< 1 Samoela 30 >
1 Ie pok’e Tsiklage t’i Davide naho o mpiama’eo te herone le nizoe’e te tiname o nte Amalekeo i Atimoy naho i Tsiklage, toe rinotsa’ iareo ty Tsiklage vaho finorototo’e añ’afo.
௧தாவீதும் அவனுடைய மனிதர்களும் மூன்றாம் நாளிலே, சிக்லாகுக்கு வந்து சேருவதற்குள்ளே, அமலேக்கியர்கள் தென்புறத்துச் சீமையின்மேலும் சிக்லாகின்மேலும் விழுந்து, சிக்லாகைக் கொள்ளையடித்து, அதை அக்கினியால் சுட்டெரித்து,
2 Fonga rinambe’ iereo o ampela nizoeñeo, ty tora’e pak’ami’ ty bey; tsy vinono’ iareo fa nendese’ iareo amy lia’ iareoy.
௨அதிலிருந்த பெண்களையும், சிறியவர்களையும் பெரியவர்களையும் சிறைபிடித்து, ஒருவரையும் கொன்றுபோடாமல், அவர்களைப் பிடித்துக்கொண்டு, தங்களுடைய வழியே போய்விட்டார்கள்.
3 Aa ie pok’ an-drova’e ao t’i Davide naho ondati’eo, hehe t’ie tineno’ ty afo, le fa hene nasese an-drohy o vali’eo naho o ana-dahi’eo vaho o anak’ ampela’eo.
௩தாவீதும் அவனுடைய மனிதர்களும் அந்தப் பட்டணத்திற்கு வந்தபோது, இதோ, அது அக்கினியினால் சுட்டெரிக்கப்பட்டது என்றும், தங்களுடைய மனைவிகளும் தங்களுடைய மகன்களும் தங்களுடைய மகள்களும் சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள் என்றும் கண்டார்கள்.
4 Nampipoñake ty rovetse amy zao t’i Davide naho o mpiama’eo, ampara’ te nidrifi’ i harovetsey ty fiai’e.
௪அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த மக்களும் அழுகிறதற்குத் தங்களில் பெலனில்லாமல் போகும் வரை சத்தமிட்டு அழுதார்கள்.
5 Tinavañe am-pandrohizañe añe ty vali’ i Davide roe, i Akinoame nte Iezreele naho i Abigale nte Karmele, nivali’ i Nabaley.
௫தாவீதின் இரண்டு மனைவிகளாகிய யெஸ்ரயேல் ஊராளான அகினோவாமும், கர்மேல் ஊராளான நாபாலின் மனைவியாக இருந்த அபிகாயிலும், சிறைபிடித்துக்கொண்டுபோகப்பட்டார்கள்.
6 Niampoheke t’i Davide kanao ho nametsa-bato ama’e ondatio ty amy hafain’ arofo’ iareo amo ana-dahi’eo naho o anak’ ampela’eo, fe nañosi-batañe am’ Iehovà Andrianañahare’e t’i Davide.
௬தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; எல்லா மக்களும் தங்கள் மகன்கள், மகள்களினிமித்தம் மனவருத்தமானதால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன்னுடைய தேவனாகிய யெகோவாவுக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.
7 Le hoe t’i Davide amy Abiatare mpisoroñe, Ehe, endeso atoy i kitambey. Le nendese’ i Abiatare mb’amy Davide mb’eo i kitambey.
௭தாவீது அகிமெலேக்கின் மகனான அபியத்தார் என்னும் ஆசாரியனை நோக்கி: ஏபோத்தை என்னிடத்தில் கொண்டுவா என்றான்; அபியத்தார் ஏபோத்தைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்தான்.
8 Nañontane ty hoe am’ Iehovà t’i Davide: Ho horidañeko hao i mpirai-lia zay, hiambotrahako? Le hoe ty natoi’e: Horidaño fa tsi-mete tsy ho tra’o, vaho tsi-mahay tsy ho haha’o iaby.
௮தாவீது யெகோவாவை நோக்கி: நான் அந்தப் படையைப் பின்தொடரவேண்டுமா? அதைப் பிடிப்பேனா? என்று கேட்டான். அதற்கு அவர்: அதைப் பின்தொடர்ந்து போ; அதை நீ பிடித்து, எல்லாவற்றையும் திருப்பிக்கொள்வாய் என்றார்.
