< Psalmi 126 >
1 Svētku dziesma. Kad Tas Kungs atkal atveda Ciānas cietumniekus, tad mēs bijām tā kā kas sapņus redz;
௧ஆரோகண பாடல். சீயோனின் சிறையிருப்பைக் யெகோவா திருப்பி எருசலேமுக்கு கொண்டு வந்தபோது, கனவு காண்கிறவர்கள்போல் இருந்தோம்.
2 Tad mūsu mute bija pilna smiešanās un mūsu mēle pilna gavilēšanas; tad sacīja starp pagāniem: Tas Kungs lielas lietas pie šiem ir darījis.
௨அப்பொழுது நம்முடைய வாய் சிரிப்பினாலும், நம்முடைய நாவு ஆனந்தசத்தத்தினாலும் நிறைந்திருந்தது; அப்பொழுது: யெகோவா இவர்களுக்குப் பெரிய காரியங்களைச் செய்தார் என்று தேசங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள்.
3 Tas Kungs lielas lietas pie mums ir darījis, par to priecājamies.
௩யெகோவா நமக்குப் பெரிய காரியங்களைச் செய்தார்; இதற்காக நாம் மகிழ்ந்திருக்கிறோம்.
4 Ak Kungs, atved atpakaļ mūsu cietumniekus, kā upes dienvidu zemē!
௪யெகோவாவே, தெற்கத்திய வெள்ளங்களைத் திருப்புவதுபோல, எங்களுடைய சிறையிருப்பைத் திருப்பும்.
5 Kas ar asarām sēj, ar gavilēšanu pļaus;
௫கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்.
6 Tie aiziet un raud, dārgu sēklu nesdami, bet tiešām ar prieku tie atkal nāks un nesīs savus kūlīšus.
௬அள்ளித்தூவும் விதையைச் சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான்; ஆனாலும் தான் அறுத்த அரிகளைச் சுமந்துகொண்டு கெம்பீரத்தோடு திரும்பிவருவான்.