< Psalmi 19 >
1 Dāvida dziesma. Dziedātāju vadonim. Debesis izteic tā stiprā Dieva godu, un izplatījums pasludina Viņa roku darbu.
௧இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல். வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.
2 Diena dienai to liecina, un nakts naktij to dara zināmu.
௨பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.
3 Nav ne valodas ne runas, kur viņu balsi nedzird.
௩அவைகளுக்குப் பேச்சுமில்லை, வார்த்தையுமில்லை, அவைகளின் சத்தம் கேட்கப்படுவதுமில்லை.
4 Viņu skaņa iziet pa visu zemes virsu, un viņu valoda līdz pasaules galam. Viņš saulei telti tur darījis.
௪ஆகிலும் அவைகளின் சத்தம் பூமியெங்கும், அவைகளின் வசனங்கள் உலகின் கடைசிவரைக்கும் செல்லுகின்றன; அவைகளில் சூரியனுக்கு ஒரு கூடாரத்தை உண்டாக்கினார்.
5 Un tā iziet kā brūtgāns no sava kambara, un priecājās kā kāds varonis ceļu tecēt.
௫அது தன்னுடைய மணவறையிலிருந்து புறப்படுகிற மணவாளனைப்போல் இருக்கிறது, பெலசாலியைப்போல் தன்னுடைய பாதையில் ஓட மகிழ்ச்சியாக இருக்கிறது.
6 No viena debess gala viņa uzlec un tek apkārt līdz otram galam, un priekš viņas karstuma nekas nav apslēpts.
௬அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனைவரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் வெப்பத்திற்கு மறைவானது ஒன்றுமில்லை.
7 Tā Kunga bauslība ir pilnīga un atspirdzina dvēseli, Tā Kunga liecība ir patiesīga un dara neprātīgo gudru.
௭யெகோவாவுடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய சாட்சி முழுமையானதும், பேதையை ஞானியாக்குகிறதுமாக இருக்கிறது.
8 Tā Kunga pavēles ir taisnas un dara sirdi priecīgu, Tā Kunga bauslis ir šķīsts un apskaidro acis.
௮யெகோவாவுடைய நியாயங்கள் செம்மையும், இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறவைகளுமாக இருக்கிறது; யெகோவாவுடைய கற்பனை தூய்மையும், கண்களைத் தெளிவிக்கிறதுமாக இருக்கிறது.
9 Tā Kunga bijāšana ir šķīsta un pastāv mūžīgi, Tā Kunga tiesas ir patiesība un visas kopā taisnas.
௯யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும், என்றைக்கும் நிலைக்கிறதுமாக இருக்கிறது; யெகோவாவுடைய நியாயங்கள் உண்மையும், அவைகள் அனைத்தும் நீதியுமாக இருக்கின்றன.
10 Tās ir vairāk iekārojamas nekā zelts un daudz tīra zelta un, tās ir saldākas nekā medus un tīrs medus.
௧0அவை பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கவையும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தூய்மையான தேனிலும் மதுரமுள்ளவையுமாக இருக்கின்றன.
11 Arī tavs kalps caur tām top skaidri pamācīts, tam ir daudz algas, kas tās tur.
௧௧அன்றியும் அவைகளால் உமது அடியேன் எச்சரிக்கப்படுகிறேன்; அவைகளைக் கைக்கொள்ளுகிறதினால் மிகுந்த பலன் உண்டு.
12 Kas samana tās maldīšanās? Šķīsti mani no apslēptām vainām.
௧௨தன்னுடைய பிழைகளை உணருகிறவன் யார்? மறைந்து கிடக்கும் பிழைகளிலிருந்து என்னைச் சுத்திகரியும்.
13 Pasargi Savu kalpu arī no tīšiem grēkiem, ka tie nevalda pār mani; tad es būšu bezvainīgs un šķīsts no lielām pārkāpšanām.
௧௩துணிகரமான பாவங்களுக்கும் உமது அடியேனை விலக்கிக் காத்துகொள்ளும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள விடாமலிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாவத்திற்கு நீங்கலாக இருப்பேன்.
14 Lai Tev patīk manas mutes valoda un manas sirds domas Tavā priekšā, ak Kungs, mans patvērums un mans Pestītājs.
௧௪என் கன்மலையும் என் மீட்பருமாகிய யெகோவாவே, என் வாயின் வார்த்தைகளும், என் இருதயத்தின் தியானமும், உமது சமுகத்திற்குப் பிரியமாக இருப்பதாக.