9 Aa le nionjomb’eo t’i Davide rekets’ indaty enen-jato mpiama’e rey, naho nimb’an-torahañe Besore mb’eo vaho nitofa eo ty ila’e.
௯அப்பொழுது தாவீதும் அவனோடு இருந்த 600 பேரும் போனார்கள்; அவர்கள் பேசோர் ஆற்றின் அருகில் வந்தபோது அங்கே சிலர் நின்றுபோனார்கள்.
10 Fe nañoridam-b’eo t’i Davide reketse ty lahilahy efa-jato; le nidoñe eo ty roan-jato amy t’ie loho nidazidazìtse tsy nahafitsake i torahañe Besorey.
௧0தாவீதோ, 400 பேரோடுத் தொடர்ந்து போனான்; 200 பேர் களைத்துப்போனபடியால் பேசோர் ஆற்றைக் கடக்கமுடியாமல் நின்றுபோனார்கள்.
11 Tendrek’ am’ iereo an-kivoke ey t’i nte-Mitsraime, le nasese amy Davide naho nanjotsoañe mofo hikama’e naho rano hinoma’e
௧௧ஒரு எகிப்தியனை வெளியில் அவர்கள் கண்டு, அவனைத் தாவீதினிடத்தில் கொண்டுவந்து, சாப்பிட அவனுக்கு அப்பமும் குடிக்கத் தண்ணீரும் கொடுத்து,
12 vaho nanjotsoa’ iareo garaton-tsakoa naho valoboke angaroza’e maike roe; aa ie nikama, nimpoly ama’e ty fiai’e, fa telo andro, telo haleñe re tsy nikama mofo ndra ninon-drano.
௧௨அத்திப்பழ அடையின் ஒரு துண்டையும், உலர்ந்த இரண்டு திராட்சைப்பழக் குலைகளையும் அவனுக்குக் கொடுத்தார்கள்; அதை அவன் சாப்பிட்டபின்பு, அவனுடைய உயிர் திரும்ப அவனுக்குள் வந்தது. அவன் இரவு பகல் மூன்று நாளாக அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் இருந்தான்.
13 Le hoe t’i Davide ama’e: An’ia irehe? vaho boak’ aia? Le hoe re: Ajalahy nte-Mitsraime iraho, mpitoro’ ty nte-Amaleke, le nado’ i talèkoy amy t’ie natindry telo andro.
௧௩தாவீது அவனை நோக்கி: நீ யாருடையவன்? நீ எந்த இடத்தை சேர்ந்தவன் என்று கேட்டதற்கு, அவன்: நான் ஒரு அமலேக்கியனுடைய வேலைக்காரனாகிய எகிப்து தேசத்துப் வாலிபன்; மூன்று நாளைக்குமுன்பு நான் வியாதிப்பட்டபோது, என்னுடைய எஜமான் என்னைக் கைவிட்டான்.
14 Nitamea’ay i Atimo’ o nte-Kereteoy, naho amy fanaña’ Iehoday naho amy Atimo’ i Kalebe vaho finorototo’ay añ’ afo ty Tsiklage.
௧௪நாங்கள் கிரேத்தியருடைய தென்புறத்தின்மேலும், யூதாவைச்சார்ந்த எல்லையின்மேலும், காலேபுடைய தென்புறத்தின்மேலும், படையெடுத்துப்போய் சிக்லாகை அக்கினியினால் சுட்டெரித்துப் போட்டோம் என்றான்.
15 Le hoe t’i Davide ama’e: Mete hinday ahy mb’amy lia-raike zay v’iheo? Le hoe re: Mifantà amako aman’ Añahare te tsy hañohofa’o loza, ndra hanolotse ahy am-pitàn-talèko, le ampanjotsoeko mb’ amy mpirai-liay mb’eo.
௧௫தாவீது அவனை பார்த்து: நீ என்னை அந்த படையினிடத்திற்குக் கொண்டுபோவாயா என்று கேட்டதற்கு: அவன், நீர் என்னைக் கொன்றுபோடுவதுமில்லை, என்னை என்னுடைய எஜமான் கையில் ஒப்புக்கொடுப்பதுமில்லை என்று தேவன்மேல் ஆணையிடுவீரானால், உம்மை அந்தத் படையினிடத்திற்குக் கூட்டிக்கொண்டுபோவேன் என்றான்.
