< Psalmi 5 >

1 Dāvida dziesma. Dziedātāju vadonim uz stabulēm. Ak Kungs, klausies uz maniem vārdiem, ņem vērā manas domas.
புல்லாங்குழலில் வாசிக்க இசைக்குழுவின் தலைவனிடம் அளிக்கப்பட்ட தாவீதின் பாடல். யெகோவாவே, என்னுடைய வார்த்தைகளுக்குச் செவிகொடும், என்னுடைய தியானத்தைக் கவனியும்.
2 Samani manas kliegšanas balsi, mans ķēniņ un mans Dievs, jo es Tevi gribu pielūgt.
நான் உம்மையே நோக்கி விண்ணப்பம் செய்கிறேன்; என் இராஜாவே, என் தேவனே, என் வேண்டுதலின் சத்தத்தைக் கேட்டருளும்.
3 Rītos, ak Kungs, klausi manu balsi, rītos es uz Tevi gribu sataisīties un skatīties.
யெகோவாவே, காலையிலே என்னுடைய சத்தத்தைக் கேட்டருளுவீர்; காலையிலே உமக்கு நேராக வந்து ஆயத்தமாகி, காத்திருப்பேன்.
4 Jo Tu neesi tāds Dievs, kam bezdievība patīk; kas ir ļauns, tas pie Tevis nepaliek.
நீர் துன்மார்க்கத்தில் பிரியப்படுகிற தேவன் அல்ல; தீமை உம்மிடத்தில் சேர்வதில்லை.
5 Trakotāji nepastāvēs priekš Tavām acīm, Tu ienīsti visus ļauna darītājus.
வீம்புக்காரர்கள் உம்முடைய கண்களுக்கு முன்பாக நிலைநிற்கமாட்டார்கள்; அக்கிரமக்காரர்கள் யாவரையும் வெறுக்கிறீர்.
6 Tu nomaitā melkuļus, asins vainīgie un viltnieki Tam Kungam ir negantība.
பொய் பேசுகிறவர்களை அழிப்பீர்; கொலை வெறியர்களையும் வஞ்சகமான மனிதனையும் யெகோவா அருவருக்கிறார்.
7 Bet es iešu Tavā namā caur Tavu lielo žēlastību, es pielūgšu Tava svētuma mājoklī, Tevi bīdamies.
நானோ உமது மிகுந்த கிருபையினாலே உமது ஆலயத்திற்குள் நுழைந்து, உமது பரிசுத்த சந்நிதிக்கு நேரே பயபக்தியுடன் பணிந்துகொள்ளுவேன்.
8 Kungs, vadi mani pēc Savas taisnības, manu glūnētāju dēļ, dari līdzenu Savu ceļu manā priekšā.
யெகோவாவே, என்னுடைய எதிரிகளுக்காக என்னை உம்முடைய நீதியிலே நடத்தி, எனக்கு முன்பாக உம்முடைய வழியைச் செவ்வைப்படுத்தும்.
9 Jo viņu mutē nav nekādas patiesības, viņu sirdīs ir ļaunums, viņu rīkle ir atvērts kaps, ar savu mēli tie glauda.
அவர்கள் வாயில் உண்மை இல்லை, அவர்கள் உள்ளம் கேடுபாடுள்ளது; அவர்கள் தொண்டை திறக்கப்பட்ட கல்லறையாகும்; தங்களுடைய நாவினால் வஞ்சகம் பேசுகிறார்கள்.
10 Sodi tos, ak Dievs, lai tie krīt no saviem padomiem; atstum tos viņu lielos noziegumos, jo tie pret Tevi sacēlušies,
௧0தேவனே, அவர்களைக் குற்றவாளிகளாகத் தீர்த்திடும்; அவர்கள் தங்களுடைய ஆலோசனைகளாலேயே விழும்படி செய்திடும்; அவர்கள் துரோகங்களினுடைய தீவினைக்காக அவர்களைத் தள்ளிவிடும்; உமக்கு விரோதமாகக் கலகம்செய்தார்களே.
11 Bet lai priecājās visi, kas uz Tevi cerē, mūžīgi lai tie gavilē, jo Tu tos pasargi; lai līksmojās iekš Tevis, kas Tavu vārdu mīļo.
௧௧உம்மில் அடைக்கலம் நாடிவருவோர்கள் அனைவரும் மகிழ்ந்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்; உம்முடைய பெயரை நேசிக்கிறவர்கள் உம்மில் சந்தோஷப்படுவார்களாக.
12 Jo Tu, Kungs, svētīsi to taisno, un to pušķosi ar žēlastību kā ar bruņām.
௧௨யெகோவாவே, நீர் நீதிமானை ஆசீர்வதித்து, கருணை என்னும் கேடகத்தினால் அவனைச் சூழ்ந்து கொள்ளுவீர்.

< Psalmi 5 >