< 1 Samoela 7 >

1 Nimb’eo o nte-Kiriate-Iearimeo nangalake i vatam-pañina’ Iehovày vaho nasese’ iareo mb’ añ’ anjomba’ i Abinadabe mb’ an-kaboam-b’eo. Nafanto’ iareo amy Eleatsare ty fitoloñañe miavake hañambena’e i vatam-pañina’ Iehovày.
அப்படியே கீரியாத்யாரீமின் மனிதர்கள் வந்து, யெகோவாவுடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து, யெகோவாவுடைய பெட்டியைக் காக்கும்படி, அவனுடைய மகனான எலெயாசாரைப் பரிசுத்தப்படுத்தினார்கள்.
2 Taoñe maro ty nimodo te nitoboke e Kiriate-Iearime ao i vatam-pañinay, toe roapolo taoñe; le nitoreo am’ Iehovà ty valobohò’ Israele.
பெட்டி கீரியாத்யாரீமிலே அநேக நாட்கள் தங்கியிருந்தது; 20 வருடங்கள் அங்கேயே இருந்தது; இஸ்ரவேல் குடும்பத்தார்கள் எல்லோரும் யெகோவா வை நினைத்து, அழுதுகொண்டிருந்தார்கள்.
3 Hoe t’i Samoele amy valobohò’ Israeley, Naho toe himpoly amy Iehovà an-kaampon’ arofo nahareo, le apitsoho añe o ‘ndrahare hafao, naho o Asta­rote añivo’ areoo, le hentseño ho am’ Iehovà o arofo’ areoo vaho ie avao ty toroñeñe, vaho ho haha’e am-pità’ o nte-Pilistio.
அப்பொழுது சாமுவேல் இஸ்ரவேல் குடும்பத்தார்கள் அனைவரையும் நோக்கி: நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் கர்த்தரிடத்தில் திரும்பினால், அந்நிய தெய்வங்களையும் அஸ்தரோத்தையும் உங்கள் நடுவிலிருந்து விலக்கி, உங்கள் இருதயத்தைக் யெகோவாவிடம் திருப்பி, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்யுங்கள்; அப்பொழுது அவர் உங்களைப் பெலிஸ்தர்களுடைய கைகளுக்கு விடுவிப்பார் என்றான்.
4 Aa le naria’ o ana’ Israeleo o hazomanga’ i Baaleo, naho o Astaroteo, vaho nito­roñe Iehovà avao.
அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் பாகால்களையும் அஸ்தரோத்தையும் விலக்கிவிட்டு, யெகோவா ஒருவருக்கே ஆராதனை செய்தார்கள்.
5 Le hoe t’i Samoele, Atontono mb’e Mitspè t’Israele iaby, vaho hihalaliako amy Iehovà.
பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் யெகோவாவிடம் மன்றாடும்படி, இஸ்ரவேலர்கள் எல்லோரையும் மிஸ்பாவிலே கூடிவரச்செய்யுங்கள் என்றான்.
6 Aa le nifanontoñe e Mitspè iereo naho nitari-drano, naho nadoa’e añatrefa’Iehovà, le nililitse amy andro zay, vaho nanao ty hoe: Toe aman-kakeo amy Iehovà zahay. Aa le nizaka o ana’ Israeleo e Mitspè ao t’i Samoele.
அவர்கள் அப்படியே மிஸ்பாவிலே கூடிவந்து தண்ணீர் மொண்டு, யெகோவாவுடைய சந்நிதியில் ஊற்றி, அன்றையதினம் உபவாசம்செய்து, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம் என்று அங்கே சொன்னார்கள்; மிஸ்பாவிலே சாமுவேல் இஸ்ரவேல் மக்களை நியாயம் விசாரித்துக்கொண்டிருந்தான்.
7 Ie jinanji’ o nte-Pilistio te nivory e Mitspè ao o ana’ Israeleo, le nionjo haname Israele o talèm-Pilistio. Jinanji’ o ana’ Israeleo le nirevendreveñe amo nte-Pilistio.
இஸ்ரவேல் மக்கள் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர்கள் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தர்களின் ஆளுனர்கள் இஸ்ரவேலுக்கு எதிராக எதிர்த்து வந்தார்கள்; அதை இஸ்ரவேல் மக்கள் கேட்டு, பெலிஸ்தர்களினிமித்தம் பயந்து,
8 Le hoe o ana’ Israeleo amy Samoele: Ko mitofa amy fikoiha’o Iehovà Andria­nañaharen-tikañey ho anay, te ho rombahe’e am-pità’ o nte-Pilistio.
சாமுவேலை நோக்கி: நம்முடைய தேவனாகிய யெகோவா எங்களைப் பெலிஸ்தர்களின் கைக்கு நீங்கலாக்கி இரட்சிக்கும்படி, எங்களுக்காக அவரை நோக்கி இடைவிடாமல் வேண்டிக்கொள்ளும் என்றார்கள்.