16 Aa ie nampizotsoe’e mb’eo heheke t’ie niparaitake mb’ eo mb’eo an-tane ey, nifànjotse naho nitohoke an-tsabadidake, ty amy fikopaham-bey nitavane’ iereo an-tane’ o nte-Pilistioy, naho an-tane Iehoday.
௧௬இவன் அவனைக் கொண்டுபோய்விட்டபோது, இதோ, அவர்கள் வெளியெங்கும் பரவி, சாப்பிட்டுக் குடித்து, தாங்கள் பெலிஸ்தர்கள் தேசத்திலும் யூதாதேசத்திலும் கொள்ளையிட்டு வந்த மகா பெரிதான அந்த எல்லாக் கொள்ளைக்காகவும் ஆடிப்பாடிக்கொண்டிருந்தார்கள்.
17 Linafa’ i Davide amy palipalitsieñey pak’ami’ty hariva’ i loak’ àndroy iereo; tsy teo ty nipoliotse am’ iereo naho tsy ty ajalahy efa-jato nijoñe an-drameva vaho nivoratsak’ añe.
௧௭அவர்களைத் தாவீது அன்று மாலைதொடங்கி மறுநாள் மாலை வரை முறியடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன 400 வாலிபர்கள் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.
18 Rinomba’ i Davide o nipaoha’ o nte-Amalekeo iabio; vaho hinaha’ i Davide i vali’e roe rey.
௧௮அமலேக்கியர்கள் பிடித்துக்கொண்டுபோன எல்லாவற்றையும், தன்னுடைய இரண்டு மனைவிகளையும், தாவீது விடுவித்தான்.
19 Tsy eo ty nipok’ ama’e, ndra ty kede ndra ty bey, ndra ana-dahy ndra anak’ ampela; ndra vara ndra inoñ’ inoñe nitavaneñe am’ iereo; niazo’ i Davide iaby.
௧௯அவர்கள் கொள்ளையடித்துக்கொண்டுபோன எல்லாவற்றிலும், சிறியதிலும், பெரியதிலும், மகன்களிலும், மகள்களிலும், ஒன்றும் குறையாமல் எல்லாவற்றையும் தாவீது திருப்பிக்கொண்டான்.
20 Hene nendese’ i Davide o mpirai-lia naho mpiharo-trokeo, le niroahe’ iareo aolo o añombe ila’eo, le hoe ty saontsy: Fikopaha’ i Davide.
௨0எல்லா ஆடுமாடுகளையும் தாவீது பிடித்துக்கொண்டான்; அவைகளைத் தங்கள் மிருகஜீவன்களுக்கு முன்னாலே ஓட்டி, இது தாவீதின் கொள்ளை என்றார்கள்.
21 Nivotrak’ amy lahilahy roan-jato nimamake tsy nahafañorike i Davide rey t’i Davide, i nampitofàñe an-toraha’ i Besore rey; nionjomb’ amy Davide mb’eo iereo hifanalaka ama’e, naho hifañaoñe am’ ondaty nindre ama’eo; le ie nifanotok’ am’ondatio t’i Davide le nañontanea’e.
௨௧களைத்துப்போனதால் தாவீதுக்குப் பின்னே செல்லாமல், பேசோர் ஆற்றண்டையிலே தங்கியிருந்த 200 பேரிடம் தாவீது வருகிறபோது, இவர்கள் தாவீதுக்கும் அவனோடிருந்த மக்களிடத்திற்கும் எதிர்கொண்டு வந்தார்கள்; தாவீது அந்த மக்களிடத்தில் சேர்ந்து, அவர்கள் சுகசெய்தியை விசாரித்தான்.
22 Le hoe ty enta’ ondaty tsivokatse naho rati-tserek’ amo mpiamy Davideo: Kanao tsy nindre aman-tika, tsy handiva’ay ndra kede amo vara kinopake rinomba’aio, naho tsy ty vali’ ondaty naho o keleia’eo, hiaoloa’ iereo mb’eo.
௨௨அப்பொழுது தாவீதோடு நடந்து வந்த மனிதர்களில் துன்மார்க்கர்களும், பயனற்ற மக்களுமான எல்லோரும்: அவர்கள் எங்களோடே வராதபடியால் நாங்கள் திருப்பிக்கொண்ட கொள்ளையுடமைகளில் அவர்களுக்கு ஒன்றும் கொடுப்பதில்லை; அவர்களில் ஒவ்வொருவனும் தன்தன் மனைவியையும் தன்தன் பிள்ளைகளையுமே அழைத்துக்கொண்டு போகட்டும் என்றார்கள்.
