கு ஆலோசனை சொன்னாலும், என் சொல்லைக் கேட்கமாட்டீர் என்றான்.
16 Aa le nanao fanta añ’ etake am’ Iirmeà t’i Tsidkia mpanjaka ami’ty hoe, Kanao veloñe t’Iehovà nitsene i sandrin-tika retoa, tsy havetrako irehe, naho tsy hatoloko am-pità’ ondaty mipay ty fiai’oo.
௧௬அப்பொழுது சிதேக்கியா ராஜா: நான் உன்னைக் கொல்லாமலும், உன் உயிரை வாங்கத்தேடுகிற இந்த மனிதர் கையில் உன்னை ஒப்புக்கொடாமலும் இருப்பேன் என்பதை, நமக்கு இந்த ஆத்துமாவை உண்டாக்கிய யெகோவாவுடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்று எரேமியாவுக்கு இரகசியமாய் வாக்குக்கொடுத்தான்.
17 Aa le hoe t’Iirmeà amy Tsidkia, Hoe t’Iehovà, Andrianañahare’ i màroy, i Andrianañahare’ Israeley: Ie hiakatse mb’amo roandriam-panjaka’ i Baveleo ey, le ho veloñe ty fiai’o, naho tsy ho forototoe’ ty afo ty rova toy; vaho ho velon-drehe naho i anjomba’oy.
௧௭அப்பொழுது எரேமியா சிதேக்கியாவை நோக்கி: நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடம் புறப்பட்டுப்போனால், உம்முடைய ஆத்துமா உயிரோடிருக்கும்; இந்தப் பட்டணம் நெருப்பினால் சுட்டெரிக்கப்படுவதில்லை; நீரும் உம்முடைய குடும்பமும் உயிரோடிருப்பீர்கள்.
18 Fa naho tsy hiavotse mb’amo roandriam-panjaka’ i Baveleo irehe, le hatolotse am-pità’ o nte Kasdio ty rova toy vaho ho tomomohe’ iareo afo, ihe tsy ho votsorem-pità’ iareo.
௧௮நீர் பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்திற்குப் புறப்பட்டுப்போகாவிட்டால், அப்பொழுது இந்த நகரம் கல்தேயர் கையில் ஒப்புக்கொடுக்கப்படும், அவர்கள் இதை நெருப்பினால் சுட்டெரிப்பார்கள்; நீர் அவர்களுக்குத் தப்பிப்போவதில்லை என்கிறதை இஸ்ரவேலின் தேவனும் சேனைகளின் தேவனுமாகிய யெகோவா சொல்லுகிறார் என்றான்.
19 Aa hoe t’i Tsidkia mpanjaka am’ Iirmeà, Atahorako o nte Iehodà nivalike mb’amo nte-Kasdioo, hera hanese ahy am-pità’ iareo ho kizaheñe.
௧௯அப்பொழுது சிதேக்கியா ராஜா எரேமியாவை நோக்கி: கல்தேயர் தங்களைச் சேர்த்துகொண்ட யூதரின் கையில் என்னைப் பரியாசம்செய்ய ஒப்புக்கொடுப்பார்களோ என்று நான் சந்தேகப்படுகிறேன் என்றான்.
20 Fa hoe t’Iirmeà: Tsy hasese’ iereo. Ehe, mivohora am’ Iehovà ty amy nivolañakoy soa te hierañeran-drehe vaho ho veloñe ty fiai’o.
௨0அதற்கு எரேமியா: உம்மை ஒப்புக்கொடுக்கமாட்டார்கள்; நான் உம்மிடத்தில் சொல்லுகிற யெகோவாவுடைய வார்த்தையைக் கேளும், அப்பொழுது உமக்கு நன்மையாயிருக்கும், உம்முடைய ஆத்துமா பிழைக்கும்.
21 F’ihe mifoneñe tsy hionjoñe mb’eo, le zao ty tsara’ Iehovà natoro’e ahy:
௨௧நான் புறப்படுகிறதில்லை என்று சொல்வீர்ரென்றால், யெகோவா எனக்குத் தெரியப்படுத்தின வார்த்தையாவது:
22 Inao! ze rakemba sisa añ’ anjombam-panjaka’ Iehodà ao ro songa haka­reñe mb’ amo roandria’ i Baveleo: Le ty hoe ty ho asa’ i rakemba rey: O rañe’oo ty nañosik’azo, vaho nandrekets’ azo, aa hehe te nilempotse an-ditsak’ ao o fandia’oo le nitsambolitio’ iareo.