9 Aa le nangalak’ anak’ añondry t’i Samoele naho nengae’e ho soron-koroañe am’ Iehovà, le nikanjy Iehovà ty am’ Israele t’i Samoele, vaho nanoiñe aze t’Iehovà.
அப்பொழுது சாமுவேல் பால்குடிக்கிற ஒரு ஆட்டுக்குட்டியைப் பிடித்து, அதைக் யெகோவாவுக்குச் சர்வாங்க தகனபலியாகச் செலுத்தி, இஸ்ரவேலுக்காகக் யெகோவாவை நோக்கி வேண்டிக்கொண்டான்; யெகோவா அவனுக்கு பதில் அருளினார்.
10 Aa naho nisoroña’ i Samoele i engan-koroañey, naho ie niheo mb’eo o nte-Pilistio hifañotakotak’ am’ Israele, vaho nampiparapapiaha’ Iehovà àmpiñe jabajaba amo nte-Pilistio, nampibaibay iareo henane zay, zinevoñ’ aolo’ Israele.
௧0சாமுவேல் சர்வாங்க தகனபலியைச் செலுத்தும்போது, பெலிஸ்தர்கள் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்ய நெருங்கினார்கள்; யெகோவா மகா பெரிய இடிமுழக்கங்களைப் பெலிஸ்தர்கள்மேல் அந்த நாளிலே முழங்கச்செய்து, அவர்களைக் கலங்கடித்ததால், அவர்கள் இஸ்ரவேலுக்கு முன்பாக தோற்கடிக்கப்பட்டு மடிந்தார்கள்.
11 Niakatse i Mitspè o ana’ Israeleo nañoridañe o nte-Pilistio vaho linafa’ iereo mb’ am-para’ i Bete-kare añe.
௧௧அப்பொழுது இஸ்ரவேலர்கள் மிஸ்பாவிலிருந்து பெலிஸ்தர்களைப் பின்தொடர்ந்துபோய், பெத்காரீம் பள்ளத்தாக்குவரை அவர்களை முறியடித்தார்கள்.
12 Nandrambe vato amy zao t’i Samoele le natroa’e añivo’ i Mitspè naho i Sene eo vaho natao’e Ebene ha’izere, ami’ty hoe: Efets’eo ty nañolora’ Iehovà antika.
௧௨அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, இதுவரை யெகோவா எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பெயரிட்டான்.
13 Aa le nianjiñe o nte-Pilistio, naho tsy nomb’ an-tane’ Israele mb’eo ka; vaho niatreatre o nte-Pilistio amo hene andro’ i Samoeleo ty fità’ Iehovà;
௧௩இப்படியாக பெலிஸ்தர்கள் அப்புறம் இஸ்ரவேலின் எல்லையிலே வராதபடித் தாழ்த்தப்பட்டார்கள்; சாமுவேலின் நாளெல்லாம் யெகோவாவுடைய கை பெலிஸ்தர்களுக்கு எதிராக இருந்தது.
14 Nampoly amy Israele o rova iaby tinava’ o nte-Pilistio am’Israeleo; boak’ Ekrone pake Gate; le navotso’ Israele am-pità’ o nte-Pilistio o tane’eo. Niharo rehak’ am’ Israele ka o nte-Amoreo.
௧௪பெலிஸ்தர்கள் இஸ்ரவேல் கையிலிருந்து பிடித்திருந்த எக்ரோன் துவங்கிக் காத்வரை உள்ள பட்டணங்களும் இஸ்ரவேலுக்குத் திரும்பக் கிடைத்தது; அவைகளையும் அவைகளின் எல்லைகளையும் இஸ்ரவேலர்கள் பெலிஸ்தர்கள் கையில் இல்லாதபடி, திருப்பிக்கொண்டார்கள்; இஸ்ரவேலுக்கும் எமோரியர்களுக்கும் சமாதானம் உண்டாயிருந்தது.
15 Nizakae’ i Samoele amo hene andro’eo t’Israele.
௧௫சாமுவேல் உயிரோடிருந்த நாளெல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தான்.
16 Nitolom-piary mb’e Betele naho mb’e Gilgale vaho mb’e Mitspè mb’eo re boa-taom-boa-taoñe; le hene nizakae’e amy toetse rey t’Israele.
௧௬அவன் ஒவ்வொரு வருடமும் புறப்பட்டு, பெத்தேலையும் கில்காலையும் மிஸ்பாவையும் சுற்றிப்போய், அந்த இடங்களில் எல்லாம் இஸ்ரவேலை நியாயம் விசாரித்தப்பின்பு,
17 I Ramà ty fiolia’e, amy te tao i anjomba’ey; nizaka Israele ao re vaho naore’e eo ty kitreli’ Iehovà.
௧௭அவன் ராமாவுக்குத் திரும்பிவருவான், அவனுடைய வீடு அங்கே இருந்தது; அங்கே இஸ்ரவேலை நியாயம் விசாரித்து, அவ்விடத்தில் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.

< 1 Samoela 7 >