23 Le hoe t’i Davide, Ko manao zao ry longoko, amo nanolora’ Iehovà antikañeo, ie nañaro antikañe, vaho nanolotse i lia-raike naname antikañey am-pitàn-tika.
௨௩அதற்குத் தாவீது: என்னுடைய சகோதரர்களே, யெகோவா நமக்கு கொடுத்ததை நீங்கள் இப்படிச் செய்யவேண்டாம்; யெகோவா நம்மைக் காப்பாற்றி, நமக்கு விரோதமாக வந்திருந்த அந்தப் படையை நம்முடைய கையில் ஒப்புக்கொடுத்தார்.
24 Ia ty hañaoñe anahareo amo raha zao? Fa ho mira ami’ty anjara’ i nizotso mb’añ’aly mb’eoy ty anjara’ i nitambatse amy kilankañeiy; hifanjara mira iereo.
௨௪இந்தக் காரியத்தில் உங்கள் சொல் கேட்க யார் சம்மதிப்பான்? யுத்தத்திற்குப் போனவர்களின் பங்கு எவ்வளவோ, அந்த அளவில் பொருட்களின் அருகே இருந்தவர்களுக்கும் பங்கு கிடைக்கவேண்டும்; சரிபங்காகப் பங்கிடுவார்களாக என்றான்.
25 Izay ty ie mifototse amy andro zay le nanoe’e fañè naho fepètse e Israele ao ampara’ te henane.
௨௫அப்படியே அந்தநாள்முதல் நடந்து வருகிறது; அதை இஸ்ரவேலிலே இந்த நாள் வரைக்கும் இருக்கும் கட்டளையும் ஆணையுமாக ஏற்படுத்தினான்.
26 Aa ie pok’e Tsiklage ao t’i Davide, nampañitrife’e amo roandria’ Iehodao naho amo rañe’eo ty ila’ i varay ami’ty hoe: Ravoravo ho anahareo ami’ty nikopaheñe amo rafelahi’ Iehovào;
௨௬தாவீது சிக்லாகுக்கு வந்தபோது, அவன் கொள்ளையடித்தவைகளிலே தன்னுடைய நண்பர்களாகிய யூதாவின் மூப்பர்களுக்குச் சிலவற்றை அனுப்பி: இதோ, யெகோவாவுடைய எதிரிகளின் கொள்ளையில் உங்களுக்கு உண்டாயிருக்கும் ஆசீர்வாதபாகம் என்று சொல்லச் சொன்னான்.
27 naho amo am-Beteleo naho o an-dRamote Atimoo naho o am-Iatireo
௨௭யார் யாருக்கு அனுப்பினான் என்றால், பெத்தேலில் இருக்கிறவர்களுக்கும், தெற்கான ராமோத்தில் இருக்கிறவர்களுக்கும், யாத்தீரில் இருக்கிறவர்களுக்கும்,
28 naho o an’Aroereo naho o an-tSipmoteo naho o an’Estemoao
௨௮ஆரோவேரில் இருக்கிறவர்களுக்கும், சிப்மோத்தில் இருக்கிறவர்களுக்கும், எஸ்தேமோகாவில் இருக்கிறவர்களுக்கும்,
29 naho o an-dRakaleo naho o an-drova’ o nte-Ieakmeeleo naho o androva’ o nte-Kaineoo
௨௯ராக்காலில் இருக்கிறவர்களுக்கும், யெராமியேலியர்களின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும், கேனியர்களின் பட்டணங்களில் இருக்கிறவர்களுக்கும்,
30 naho o an-Kormao naho o an-Korasaneo naho o nte-Atakeo
௩0ஓர்மாவில் இருக்கிறவர்களுக்கும், கொராசானில் இருக்கிறவர்களுக்கும், ஆற்றாகில் இருக்கிறவர்களுக்கும்,
31 naho o nte-Kebroneo vaho o an-kene toetse fomba’ i Davide naho ondati’eo.
௩௧எப்ரோனில் இருக்கிறவர்களுக்கும், தாவீதும் அவனுடைய மனிதர்களும் நடமாடின எல்லா இடங்களில் இருக்கிறவர்களுக்கும் அனுப்பினான்.