௨௨இதோ, யூதா ராஜாவின் வீட்டில் மீதியான எல்லாப் பெண்களும் வெளியே பாபிலோன் ராஜாவின் பிரபுக்களிடத்தில் கொண்டுபோகப்படுவார்கள்; அப்பொழுது, இதோ, அவர்கள் தானே உம்முடைய நண்பர்கள்; அவர்கள் உமக்குப் போதனைசெய்து, உம்மை மேற்கொண்டார்கள் என்றும், உம்முடைய கால்கள் சேற்றில் அமிழ்ந்தபின்பு அவர்கள் பின்வாங்கிப் போனார்கள் என்றும் அந்த பெண்களே சொல்லுவார்கள்.
23 Hene hakare’ iereo mb’amo nte Kasdio o valy naho ana’oo; le tsy ho votsotse am’pità’ iareo irehe fa ho rambesem-pità’ i mpanjaka’ i Baveley, vaho ihe ty hamorototoañe ty rova toy an’ afo.
௨௩உம்முடைய எல்லாப் பெண்களையும், உம்முடைய பிள்ளைகளையும் வெளியே கல்தேயரிடத்தில் கொண்டு போவார்கள்; நீரும் அவர்கள் கைக்குத் தப்பிப்போகாமல் பாபிலோன் ராஜாவின் கையினால் பிடிக்கப்பட்டு, இந்த நகரம் நெருப்பால் சுட்டெரிக்கப்படக் காரணமாயிருப்பீர் என்றான்.
24 Le hoe t’i Tsidkia am’Iirmeà, Ao tsy hampahafohine’o am’ondaty i rehake zay le tsy ho mate irehe.
௨௪அப்பொழுது சிதேக்கியா எரேமியாவை நோக்கி: இந்த வார்த்தைகளை ஒருவருக்கும் அறிவிக்கவேண்டாம்; அப்பொழுது நீ இறப்பதில்லை.
25 Aa naho rendre’ o roandriañeo te nifanaontsy tika, naho ivotraha’ iareo vaho manao ty hoe: Ehe saontsio ama’ay le nitaroñe’o amy mpanjakaiy naho i nisaontsia’ i mpanjakaiy, le ko añetaha’o, tsy hañohofa’ay loza:
௨௫நான் உன்னுடன் பேசினதைப் பிரபுக்கள் கேள்விப்பட்டு, உன்னிடத்தில் வந்து: நீ ராஜாவோடு பேசிக்கொண்டதை எங்களுக்குத் தெரிவி, எங்களுக்கு ஒன்றும் மறைக்காதே, அப்பொழுது உன்னைக் கொல்லாதிருப்போம்; ராஜா உன்னோடு என்ன பேசினார் என்று உன்னைக் கேட்பார்களேயாகில்,
26 Le ty hoe ty hatoi’o, I entako amy mpanjakay: Ie nihalaliako te tsy hampibalike ahy mb’añ’anjomba’ Ionatane mb’eo hivetrak’ ao.
௨௬நான் யோனத்தானுடைய வீட்டில் மரணமடையாதபடி ராஜா என்னை அங்கே திரும்ப அனுப்பவேண்டாம் என்று, அவர் முகத்திற்கு முன்பாக விண்ணப்பம்செய்தேன் என்று சொல்வாயாக என்றான்.
27 Ie amy zao sindre niropak’ am’ Iirmeà o roandriañeo nañontane aze, le tinaro’e am’iareo i entañe iaby nampi­saontsie’ i mpanjakaiy. Aa le nado’ iareo ty fisaontsiañe ama’e; vaho tsy nioni’ iareo ty vente’e.
௨௭பின்பு எல்லாப் பிரபுக்களும், எரேமியாவினிடத்தில் வந்து, அவனைக் கேட்டார்கள்; அப்பொழுது அவன்: ராஜா கற்பித்த இந்த எல்லா வார்த்தைகளின்படியே அவர்களுக்கு அறிவித்தான்; காரியம் கேள்விப்படாமற்போனதினால், அவனுடன் பேசாமலிருந்துவிட்டார்கள்.
28 Nimoneñe an-kiririsam-pigaritse ao amy zao re ampara’ ty andro’ nitavanañe Ierosalaime.
௨௮அப்படியே எரேமியா, எருசலேம் பிடிபடுகிற நாள்வரை காவல்நிலையத்தின் முற்றத்தில் இருந்தான்; எருசலேம் பிடிபட்டபிறகும் அங்கேயே இருந்தான்.

< Jeremia 38 >