< Psalmi 125 >
1 Svētku dziesma. Kas uz To Kungu cerē, tie nešaubīsies, bet mūžīgi stāvēs, kā Ciānas kalns.
௧யெகோவாவை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் மலையைப்போல் இருப்பார்கள்.
2 Ap Jeruzālemi ir kalni, bet Tas Kungs ir ap Saviem ļaudīm no šī laika mūžīgi.
௨மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், யெகோவா இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
3 Jo bezdievības scepteris nepaliks pār taisno ļaužu mantas daļu, ka tie taisnie neizstiepj savas rokas pie netaisnības.
௩நீதிமான்கள் அநியாயத்திற்குத் தங்களுடைய கைகளை நீட்டாதபடிக்கு, துன்மார்க்கத்தின் கொடுங்கோல் நீதிமான்களுடைய சொத்தின்மேல் நிலைத்திருக்காது.
4 Kungs, dari labu labiem un tiem, kas savā sirdī skaidri.
௪யெகோவாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.
5 Bet kas nogriežas uz saviem līkiem ceļiem, tos Tas Kungs aizdzīs ar ļauna darītājiem; bet miers lai ir pār Israēli.
௫தங்களுடைய கோணலான வழிகளுக்குச் சாய்கிறவர்களைக் யெகோவா அக்கிரமக்காரர்களோடு போகச்செய்வார். இஸ்ரவேலுக்கோ சமாதானம் உண்டு.